வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)

This entry is part 17 of 33 in the series 3 மார்ச் 2013

 

 

இரகசியங்கள் பொதிந்துள்ள மனத்தோர் மட்டுமே பொத்தி வைத்த நம் இரசியங்களையும் புனிதமாக்க இயலும்.

 

எவரொருவர் உமது துக்கங்களையன்றி, சுகங்களை மட்டுமே பகிருகிறாரோ அவர் சுவர்கத்தின் ஏழு வாயில்களின் ஒன்றின் திறவுகோலை இழந்தவராகிறார்..

 

ஆமாம் நிர்வாணம் என்ற ஒன்றுள்ளது.; உமது ஆடுகளை பசிய மேய்ச்சலில் ஓட்டிச்செல்லும் போதிலும், உம் குழந்தைகளை உறங்கச் செய்யும் தாலாட்டிலும், மற்றும் உமது கவிதையின் இறுதி வரிகளை அலங்கரிப்பதிலுமே இருக்கிறதந்த நிர்வாணம்..

 

நாம் அதை அனுபவிக்கும் வெகு காலத்திற்கு முன்பே நமது சுக துக்கங்களைத் தெரிவு செய்து விடுகிறோம் நாம்.

 

சோகம் என்பது இரு தோட்டங்களுக்கும் இடையிலானதோர் சுவர்.

 

உம்முடைய சுகமோ அல்லது துக்கமோ உயர்ந்து நிற்கும்போது அப்பெரும் புவனமே தாழ்ந்து போகிறது.

 

பெட்பு என்பது வாழ்வின் பாதி; அலட்சியம் என்பது இறவின் பாதி.

 

இன்றைய நம் சோகத்தின் மிகக் கைப்பானதொன்று என்றால் அது நம் நேற்றைய இன்பமே.

 

அவர்கள் எம்மிடம், “இப்புவியின் இன்பங்கள் மற்றும் அந்த மறு உலகின் அமைதிக்கும் இடையிலானதை தெரிவு செய்தாக வேண்டும் நீவிர்” என்றனர்.

மேலும் அவர்களிடம், “ இப்புவியின் இன்பங்கள் மற்றும் மேலுலகின் அமைதி என இரண்டையும் தெரிவு செய்தேன். காரணம் எம் மனதிலந்த மாபெருங்கவி யாத்த அக்கவியோ  தேடுதலோடு இசைக்கவும் செய்கிறது” என்றேன், யான்..

 

நம்பிக்கை என்பது சிந்தனைச் சாத்தினால் என்றுமே நெருங்க முடியாத  மனதினூடேயானதோர் பாலைவனச்சோலை

 

உமது உயரத்தை அடையும் தருணம் மேலும் நீவிர் அந்த இச்சைக்காக விருப்பம் கொள்வீர்; மற்றும் உணவு வேட்கைக்காகவே பசி கொள்வீர் நீவிர்; மற்றும் மேலும் பெரும் நீர்வேட்கைக்காக தாகம்  கொள்ளக்கூடும் நீவிர்.

 

அந்த வளியிடம் உம் இரகசியங்களைப் பகிரும்போது அதனை அது மரங்களிடம் பகிருதலால் அவ்வளியை  குறை சொல்லலாகாது, நீவிர்.

 

அந்த வசந்தகால மலர்களனைத்தும் அத்தேவதைகளின் காலை உணவு மேசையினுடன் சம்பந்தப்பட்ட கூதாளியின் சுவனங்கள்தாம்.

 

வெறுக்கத்தக்கார் ஒருவர் குழாய்  ரோசாவிடம், “உம்மால் நடக்கவோ அன்றி படரவோ இயலாத போது எத்துனை துரிதமாக ஓடுகிறேன் யான் கண்டீரா”, என்றதாம்

அந்த குழாய் ரோசாவோ, “ஓ, உன்னதமான துரித ஓட்டக்காரரே, தயைகூர்ந்து துரிதமாக ஓடுங்கள்!” என்றதாம் அந்த வெறுக்கத்தக்கோரிடம்.

 

சாலைகளைப் பற்றி முயல்களைவிட ஆமைகளே அதிகம் கூற இயலும்.

 

முதுகெலும்பற்ற அந்த உயிரினங்கள் உறுதியான கவாட்டிகளைக் கொண்டிருப்பது விநோதம்.

 

மிக அதிகம் பேசுபவர் குறைந்தபட்ச அறிவாளியாகவே இருப்பராயினும் சொற்பொழிவாளருக்கும், ஏலம் விடுவோருக்கும் உள்ளது பெரும் வேறுபாடு..

 

ஓர் தந்தையின் புகழ்பாடியோ அன்றி மாமனின் செல்வத்திலோ வாழ வேண்டிய தேவையில்லாமைக்கு நன்றியுடையவராய் இருப்பீராக.

 

ஆயினும் எவரொருவரும் தம்புகழ் பாடியோ அல்லது தம் செல்வத்தை நாடியோ பிழைப்பு நடத்தாமல் இருப்பதற்கும் நன்றியுடையவராக இருப்பீராக.

 

செப்பிடு வித்தைக்காரர் தம் பந்தைப் பிடிக்க தவறுகிறபோது மட்டுமே எம்மிடம் கருணை வேண்டுவார்.

 

அறியாமலே எம்மைப் பாராட்டுவர் அவ்வியம் கொண்டோர்.

 

உம் அன்னையின் நித்திரையில் நீண்ட சுவனம் கொண்டீர் நீவிர், மேலும் பின்னரே அவள் உம்மைப் பிரசவிப்பதற்காகவே விழிப்பு கொண்டாள்.

அந்த இனத்தின் துவக்கம் என்பது உமது தாயின் பெட்டலில் உளது.

 

எம் தாய் தந்தையர் தங்களுக்கு ஓர் குழவி வேண்டியதால் எம்மைப் பெற்றனர்.

மேலும் யானுமோர் தாய் தந்தையரை வேண்டியதால்  நிசையையும் மற்றுமந்த அம்புதியையும் பெற்றேன்..

 

நம்மின் சில குழந்தைகள் நம் ஓரச்சீராக்கம்

ஆயினும் மற்றும் சிலவோ நம் வேதனைகள்.

 

இருண்ட இரவின் தருணமதில் நீவிரும் கருமையாகி, விருப்புடன் அக்கருமையை ஏற்று சயனம் கொள்ளவும்.

 

மேலும் பொழுது புலரும் தருணம் நீவிர் மேலும் கருமையாகி எழுந்து நின்று அப்பகல் பொழுதிடம், “யான் இன்னும் கருமையாகத்தான் இருக்கிறேன்” என்று விருப்புடன் கூறுங்கள்.

நிசையோடும், பகலோடும் பங்கெடுப்பது அறிவீனம்.

அவைகளிரண்டும் உம்மைக் கண்டு நகைக்கலாம்.

 

தொடரும்

 

 

SAND AND FOAM – KHALIL GIBRAN (13)

 

Only those with secrets in their hearts could divine the secrets in our hearts.

 

He who would share your pleasure but not your pain shall lose the key to one of the seven gates of Paradise.

 

Yes, there is a Nirvanah; it is in leading your sheep to a green pasture, and in putting your child to sleep, and in writing the last line of your poem.

 

We choose our joys and our sorrows long before we experience them.

 

Sadness is but a wall between two gardens.

 

When either your joy or your sorrow becomes great the world becomes small.

 

Desire is half of life; indifference is half of death.

 

The bitterest thing in our today’s sorrow is the memory of our yesterday’s joy.

 

They say to me, “You must needs choose between the pleasures of this world and the peace of the next world.”

And I say to them, “I have chosen both the delights of this world and the peace of the next. For I know in my heart that the Supreme Poet wrote but one poem, and it scans perfectly, and it also rhymes perfectly.”

 

Faith is an oasis in the heart which will never be reached by the caravan of thinking.

 

When you reach your height you shall desire but only for desire; and you shall hunger, for hunger; and you shall thirst for greater thirst.

 

If you reveal your secrets to the wind you should not blame the wind for revealing them to the trees.

 

The flowers of spring are winter’s dreams related at the breakfast table of the angels.

 

Said a skunk to a tube-rose, “See how swiftly I run, while you cannot walk nor even creep.”

Said the tube-rose to the skunk, “Oh, most noble swift runner, please run swiftly!”

 

Turtles can tell more about roads than hares.

 

Strange that creatures without backbones have the hardest shells.

 

The most talkative is the least intelligent, and there is hardly a difference between an orator and an auctioneer.

 

Be grateful that you do not have to live down the renown of a father nor the wealth of an uncle.

But above all be grateful that no one will have to live down either your renown or your wealth.

 

Only when a juggler misses catching his ball does he appeal to me.

 

The envious praises me unknowingly.

 

Long were you a dream in your mother’s sleep, and then she woke to give you birth.

 

The germ of the race is in your mother’s longing.

 

My father and mother desired a child and they begot me.

And I wanted a mother and a father and I begot night and the sea.

 

Some of our children are our justifications and some are but our regrets.

 

When night comes and you too are dark, lie down and be dark with a will.

And when morning comes and you are still dark stand up and say to the day with a will, “I am still dark.”

It is stupid to play a role with the night and the day.

They would both laugh at you.

 

To Be Contd……

Series NavigationPAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013சுமை
author

பவள சங்கரி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *