பாரம்பரிய இரகசியம்

This entry is part 17 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013


டாக்டர் ஜி. ஜான்சன்

ஆங்கில முறை மருத்துவம் பயின்ற என்னைப் போன்ற பல மருத்துவர்கள் நாங்கள் கற்றது அறிவியல் பூர்வமானது என்று திடமாக நம்புகிறோம்.

இந்த முறை ஆய்வியல் அடிப்படையில் மேல்நாடுகளில் தோன்றி, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் நாம் நாடுகளில் கொண்டுவரப்பட்டது.

இந்த மேல்நாட்டு மருத்துவம் பயின்ற நாங்கள் இதர உள்நாட்டு மருத்துவ முறைகளின் மீது அவ்வளவு நம்பிக்கை கொள்வதில்லை. அவை அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு சரிவர உட்படுத்தப்படவில்லை என்ற காரணம் கூறி அவற்றை ஊக்குவிப்பதில்லை.

என்னுடைய நிலையும் அப்படிதான்…

நான் மருத்துவ பயிற்சி செய்தபோது மூன்று மாதங்கள் நகரி புத்தூரில் தங்கி ஒரு கிராம மருத்துவமனையில் வேலை செய்தேன்.

நுட வைத்தியத்தில் புகழ் பெற்ற ஊர் அது. நான் அது பற்றி ஆர்வம் இன்றி அங்கு சென்று பார்க்க வில்லை.

ஒரு அருமையான வாய்ப்பை இழந்து போனதாக பின்னர்தான் உணர்ந்தேன். எதையும் பார்த்து உணர்ந்த பின் நாம் ஒரு முடிவுக்கு வருவதே நல்லது என்பதை பின்னர் உணர்ந்தேன்.

அங்கிருந்து திருப்பதி , திருத்தணி கோவில்களுக்குகூட சென்று வந்தேன். ஆனால் அந்த நுட வைத்தியசாலைக்குச் செல்லவில்லை.

நுட சிகிச்சையில் அப்படி என்ன பிரமாதமாக செய்துவிடுகின்றனர் என்று எண்ணியிருந்தேன். எலும்பு முறிவுக்கு மருந்து வைத்து கட்டு போடுகின்றனர் . அது கூடிவிடுகிறது. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

கட்டு போடாவிட்டாலும் அது இயற்கையிலேயே கூடத்தான் போகிறது. ஆனால் கோணலாக கூடிவிடும்.இவ்வளவுதான் வித்தியாசம்!

மேலும் நுடவைத்தியம் செய்பவர்களுக்கு எக்ஸ் -ரே பற்றி தெரியாது. எம்.ஆர். ஐ. பற்றியும் தெரியாது. இவற்றின் உதவி இல்லாமல் கண்மூடித்தனமாக குலத் தொழில், பரம்பரையாகக் கற்றது என்று சொல்லிக்கொண்டு இவர்கள் தொழில் புரிவது நியாயமற்றது என்றும் எண்ணியது உண்மையே.

ஆனால் ஒரு சொந்த அனுபவத்திற்குப் பின்பு என் எண்ணங்கள் தாறுமாறானது.

ஒரு விபத்தில் என்னுடைய வலது காலில் பாதத்தின் மேல் பகுதியிலுள்ள நான்கு எலும்புகள் ( Metataarsal bones ) குறுக்கெ முறிந்துவிட்டன. உடன் கால் வீக்கமுற்று கடுமையாக வலித்தது.

நான் உடன் மதுரை சென்றேன். அங்கு பிரபல எலும்பு சிகிச்சை நிபுணரைப் பார்த்தேன். அவர் உடன் எக்ஸ் – ரே எடுத்துப் பார்த்தார். எலும்புகள் முறிந்துள்ளன என்று கூறினார். அதற்கு மாவு கட்டு ( plaster of Paris ) போட்டு மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என்று விடுப்பு தந்தார். அந்த கால கட்டத்தில் நடக்கக் கூடாது என்றார். நடந்தால் முறிந்த எலும்புகள் கூடாமல் போகலாம் என்றார்.

நான் வீடு திரும்பினேன்.

ஆனால் என்னால் ஒரு நாளுக்குமேல் தாக்கு பிடிக்க முடியவில்லை. கட்டு போட்டுள்ள இடத்தில் பயங்கர அரிப்பு ! காலை உயரத்த்தில் தூக்கி வைத்துக் கொண்டு நாள் முழுதும் படுத்திருக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தடுமாறினேன்.

அப்போது எங்கள் ஃபிஸியோதேராபிஸ்ட் ( physiotherapist ) டேணியேல் ஒரு யோசனை கூறினார் .

” டாக்டர், நான் சொல்கிறேன் என்று தப்பாக எண்ணாதீர்கள். நானும் இந்த பீ ஓ பீ போடும் வேலைதான் செய்கிறேன். இதை போட்டுக்கொண்டு ஒரு மாசம் சிரமப்படணும் . உங்களுக்கு வேறு அலர்ஜி. ” என்றார் பீடிகையுடன்.

” சொல்லுங்க . என்ன செய்யலாம் ? ” என்று கேட்டேன்.

” எனக்கு குன்னக்குடி நுட வைத்தியர் நல்ல பழக்கம். அவர் ஒரு எண்ணைய்ப் போட்டு கட்டுவார். வலியும் இருக்காது. வீககமும் குறைந்துவிடும். நீங்கள் சரியென்றால் அவரை காரில் இப்போதே அழைத்து வருகிறேன் . ” என்றார்.

அப்போது இருந்த அவஸ்தையில் நான் வேறு எது பற்றியும் எண்ணவில்லை.

பங்களா வெளியில் காவலுக்கு நின்றிருந்த சாமுவேல் மூலமாக லட்சுமனனை அழைத்து வரச் சொன்னேன். அவன் மருத்துவமனை அம்பாசிடர் காரை ஓட்டுபவன். அவன் கொண்டு வந்த காரில் டேனியேல் ஏறிச் சென்றார்.

ஒரு மணி நேரத்தில் வைத்தியர் வந்துவிட்டார்.

நலம் விசாரித்துக்கொண்டோம்.

நான் நடந்ததைக் கூறினேன்.

அவர் கட்டை பிரிக்கணும் என்றார்.

நான் தயங்கினேன். மூன்று வாரம் கட்டு இருக்கணும் என்பது எலும்பு சிகிச்சை நிபுணரின் உத்தரவு.

” அதெல்லாம் ஒன்றுமில்லை டாக்டர். இந்த கட்டை பிரித்து விடுவோம். ” என்று தைரியம் கூறினார்.

நான் சரி என்று சொன்னதும் அந்த மாவுக் கட்டு வெட்டி அகற்றப்பட்டது.

அடி பட்டு வீங்கியுள்ள கால் பகுதியை தடவியும் அழுத்தியும் பார்த்தார்.

” எலும்புகள் முறிந்துள்ளன. அதனால் இரத்தக் கட்டு உள்ளது. நான் எங்களுடைய மருந்து வைத்து கட்டு போடுறேன். ஒரு வாரத்தில் சரியாகிவிடும் , ” இவ்வாறு அவர் சொன்னது கேட்டு வியந்து போனேன். ஒரு வாரத்தில் உடைந்துப்போன எலும்புகள் எவ்வாறு கூடும் என்பது என் சந்தேகம்.

அவர் மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கூறியது எனக்கு வியப்பையூட்டியது.

” ஒரு நாலு முழ வேட்டிவேண்டும் .” என்றார்.

நான் அதை வாங்கி வர லெட்சுமணனிடம் கூறினேன்.

அவன் விரைத்து சென்று திரும்பினான்.

வேட்டியை அவர் நீண்ட தூண்டுகளாகக் கிழித்தார்.

தன்னுடன் கொண்டு வந்திருந்த ஒரு டப்பாவிலிருந்து குழகுழவென்றிருந்த களிம்பை எடுத்து காலில் தடவினர். அதன்மேல் கிழிக்கப்பட்ட வேட்டி துண்டால் சுற்றினார்.

அப்பகுதி மதமதவென்றிருந்தது. காலுக்குள் ஏதோ ஒன்று இழுப்பது போன்ற உணர்வும் உண்டாக்கியது.

அதன்பிறகு அவர் சொன்னது என்னை மேலும் வியப்பில் ஆழ்த்தியது.

” எழுந்திருந்து நன்றாக காலை ஊன்றி நடங்கள். ” என்றார்.

எலும்பு சிகிச்சை நிபுணர் இரண்டு வாரங்கள் நடக்கக் கூடாது என்று கூறியிருந்தார். இந்த நுட வைத்தியர் ஒரு நாளில் நடக்கலாம் என்கிறாரே!

” டாக்டர். பயப்படாமல் ஊன்றி நடங்கள். அப்போதுதான் எலும்பு செட் ஆகும் . நான் மருந்து போட்டுள்ளேன். வலி இருக்காது. ” என்று தைரியமூட்டினார்.

நடந்தால் அசைவு உண்டாகி உடைந்த எலும்புகள் மேலும் விலகும். அசைவு எலும்புகள் கூடுவதை தடை பண்ணும். குணமாகும் நாட்களும் நீடிக்கும். இவையெல்லாம் எனக்கு தெரியும்தான். ஆனால் இவர் சொல்வதுபோல்தான் செய்து பார்ப்போமே என்று எழுந்தேன்.

மெல்ல காலடி வைத்து நடந்தேன்.

எனக்கு ஒரே ஆச்சரியம்!

வலி தெரியவில்லை!

சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விட்டேன்!

வீட்டுக்குள் நடந்தால் போதும் , வெளியே போகவேண்டாம் என்று கூறிவிட்டு விடை பெற்றார். நான் நூறு ரூபாய் நீட்டினேன். அதை வாங்க மறுத்துவிட்டார்.

இரண்டு நாளில் மீண்டும் வந்தார்.

கட்டைப் பிரித்தார். வேட்டித் துணி உலர்ந்திருந்தது. கால் வீக்கம் வற்றியிருந்தது. மீண்டும் களிம்பு மருந்து பூசி துணியால் சுற்றி கட்டு போட்டார்.

இது போன்று மூன்று முறை வந்து கட்டு போட்டார். வீககமும் வலியும் முற்றிலுமாக குணமாகி விட்டது. அதன் பின்பு தடவுவதற்கு களிம்பு மட்டும் தந்தார். அதன் பெயர் மயில் கால் எண்ணை

அவரும் என் நண்பராகிவிட்டார்.

அப்போது குன்றக்குடி அடிகளார் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவரைக் காண மடத்திற்குச் செல்லும் போதெல்லாம் , நுட வைத்தியசாலையும் சென்று அவரைப் பார்த்து வந்தேன். அவரிடம் நிறைய பேர்கள் மயில் கால் எண்ணை வாங்க வருவது கண்டேன்.

அது பற்றி அவரிடம் கேட்டேன். அது எதிலிருந்து செய்யப்படுகிறது என்று கேட்டேன்.

” அது எங்கள் குடும்ப பாரம்பரிய இரகசியம். அதை வெளியில் சொன்னால் பலிக்காது. நீங்கள் நண்பர் என்பதாலும், ஒரு மருத்துவ்ர் என்பதாலும் சொல்கிறேன். அதில் மூன்று பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. மயில் கால்களை கொதிக்க வைத்து அதன் சாறு எடுத்து நல்ல பாம்பின் இரத்தம் கலந்து ஒரு மூலிகையுடன் சேர்த்து செய்யப் படுகிறது. ” அந்த மூலிகையின் பெயரை அவர் கூறவில்லை.

” அது என்ன மூலிகை? ” நான் வேண்டுமென்றே கேட்டு பார்த்தேன்.

” மன்னிக்கணும் .” ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்!

( முடிந்தது )

Series Navigationமருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்குபூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

50 Comments

 1. Avatar
  N Sivakumar, New Delhi says:

  நல்ல பதிவு டாக்டர்! ஊருக்கு சென்று வந்தேன் பழைய பதிவுகளை படிக்கவில்லை, தங்கள் பதிவுகளை நான் தவற விடுவதில்லை… விரைவில் படித்து கருத்துகளை பதிகின்றேன். நன்றி!!

 2. Avatar
  Dr.G.Johnson says:

  எனது எழுத்துககளை தொடர்ந்து படித்துவரும் தங்களுக்கு நன்றி திரு N. சிவகுமார் அவர்களே.

 3. Avatar
  Noel Nadesan says:

  It is good to read .thank you
  I can reflect when I was young I fell in well with out much water and broken my back. In Jaffna 4 weeks pukkai and 2 weeks oil massage fixed back injury (Pukkai – rice and herbs cooked together)

 4. Avatar
  பவள சங்கரி says:

  அன்பின் மரு. ஜான்சன் அவர்களுக்கு,

  மிகச் சுவையான தகவல்கள். தாங்கள் சொல்கிற நுட சிகிச்சை முறை இன்றும் இருக்கிறதா? தெரிந்து கொள்ள ஆவல்.

  அன்புடன்
  பவள சங்கரி

 5. Avatar
  தி.தா.நாராயணன் says:

  இப்படிப்பட்ட தகவல் ஒரு டாக்டரால் சொல்லப்படும்போது கூடுதல் மதிப்பு பெறுகிறது.இப்படி ரகசியம்..ரகசியம் என்று மறைத்தே பல வைத்திய முறைகள் காலத்தால் அழிந்து போகின்றன என்பது வேதனையான உண்மைகள்.தொடர வாழ்த்தும்.

 6. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள பவள சங்கரி, நுட சிகிச்சை முறை இன்னும் உள்ளது..நான் கூறியுள்ள குன்றக்குடியில் அது சிறப்பாக செயல் படுகிறது. ஆனால் இதை ஆய்வுக்கு உட்படுத்தி அறிவியல் பூர்வமாக உலகுக்கு கூறாதது பெரும் குறைதான். பாராட்டுக்கு நன்றி…டாக்டர் ஜி. ஜான்சன்.

 7. Avatar
  புனைப்பெயரில் says:

  அருமை. பஷ்கி கிளிக்கில் மூலம் சம்பந்தமான வியாதிகளுக்கு , மயக்க மருந்து , பெட் இல்லாமலேயே நல் சிகிச்சைத் தருகிறார்கள். அதில் எம் பி பி எஸ் படித்த டாக்டர் சிலரும் இருக்கிறார்கள். நுட சிகிச்சை பற்றி அய்யா திரு.ஜான்சன் இன்னும் எழுதலாம்.

 8. Avatar
  பொன்.முத்துக்குமார் says:

  நல்ல பதிவு. பெரும்பாலும் அலோபதி மருத்துவர்கள் மாற்று மருத்துவ முறைகளை ஒப்புக்கொள்வதில்லை என்பதுதான் என் எண்ணமும். அப்படிப்பட்ட அலோபதி மருத்துவர் ஒருவராலேயே பாராட்டப்படும்போது இந்த மாற்று மருத்துவ முறை மீது மதிப்பு வருகிறது.

  அதே வேளையில் அந்த ஒப்புக்கொள்ளாமைக்கு தகுந்த காரணமும் உண்டு. அலோபதி மருத்துவ முறை உள்ளாகும் அதி தீவிர பரிசோதனை முறை, மருந்துகள் தீவிர ஆராய்சிக்குப்பின் உள்ளாகும் பலசுற்று சோதனை முறைகள் (clinical trials) போன்றவை மாற்றுமருத்துவ முறைகளில் இல்லை என்பது அதில் ஒரு முக்கிய காரணம். மேலும் தலைமுறைகளாக கை மாற்றப்படும் அதே முறை கால மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் இன்னபிற புறச்சூழல் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறதா என்பதும் கேள்விக்குறியே.

  மாற்று மருத்துவ முறைகள் மற்றும் மருந்துகள் மீது தீவிர அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியும் தரக்கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டால் அலோபதிக்கு மாற்று என்றில்லாமல் இரு முறைகளும் ஒன்றை ஒன்று நிரப்புவதாக (complementary to each other) இருத்தல் மனித சமூகத்துக்கு நிரம்ப பலன் அளிப்பதாக இருக்கும்.

 9. Avatar
  Jayaprakash B says:

  Good article Dr. Very simplistic way of your writing and After reading few of your postings, I became your fan. Keep the good work. May GOD bless you.

 10. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள திரு புனை பெயரில் அவர்களுக்கு வணக்கம். நீங்கள் கூறியுள்ளது உண்மையே. மூலத்துக்கு அதுபோன்ற சிகிச்சை செய்கிறார்கள். உங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி…டாக்டர் ஜி.ஜான்சன்.

 11. Avatar
  Dr.G.Johnson says:

  திரு பொன் முத்துககுமார் அவர்களே , நீங்கள் கூறியுள்ளது உண்மை. பாரம்பரிய மருத்துவத்தை ஆய்வுக்கு உட்படுத்தி உலகறிய செய்தால் அனைவருக்கும் பயன்படும். நல்ல கருத்துக்கு நன்றி ..டாக்டர் ஜி.ஜான்சன்.

 12. Avatar
  ஷாலி says:

  //“அதில் மூன்று பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. மயில் கால்களை கொதிக்க வைத்து அதன் சாறு எடுத்து நல்ல பாம்பின் இரத்தம் கலந்து ஒரு மூலிகையுடன் சேர்த்து செய்யப் படுகிறது. ” ……//
  நம் நாட்டின் தேசியப்பறவையான மயில் கண்ணில் படாமல் அருகி விட்டதற்கு காரணத்தை டாக்டர்.ஜான்சன் அவர்களால் இப்பொழுது தெரிந்து கொண்டேன்.நல்லவேளை பாரம்பரியமான நாட்டு வைத்தியர்களும் அருகி விட்டதால் மிச்ச சொச்ச மயில்கள் தப்பிப் பிழைத்தன.
  ஆடும் மயிலும்,ஊறும் நல்ல பாம்பும் ஒன்றுக்கொன்று எதிரிகள். இருவரையும் ஒன்று சேர்த்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ செந்தூர் முருகக் கடவுள் போல, மயில் காலும் பாம்பு இரத்தமும் ஒன்று சேர்ந்து, முறிந்த மனிதக் கால்களை ஒன்று சேர்ப்பது ஒரு அற்புதம்தான். நவீன அறிவியல் இதை ஆய்வு செய்ய வேண்டும்.இறைவன் படைத்த அத்தனை படைப்புகளும் மனிதனுக்கு நன்மையையே செய்கின்றன.ஆனால் மனிதன் மட்டுமே எப்பொழுதும் அநியாயக்காரனாகவே இருக்கின்றான்.

  1. Avatar
   IIM Ganapathi Raman says:

   மருத்துவர் ஜாண்சன் புளூ கிராஸ் மெம்பராக இல்லாதிருப்பது எவ்வளவு நல்லது பாருங்கள். கவலையே படவில்லை.

   But I think in English medicines too, animals are killed to provide ingredients. From horses and whales, I understand, they get insulin. And now the human insulin has become more efficacious for the diabetics than animal’s, and, as such, the researchers are wishing for more and more people go to graave young and with healthy pancreas. A young cadvar like that of the late Elavarasan is more useful than that of an old decreipt atheist like Periyaardaasan who died last week and whose family offered his body to the Govt Hospital ! – for the medicine makers.

   மனித பிரேதங்களைத் (கடாவர்) தேடியலைவதை விட விலங்குகளைச் சாக‌டித்து மருத்துவர் ஜாண்சனின் கால் குணமாவது எவ்வளவோ நல்லதுதானே. மருத்துவர் வேண்டுமா மயில் வேண்டுமா என்றால் மருத்துவர்தான். ஏனென்றால் திண்ணையில் கதை கட்டுரைகள் தருகிறாரே! மயில் தருமா?

   வசூல் டாக்டர் எம் பி பி எஸ் திரைப்படத்தில் கடாவரைக்கொண்டுவா என்றால், உயிருள்ள மனிதனைப்பிடித்துக்கொண்டுவருவார்கள். I enjoyed the irony there!

   செகப்பிரியர் சொன்னார்:

   Quality of mercy blesses him that gives and him that takes.

   மருத்துவர் ஜாண்சனிம் அந்த நாட்டுவைத்தியரும் இருவருமே ஆசிர்வதிக்கப்பட்டார்கள் என்கிறார் செகப்பிரியர். ஏன் மனிதப்பிரேதங்களிலிருந்து நாட்டுமருந்து வராததால்.

 13. Avatar
  suvanappiriyan says:

  சிறந்த பகிர்வு டாக்டர் சார்!

  எனக்கும் இதுபோன்ற ஒரு அனுபவம் உண்டு. இருட்டில் எலியை அடிக்க போய் நான் தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டேன். சவுதியில் உள்ள சிறந்த மருத்துவ மனையில் மாவு கடடு போட்டார்கள். கட்டை பிரித்தும் சிறு வலி இருந்து கொண்டு இருந்தது. நண்பர் சொன்னார் என்பதால் திருவாரூர் திருக்குவளைக்கு பக்கத்தில் உள்ள நாட்டு வைத்தியரிடம் போனேன். கையை பார்த்து விட்டு எலும்பு கூடி விட்டது. இந்த கலும்பை தொடர்ந்து தடவி வாருங்கள் வலி சரியாகி விடும் என்றார். எவ்வளவு பணம் என்றேன். 30 ரூபாய் என்றார். நான் 100 ரூபாயை கொடுத்து விட்டு ‘வைத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். இதை நாங்கள் வியாபாரமாக செய்வதில்லை. மருந்து தயாரிப்புக்கான செலவை மாத்திரமே வாங்கிக் கொள்வோம். இது எங்களது குலத் தொழில் என்றார்.பாக்கி பணத்தையும் திருப்பி தந்து விட்டார். ஆச்சரியமாக அதன் பிறகு வலி நின்று விட்டது.

 14. Avatar
  IIM Ganapathi Raman says:

  இங்கு மாற்றுவ மருத்துவ முறையில் உள்ள் ஒரு மாற்று மருத்துவம் மட்டுமே காட்டப்பட்டு வியந்தோதப்படுகிறது. மாற்றுமருத்துவ முறை as a whole is not upheld as valid. Even Dr appears to have done, I oppose it.

  ஒவ்வொரு மருத்துவ முறையையும் தனியாகத்தான் எடுத்துப்பார்க்கவேண்டும் Each one should be taken on its own merits or demerits. No general approval. அப்படி இங்கு சொல்லப்பட்ட முறை – மருத்துவர் ஜாண்சனின் வரிகளில் –

  //ஆனால் இதை ஆய்வுக்கு உட்படுத்தி அறிவியல் பூர்வமாக உலகுக்கு கூறாதது பெரும் குறைதான். //

  As a docotor of English system of medicine, he is true to his profession as evidenced in the above statement.

  மருத்துவர்கள் மருத்துவாராய்ச்சியாளர்கள் காட்டியதைப்பயன்படுத்தி தொழில்புரிவோர். Please note the difference: Doctors and the researchers. A dcotor can be a reasearcher too.

  அந்த ஆராய்ச்சியாளர்கள் இக்கட்டுரையில் காட்டப்படும் முறையையும் பொருட்களையும் ஆராய வேண்டும். அதன்பின்னரே இம்முறை சரியென்றால் ஆங்கில மருத்துவம் இதை ஏற்றுக்கொள்ளும்.

  என் கருத்தைப்புரிய மானேஜ்மெண்ட் கல்வி பற்றித்தெரிவது உதவும்.

  இக்கல்வி எதையும் புறந்தள்ளாது. எதையும் எப்போதும் நிரந்தரமென்றும் சொல்லாது. மேலும் மேலும் மெருகூட்ட வழியுண்டா? புதிய உத்திகள் உண்டா? அவை நலந்தருமா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டே இருக்கும். அவ்வுத்திகளை எடுத்துக்கொள்ளும்போது அஃது உயர்வு தாழ்வு பார்க்காது. எ.கா

  A prof of IIM Ahmedabad is doing a research on Savarana Bhawna Hotel chain. How it was set up by an illiterate guy who ran from home in half trousers, roamed around the streets of Chennai like a vagabond, and finally, not only set up a chain of hotels, but also, ran it with his own riff-raff staff successfully – by hook or crook is not the qn. He did it, whereas Harvard and IIM A teacher a lot and the pass outs mostly end up serving some institutions.

  இவ்வாராய்ச்சி ஈந்தவற்றைத்தான் மேனேஜ்மென்ட் எடுத்துக்கொள்ளும் அதற்காக த்ன்னை முழுவதும் பொய் என்று தூக்கியெறியாது.

  அஃதேதான் இங்கும் ஆங்கில மருத்துவம் சித்தம், இப்படிப்பட்ட நூதனமாற்றுமுறைகளை ஆராயந்த தனக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளுமே தவிர அவை த்னனை விட உயர்வு என்றெனாது. அப்படி ஒருவேளை சொல்லிவிட்டால் மலையாள மாந்திரிக வாதியிடம் போயிருந்தால் ஜாண்சனின் கால் ஒரே நாளில் குணமாகியிருக்கும். ஏன் அவர் முயற்சிக்கவில்லை என்ற கேள்யெழுகிறதல்லவா? He, the Keralite, also uses some articles, doesn’t he?

 15. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள திரு ஷாலி அவர்களுக்கு வணக்கம். மயிலும் நல்ல பாம்பும் அபூர்வமாகக் கிடைப்பவை. இரண்டையும் சந்தையில் வாங்க இயலாது. ராமநாதபுரம் மாவட்டத்திலும், சிவகங்கை மாவட்டத்திலும் இரவில் மயில்கள் பனை மரங்களில் அடைகின்றன. இவற்றை வேட்டையாடி அங்கேயே தோலை உரித்து தோகைகளைப் புதைத்துவிட்டு சாக்கில் கறியை மட்டும் வான்கோழிகள்போல் கொண்டுவந்து பொறித்து உண்போர் உளர் . இது சட்ட விரோதம்தான். இப்பகுதியில் பாம்பு பிடிப்பவர்களும் அதிகம் உள்ளனர். அவர்கள் மகுடி ஊதி நல்லப்பாம்பும் பிடிக்கின்றனர். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.எது எப்படியோ , இதுபோன்று இயற்கையில் மறைந்துள்ள அதிசயங்களை அறிவியல் முறையில் நாம் ஆராய்ந்து உலகுக்கு கூறினால் எவ்வளவோ நன்மையாக இருக்கும். தலையில் ஆப்பிள் ஏன் விழுந்தது
  என நியூட்டன் ஆராய்ந்ததால் புவி ஈர்ப்பு கண்டு பிடிக்கப்ப்ட்டது ! உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே… டாக்டர் ஜி. ஜான்சன்.

 16. Avatar
  Dr.G.Johnson says:

  திரு சுவனப்பிரியன் அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் உள்ளது என்பதை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இவர்கள் தரும் அந்த களிம்பு எவ்வாறு வலியைப் போக்கியது என்பதே ஆராய்ச்சிக்குரியது! நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே!..டாக்டர் ஜி. ஜான்சன்.

 17. Avatar
  Dr.G.Johnson says:

  Dear Mr.IIM Ganapathy Raman, Thank you for your enlightenment on the above subject quoting an example of a research of a prof. from IIM Ahmadabad. I agree with you that we cannot generalise such stray incidents. I have only narrated an incident which baffled me. What we are trying to impress here is merely to say that we still lack the proper scientific research on our system of ancient medicine which was practiced for centuries. Thank you once again for your comments.With Regards……

  Dr.G.Johnson.

 18. Avatar
  IncamnHampRon says:

  uggs for menWhether a resource box is probably true well practically never after spending literally a matter of hours doing going to be the any including posts that I publish I often wonder if it is certainly plausible are really therefore self-centered that they can’t as an example leave a multi function smiley face as an all in one comment.ugg outlet

 19. Avatar
  Morsnoill says:

  uggs for saleI also think the industry you are in definetly matters. You should to educate yourself regarding make an appointment with an all in one ton along the lines of activity in your your industry to explore can get alot such as great kind comments.ugg boots
  uggsTo be the case honest, I really haven’t cracked this fanatic Just doing best of the best I can to learn more about get my own personal your website posts about web design and on the internet and development done day in day out!But I think the idea similar to “caring” is the fact that accurate. Ultimately, this and you will have come down for more information on giving among the most integral is the domain advice or something along those lines.In any event, this is that often worth thinking about and testing.uggs on sale
  ugg boots on saleAfter each of them is every are you feeling wants for more information regarding consider getting something from most of these more then one or even somewhere and if we allows them the right choice things upon the right choice the amount of time then there is usually that don’t you think doubt include them as hanging around your your online business every time.ugg uk

 20. Avatar
  சசி இராஜசேகர் says:

  அய்யா வணக்கம் !! நல்ல பதிவு முக்கியமா மிருகங்கள் எலும்பு முறிவு,தண்டுவட முறிவு மருந்து உண்டா !!! எழுதுங்கள் அய்யா.நன்றி.

  அன்புடன்,

  சசி.இராஜசேகர்,துபாய்

 21. Avatar
  ஒரு அரிசோனன் says:

  மதிப்பிற்கு உரிய Dr. ஜான்சன் அவர்களே,

  இந்த அனுபவம் என் தந்தையைப் பொருத்தமட்டில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அவர் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் அவரது முழங்கை மூட்டு ஆறு இடத்தில் முறிந்து விட்டது. மதுரை பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம்.

  மூன்று முறை x-ரே எடுத்து, மயக்க மருந்து கொடுத்துச் சரி செய்ய முயன்றும் தோல்விதான். அறுவை சிகிச்சை செய்து, எலும்புகளில் ஓட்டை போட்டு, கம்பியால் இழுத்துக் கட்டி, சரிப்படுத்த வேண்டும் என்றார்கள்.

  அப்பொழுதுதான் கரைக்குடியில் நுட வைத்திய சாலையில் ஒரு தடவை காட்டலாம் என்று என் பாட்டனார் கூறினார்கள்.

  நுட வைத்தியர் வீட்டிற்கே வந்து, எண்ணை தடவி, பிரிந்திருத்த எலும்புகளை ஒன்றாக வைத்துக் கட்டினார். அதுமட்டுமல்ல, தோல் பட்டை மூட்டும் இறங்கி உள்ளது, அதை மதுரை மருத்துவ மனையில் கண்டுகொள்ளாது விட்டுவிட்டார்கள் என்பதை எடுத்துச் சொல்லி, மூட்டையும் திரும்பப் பொருத்தினார்.

  அவர் அதற்காகப் பெற்றுக்கொண்ட தொகை மிகவும் குறைவுதான். அவர்தான் என் தந்தையின் கையைத் திரும்பக் கொடுத்த கடவுள் என்றால் மிகையாகாது.

  வணக்கம்.

 22. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள திரு.சசி இராஜசேகர் அவர்களுக்கு வணக்கம். மிருகங்கள் எலும்பு முறிவுக்கு இதுபோன்ற நாட்டு வைத்தியம் உள்ளதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. அதை கால் நடை மருதுவர்களிடம்த்தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். தண்டு வட முறிவுக்கு கூடுமானவரை அவர்கள் முயன்று பார்ப்பார்கள் என்றே கருதுகிறேன்.ஆனால் தண்டு வட முறிவு உண்டானால் நோயாளி நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் இருக்கலாம். அவர்களுக்கு Traction தேவைப்படும். அதற்க்கான வசதிகள் நுட வைத்திசாலையில் இல்லை…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 23. Avatar
  க்ருஷ்ணகுமார் says:

  அன்பின் வைத்யர் ஸ்ரீ ஜான்சன், நலமா

  நீண்ட நாட்களுக்குப் பிறகு வைத்யம் பற்றிய பதிவு. ஆங்க்ல வைத்ய முறையின் படி இயங்கி வந்தாலும் நாட்டு வைத்யம் பலன் தந்ததை உள்ளபடிப் பகிர்ந்ததற்கு நன்றி. எங்கள் சேலம் ஜில்லாவில் இப்படி நாட்டு வைத்ய முறைப்படி எலும்புமுறிவுக்கு வைத்யம் செய்பவர்களை பூமிசெட்டி என்னுகிறார்கள்.

  சேலத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கு இது போல பச்சிலை மூலிகையை அரைத்து வைத்யம் செய்கிறார்கள். ஒரு இருபத்தைந்து வருஷம் முன்னர் நான் மஞ்சள் காமாலையால் பீடிக்கப்பட்டு சீரம் பிலிருபின் ஏறி ஆஸ்பத்திரியில் பாட்டில் பாட்டிலாக த்ரவம் ஏற்றி நிதானமாக இறங்கிய சீரம் பிலிருபின் நாட்டு வைத்யர் கொடுத்த பச்சிலை மூலிகையில் சடாரென்று இறங்கியது.

  இன்னொரு விதிவிலக்கும். மஞ்சள் காமாலை என்றால் ஆங்க்ல வைத்ய முறையில் கடும் பத்தியம் நீண்ட நாட்களுக்கு பரிந்துரை செய்வர். நாட்டு வைத்யத்தில் மருந்து சாப்பிட வேண்டிய ஒரே ஒரு நாள் மட்டிலும் தான் பத்தியம். அதற்குப் பின் பஜ்ஜி பக்கோடா சாப்பிடலாம் என்று சொல்லி விட்டார் வைத்யர். சிம்ப்டம்ஸ் போன பின்னிட்டும்………… பயத்தினால்……… ஒரு மாதம் போல ஆங்க்ல வைத்யர்கள் பரிந்துரை செய்தபடிக்கு பத்தியம் இருந்தேன் என்பது வேறு விஷயம்.

  பல நோய்களுக்கு நாட்டு வைத்ய சிகித்சை தரும் பலனுடன் ஒப்பிடுகையில் ஆங்க்ல வைத்யத்தின் பலனளிப்பு குறைவோ எனத்தோன்றுகிறது. வைத்யம் சார்ந்த பதிவுகளைத் தொடரவும்.

  அன்புடன்
  க்ருஷ்ணகுமார்

 24. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள திரு. ஒரு அரிசோனன் அவர்களே, நான் பாரம்பரிய இரகசியம் எழுதி பல மாதங்கள் ஆனபோதிலும் அதை இப்போது படித்து உங்களுடைய தந்தை பெற்ற சிகிச்சை பற்றி நினைவு கூர்ந்தமைக்கு ..நன்றி . அனேகமாக அவர்கள் குன்னக்குடி துளாவூர் நுட வைததியசாலக்குதான் வந்திருப்பார்கள். அருமையான பகிர்வுக்கு நன்றி….அபுதா டாக்டர் ஜி. ஜான்சன்.

 25. Avatar
  ஒரு அரிசோனன் says:

  மதிப்பிற்கு உரிய DR. ஜான்சன் அவர்களே,

  தாங்கள் எழுதி இருப்பது சரியே. துளாவூர் கருப்பாயி அம்மாள் நுட வைத்தியசாலை மிகவும் புகழ் வாய்ந்தது. அந்த கருப்பாயி அம்மாளின் கணவர்தான் எனது தந்தையாருக்கு மருத்துவம் செய்தார்.

  அவர் ஒரு எண்ணையைத் தடவி, “இந்த எண்ணைதான் குணம் ஆவதற்கு உதவும்” என்றார்.

  எனக்கு அது ஒருவிதமான முடை நாற்றம் அடித்தது. நான் மூக்கைச் சுளித்து, “இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டேன்.

  அவர் என்னைப் பார்த்துச் சிரித்து, “தம்பி! அப்பா கை குணம் ஆகணும் இல்லே! மருந்து எண்ணைதான் தடவ முடியும். சென்ட்டா பூசி விடணும்?” என்று என் கன்னத்தில் தட்டியது இன்னும் பசுமையாக என் நெஞ்சில் இருக்கிறது.

  தாங்கள் சொல்லியபடி அந்த எண்ணையில் இருந்த உட்பொருள்கள் அப்படி ஒரு மனத்தைக் கொடுத்ததோ என்னவோ?

  எலும்புகள் இணைந்தபின் கை நேராவதற்கு மருத்துவர் சில பயிற்சிகளைச் சொன்னார். என் தந்தையார் அதை ஒழுங்காகச் செய்யாததால் கை 80% நேரானதே தவிர, முழுவதும் நேராகவில்லை.

  நாம் ஒருவரை ஒருவர் கண்டதுகூட இல்லை. துலாவூர் நுடவைத்தியசாலை நம்மைப் பிணைத்திருப்பது கண்டு வியக்கிறேன்.

  அதுவும் குன்றக்குடி முருகனின் திருவுளமோ?

  வணக்கம்.

 26. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள நண்பர் திரு கிருஷ்ணகுமார் அவர்களே, தங்களின் பின்னூட்டம் கண்டேன். நீங்கள் கூறியுள்ளது உண்மைதான். மஞ்சள் காமாலை கல்லீரல் நோயின் அறிகுறி. கல்லீரலில் பல்வேறு வகையான வைரஸ் தொடர்புடைய நோய்களாலும், பித்தப்பையில் கற்கள் அடைப்பதாலும் பித்தம் இரத்தத்தில் கலப்பதால் மஞ்சள் காமாலை உண்டாகிறது. ஆகவே மஞ்சள் காமாலை என்பது தனிப்பட்ட வியாதி இல்லை. அது ஒரு அறிகுறியே. ஆகவே கல்லீரலில் உள்ள குறைபாடு போனால்தான் மஞ்சள் காமாலையும் குறையும். அதன் அளவுகோல்தான் சீரம் பிலிருபின் ( Serum Bilirubin ) என்பது. மஞ்சள் காமாலைக்கு நாங்கள் குளுகோஸ் நீரும் ஸ்டீராய்டு மருந்தும் தருவது வழக்கம். அதோடு எண்ணெய் பதார்த்தங்களையும் கறிவகைகளையும் ( இறைச்சி ) குறைத்துக் கொள்ளச் சொல்வோம். கல்லீரல் அழற்சியை ( Hepatitis ) உண்டுபண்ணும் வைரஸ் கிருமிகளுக்கு எதிரான மருந்துகள் இல்லைதான். அதே வேளையில் நாட்டு மருந்தில் கீழாநல்லியும் ஆட்டுப் பாலும் மஞ்சள் காமாலையை குறைத்து குணப்படுத்துவதாகவும் பரவலாகக் கூறப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. அனேகமாக உங்களுடைய அனுபவமும் இத்தகையது என்றே கருதுகிறேன். இது உண்மைதான். எனக்கும் இத்தகைய அனுபவம் உள்ளது. இதில் என்ன குறை எனில் கீழாநல்லியில் உள்ள இரசாயனத் தன்மை ( Chemical Characteristic ) என்ன என்பதை நாம் ஆராயவில்லை. அதை அறிந்து உலக அளவில் அதை வழக்கில் கொண்டு வரவில்லை. நம்மிடம் உள்ள மருந்துகள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆராய்சிகள் முறையான முறையில் இல்லை என்றே கருதுகிறேன்…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 27. Avatar
  ஒரு அரிசோனன் says:

  உயர்திரு Dr ஜான்சன் அவர்களே,

  // கீழாநல்லியும் ஆட்டுப் பாலும் மஞ்சள் காமாலையை குறைத்து குணப்படுத்துவதாகவும் பரவலாகக் கூறப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.//

  இந்த மருத்துவத்தை நான் நேரில் கண்டிருக்கிறேன். எங்கள் பள்ளியில் கல் சுவருக்கும், மணலுக்கும் இடையில் வளரும் செடி அது. தரையோடு தரையாக இருக்கும். நானே கீழாநெல்லிச் செடிகளைப் பறித்துக் கொடுத்திருக்கிறேன். கடுகைப்போல இரண்டு மூன்று மடங்கு பெரிதாக, நெல்லிக்காயைப் போல இருக்கும் கைகள் இலைகளின் கீழே தென்படும். ஒருவேளை, அதனால்தான் கீழாநெல்லி என்று சொல்வார்களோ என்னவோ!

 28. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள திரு ஒரு அரிசோனன் அவர்களே, நீங்கள் கூறியுள்ளது உண்மைதான். நாம் இருவரும் நேரில் பார்த்ததில்லை.திண்ணை வாயிலாக எழுத்து மூலம் தொடர்பு கொண்டோம்.அதில் நான் துளாவூர் நுட வைத்தியசாலை பற்றி எழுதியதை பல மாதங்கள் கழித்து நீங்கள் கண்டு பின்னூட்டம் எழுதியபோது உங்களுடைய தந்தையும் அங்கு சிகிச்சை பெற்றது பற்றி பகிர்ந்துள்ளீர்கள். இந்த அதிசயத்தை குன்னக்குடி முருகப் பெருமாள்தான் செய்துள்ளார் என்று நீங்கள் கூறியுள்ளதை நானும் ஏற்றுக்கொல்க்றேன். அதோடு கீழாநல்லி பற்றியும் உங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். நீங்கள் கூறியுள்ளபடி அதன் சிறு காய்கள் இலையின் அடிப்பகுதியில் உள்ளதால் நம் முன்னோர்கள் அவ்வாறு அழைத்திருக்கலாம்.தொடர்ந்து திண்ணையில் சந்திப்போம். நன்றி. வணக்கம். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

 29. Avatar
  வினோத் .கோ says:

  மருத்துவர் திரு.ஜான்சன் அவர்களுக்கு வணக்கம்…

  தங்களின் பதிவை கண்டு ஆச்சரியமும் பெருமையும் கொண்டேன்..

  எனக்கு தங்களின் பதிவால் திடமான நம்பிக்கை வந்துள்ளது…

  என் சகோதரியின் கணவர் ஒரு விவசாயி அவர் உயரத்தில் இருந்து விழுந்ததில் அவரது வலது காலில் பாதத்தற்கு மேலே முறிவு ஏற்பட்டு மிகுந்த வேதனையில் உள்ளார்..
  மருத்துவமணையில் கட்டு போட்டுகால் வீங்கி இரத்தக்கட்டு ஏற்பட்டு கொப்பலங்கள் உண்டாகி இப்போது நிலமை மோசமாகிவிட்டது ..
  தற்போது வலி தாளமுடியாமல் வேறு மருத்துவமணயில் சேர்த்துள்ளோம் மருத்துவரோ 2நாள் கழித்து வீக்கம் கழிந்தாலொழிய ஏதும் செய்யமுடியும் என்கினறனர் .. இல்லையேல் அறுவைசிகிச்சை செய்து பிளேட் வைக்கலாம் எனகிறார்கள்..
  அவ்வாறு நடந்தால் அவரால் இனி கடினமாக உழைக்க இயலாது வாழ்நாள் முழுதும் வலியே மிஞ்சுமென அச்சம்கொள்கிறோம் ..

  ஆகையால் தாங்கள் பயனடைந்த அந்த நுடவைத்தியசாலையினை எனக்கு அறிமுகம் செய்ய இயலுமா

  வைத்தியசாலையின் விலாசம் மற்றும் தொலைபேசி எண் இருந்தால் தயவுகூர்ந்து எனக்கு தந்து உதவுங்கள் மிகவும் உதவியாக இருக்கும் ….
  vsaircons@gmail.com
  9941882731

  என்றும் அன்புடன்..,
  வினோத் . கோ..

 30. Avatar
  வினோத் .கோ says:

  மருத்துவர் திரு.ஜான்சன் அவர்களுக்கு வணக்கம்…

  தங்களின் பதிவை கண்டு ஆச்சரியமும் பெருமையும் கொண்டேன்..

  எனக்கு தங்களின் பதிவால் திடமான நம்பிக்கை வந்துள்ளது…

  என் சகோதரியின் கணவர் ஒரு விவசாயி அவர் உயரத்தில் இருந்து விழுந்ததில் அவரது வலது காலில் பாதத்தற்கு மேலே முறிவு ஏற்பட்டு மிகுந்த வேதனையில் உள்ளார்..
  மருத்துவமணையில் கட்டு போட்டுகால் வீங்கி இரத்தக்கட்டு ஏற்பட்டு கொப்பலங்கள் உண்டாகி இப்போது நிலமை மோசமாகிவிட்டது ..
  தற்போது வலி தாளமுடியாமல் வேறு மருத்துவமணயில் சேர்த்துள்ளோம் மருத்துவரோ 2நாள் கழித்து வீக்கம் கழிந்தாலொழிய ஏதும் செய்யமுடியும் என்கினறனர் .. இல்லையேல் அறுவைசிகிச்சை செய்து பிளேட் வைக்கலாம் எனகிறார்கள்..
  அவ்வாறு நடந்தால் அவரால் இனி கடினமாக உழைக்க இயலாது வாழ்நாள் முழுதும் வலியே மிஞ்சுமென அச்சம்கொள்கிறோம் ..

  ஆகையால் தாங்கள் பயனடைந்த அந்த நுடவைத்தியசாலையினை எனக்கு அறிமுகம் செய்ய இயலுமா

  வைத்தியசாலையின் விலாசம் மற்றும் தொலைபேசி எண் இருந்தால் தயவுகூர்ந்து எனக்கு தந்து உதவுங்கள் மிகவும் உதவியாக இருக்கும் ….
  vsaircons@gmail.com
  9941882731

  என்றும் அன்புடன்..,
  வினோத் . கோ….

 31. Avatar
  Dr.G.Johnson says:

  அன்புள்ள திரு. வினோத் கோ.அவர்களுக்கு வணக்கம். என்னுடைய கட்டுரையைப் படித்து தொடர்பு கொண்டதற்கு நன்றி. இந்த நுட வைத்தியசாலையைக் கண்டுபிடிப்பது வெகு சுலபம். நீங்கள் குன்றக்குடி சென்றாலே போதும். ” துளாவூர் நுட வைத்தியசாலை ” என்று கேட்டாலே போதும். இது காரைக்குடியிலிருந்து குன்றக்குடிக்கு நுழையும் சாலை ஓரத்திலேயே உள்ளது. என்னிடம் தொடர்பு எண் இல்லை. மன்னிக்கவும். நீங்கள் குன்றக்குடி சென்றாலே போதுமானது. அங்கு சென்று பயன் பெறலாம்.நன்றி. டாக்டர் ஜி. ஜான்சன்.

 32. Avatar
  மதியழகன் says:

  எனக்கு தொடையில் எலும்பு முறிந்தது அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைத்துள்ளார்கள்.45 நாட்கள் ஆகிறது. அதன் மேலே கட்டு பேசலாமா, பலன் தருமா?ஆலோசனை கூறஉம்

 33. Avatar
  k.Balasubramaniyam says:

  முதுகு தண்டு ஐவ்வு விலகலுக்கும் வைத்தியம் உண்டா?

 34. Avatar
  akm sajaad says:

  எனது தாய்க்கு இடுப்பில் என்பு நோவு உள்ளது எனக்கு இந்த வைத்தியசாலையின் முகவரியை தர முடியுமா ??? நான் இலங்கை

 35. Avatar
  Paramasivam says:

  வேறு ஒரு பதிவு படிக்கும் சமயம் அதில் கொடுத்திருந்த இணைப்பு மூலம் இப் பதிவு படிக்கும் நன்மையாக கிட்டியது. அலோபதி+சித்த+நாட்டு மருந்து ஒரு நல்ல இணைப்பு தான்.

 36. Avatar
  ந.மாரிமுத்து says:

  மதிப்பிற்குரிய மருத்துவர் ஜான்சன் அவர்களே! தங்களுக்கு ஏற்பட்டதைப்போலவே எனக்கும் வலதுகால் பாதத்தில் 3எலும்புகள் முறிந்துள்ளன. குன்னக்குடி நுடவைத்தியசாலையின் முழு முகவரி தொடர்பு எண் பகிர்ந்த

 37. Avatar
  திலீப் says:

  மருத்துவர் ஜான்சன் அவர்களே! தங்களுக்கு ஏற்பட்டதைப்போலவே எனக்கும் வலதுகால் பாதத்தில் எலும்புகள் முறிந்துள்ளன. குன்னக்குடி நுடவைத்தியசாலையின் முழு முகவரி தொடர்பு எண் தர வேண்டுகிறேன்.

 38. Avatar
  Jeganathan says:

  வைத்தியர் தொடர்புகொள்ள முகவரி,அலைபேசி எண் வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *