ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ

This entry is part 24 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“தார் ரோட்டில்
வார் அறுந்து
தன்னை உணர்த்தியது
செருப்பு..! ”
—————————————————-

மலர்போல் தான்
சருகாகும்வரை
மனித வாழ்வும்..!
—————————————————–
“இதோ..சென்றுவிட்டேன்..
சொல்கிறது
நிமிடமுள்..! ”
—————————————————
“நன்மைகள்… உயர்ந்திட
ஊருக்குள்
கோபுரங்கள் ..!”
————————————————————
“ஆபத்து….எனக்கு….
பரீட்சை வைத்தேன்
நண்பனுக்கு..! ”
—————————————————————-
கடற்கரையில்
தாகத்தோடு
காதலர்கள்..!
—————————————————————.
இடியும்..மின்னலும்..
கோள்சொல்லியது –
மேகம்..!”
——————————————
“திருடர்களின்
ஒளிவிளக்கு
இரவு..! ‘
——————————————–
விரிந்த வானம்
விஷமமாய் சிரிக்குது
விரிசல் பூமி..!!”
————————————————
புத்தம் புதிய புத்தகம்
படிக்க வந்தது
வாழ்க்கைப் பாடம்..
குழந்தை..!
—————————————————–
“அவளின் புன்னகை
கரணம் போட்டது
குரங்குமனம்..!”
—————————————————–
“மலருக்கு மலர் சென்று..
நலம் விசாரிக்கும்
பொன்வண்டு…!”
——————————————————
“கடலுள் கரைந்தது
ஆலகாலம்..
வஞ்சக நெஞ்சம்..!”
————————————————————
“போட்டியிட
எவருமில்லை
நிம்மதியாய்..
தாமரைகுளம்..!”
———————————————————-
“தாமரைக்கு –
ஆறுதலாய்
தலைகோதும்..
குளத்தில் சந்திரன்..!”
————————————————————-
“வானமும் இல்லை..
பூமியும் இல்லை..
சிறகை விரித்த பறவை..! ”
————————————————————
“இலை உதிர்ந்த மரம்..
கூடுகட்ட…
காகமுமில்லை..
ஏழ்மை….!”
—————————————————————
“மனச்சுரங்கம்..
புதையலாய்..
கவிதைகள்..!”
==================================
குருட்டுப் பிச்சைக்காரன்
தட்டு நிறைய
சில்லறைகள்…
அதிகமாய் …
செல்லாக்காசு..!”
————————————————–
“உன் வேண்டாததும்
எனக்கு வேண்டியதும் –
ஒரே இடத்தில்
குப்பைத்தொட்டி..!”
——————————————————
இடம்கொடுக்கவில்லை
பிஞ்சுக் கரங்களில்
பிச்சையிடுவதா..?
மனிதாபிமானம்..!
———————————————————
“படித்துறை…
கனவுகளும்..
கண்ணீரும் ….
அலசுமிடம்..!”
———————————————————-

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

 1. Avatar
  பவள சங்கரி. says:

  அன்பின் ஜெயஸ்ரீ சங்கர்,

  காகத்தின் ஏழ்மையும், குருட்டுப் பிச்சைகாரனின் நிலையும், மனிதரின் வக்கிர புத்தியும், சிந்திக்க வைத்தவைகள்….. நல்ல தொகுப்பு.

  அன்புடன்

  பவள சங்கரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *