வால்ட் விட்மன் வசனக் கவிதை – 50 ஆதாமின் பிள்ளைகள் – 3

author
1
0 minutes, 18 seconds Read
This entry is part 6 of 24 in the series 24 நவம்பர் 2013

 

  (Children of Adam)

உரிமை இடம்

walwhit

 

 

 (1819-1892)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

 

 

 

ஆண்மகன் ஆத்மா சிறியது மில்லை

பெரியதும் இல்லை !

அவனும் தன் பீடத்தில்தான்

அமர்ந்துள்ளான்.

அனைத்துப் பண்புகளும் உள்ளன

ஆணிடம்.

ஆற்றலும் இயக்கமும்

பெற்றவன்.

நாமறிந்த பிரபஞ்ச அலையோட்டம்

ஓடுகிறது அவனிடம் !

இகழ்ச்சி ஏற்புடைத்து

அவனுக்கு;

பசியும் உள்ளது

அவனுக்கு;

எதிர்ப்பும் ஏற்புடைத்து

அவனுக்கு;

 

 

தீவிர இச்சைகள்

பேரின்பம் தரும் அவனுக்கு;

பெருந்துயரும் ஏற்புடைத்து

அவனுக்கு;

பீடுக்கு உரியவன்;

உள்ளத்தில் முழுதாய்ப் பரவி

அமைதிப் படுத்தும்

பெருமைக்கு உகந்தவன்

ஆத்மா வுக்கு !

அறிவாளி அவன்;

அதை வேண்டுபவன்

எப்போதும்;

தன்னைச் சோதிக்கவே

எதையும் தேடுபவன் அவன்;

 

 

எந்தக் கடல் ஆயினும்

எந்தப் பயணத் தேடல் ஆயினும்

இங்கு தான் தன் படகைச்

சோதனை செய்வான்;

இதை விட்டு வேறெங்கு

செய்வான் ?

ஆடவர் உடம்பு

புனித மானது;

மாதரின் உடம்பும்

புனித மானது;

யாராய் இருப்பினும் ஒருவர்

புனித மானவரே.

பணியாளர் கூட்டத்தில் அது

தணிவாகுமா ?

புலம் பெயர்ந்து தீவில் வந்திறங்கிய

வரட்சி முக அனாதையா ?

எல்லாரும்

இத்தளத்து உரிமை யாளர்.

அல்லது எதற்கோ உரிமையாளர்

உன்னைப் போல் !

வாழ்வுப் பயணத்தில்

ஒவ்வோர் மனிதனுக்கும் உள்ளது

உரிமை இடம் !

 

 

+++++++++++++++++

தகவல்:

1.      The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2.       Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley  [First 1855 Edition] [ 1986]

3.      Britannica Concise Encyclopedia [2003]

4.      Encyclopedia Britannica [1978]

5.      http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 18, 2012]

 

 

****************
S.Jayabarathan [jayabarathans@gmail.com] November 19, 2013

 

http://jayabarathan.wordpress.com/

Series Navigationமாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் – 10 சுபத்ராவின் ஹரணம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    kesavan says:

    Accidently I was browsing on Nagarathar in wikipedia I came across Thinnai electronic magazine.It is really informative and my sincerest wishes to one all of you. Kesavan K K Salem Tamilnadu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *