This entry is part 13 of 15 in the series 5 ஜூன் 2016

என் செல்வராஜ்

 

              சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது, நல்ல சிறுகதைகள் ஒரு பட்டியல் என்ற கட்டுரைகளில்  முன்னூறுக்கு மேற்பட்ட  கதைகளைப் பார்த்தோம். அடுத்து இரண்டு பரிந்துரை அல்லது  தொகுப்புக்களில் இடம் பெற்ற சிறுகதைகள்   எவை என்பதைப் பார்ப்போம்.  தமிழ் ஸ்டோரி  என்ற தொகுப்பை  திலீப்குமார் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். இந்த தொகுப்பு ஏப்ரல் 2016ல் வெளிவந்துள்ளது. இந்த தொகுப்பின் மூலம் இரண்டு பரிந்துரை (அ) தொகுப்பில் இடம் பெறும்  கதைகளை முதலில் பார்க்கலாம்.

 

  1. மாறுதல் – மௌனி,                     2. பறவை – கோகுலக்கண்ணன்
  2. சிதறல்கள் – விழி பா இதயவேந்தன் 4. கிணற்றில் குதித்தவர்கள் – என் ஸ்ரீராம்
  3. இருட்டு – கோணங்கி       6. கிட்டுணன் – மா காமுத்துரை
  4. இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில் – சுப்ர பாரதி மணியன்

 8.சரோஜாதேவியின் கதை –  செண்பகம் ராமசாமி

  1. மிதப்புகள் முறியும் – பாலகுமாரன் 10. வாக்கு பொறுக்கிகள் – நாஞ்சில் நாடன்
  2. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் – பிரபஞ்சன்
  3. கண்ணன் என் தோழன் – க நா சுப்ரமண்யம்
  4. பதி பசி பாசம் – இந்திரா பார்த்தசாரதி 14. பயணம் – வாஸந்தி
  5. அவளிடம் சொல்லப்போகிறேன் -ராமகிருஷ்ணன் ( கோணல்கள்)

                         

                     மற்ற கதைகளை இப்போது பார்க்கலாம்.

 

  1. அக்னி – அனுராதா ரமணன் 2. ஆளவந்தான் – தொ மு சி ரகுநாதன்
  2. அலையும் சிறகுகள் – சுரேஷ்குமார் இந்திரஜித்
  3. அம்மாவின் அந்தரங்கம் – ஜோதிர்லதா கிரிஜா
  4. அநுபவ நாடகம் – கல்கி,     6. வீணை பவானி –கல்கி
  5. ஆறுமுகசாமியின் ஆடுகள் – சா கந்தசாமி
  6. அக்னி நட்சத்திரம் – பா செயப்பிரகாசம்
  7. அச்சு வெல்லம் – ஐராவதம் 10. அடிமைகள் – பா விசாலம்
  8. அவள் – ஜெயந்தன்
  9. அவன் ஒரு இனவாதி – ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
  10. ஆயிரம் கண்ணுடையாள் – தனுஷ்கோடி ராமசாமி
  11. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி 15. ஆழ்வார் – இரா முருகன் 
  12. டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல் –உதயஷங்கர்
  13. ஈரம் – மேலாண்மை பொன்னுச்சாமி 18. ஈரம் – பொன்னீலன்
  14. ஆண்மை – எஸ் பொன்னுத்துரை 20. எல்லைகள் – சாந்தா தத்
  15. எருதுக்கட்டு – வேல ராமமூர்த்தி 22. ஏடு தொடங்கல் – மா அரங்கநாதன்
  16. ஹார்மோனியம் – செழியன் 24. ஹிம்சை – தளவாய் சுந்தரம்
  17. என்று வருவானோ –சிதம்பர சுப்ரமணியம்
  18. இடம் – சுப்ர பாரதி மணியன்
  19. கலைடாஸ்கோப் மனிதர்கள் – கார்த்திகைப்பாண்டியன்
  20. கலக்க மறுத்த கண்கள் – கோபி கிருஷ்ணன்
  21. களவு போகும் புரவிகள் – சு வேணு கோபால்
  22. காளீ – அனுராதா               31. காளியமர்த்தனம் – நீல பத்மநாபன்
  23. கல்லத்தி மரம் – சுந்தர பாண்டியன் 33. கண் திறந்தது – வசுமதி ராமசாமி
  24. கன்யாகுமாரி – த நா குமாரஸ்வாமி
  25. கார்ல் மார்க்ஸும் தானு ஆசாரியும் – தமிழவன்
  26. கர்ணமகராசா – தூரன் குணா
  27. கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும் – ஆதவன் தீட்சண்யா
  28. சொல்லவே முடியாதகதைகளின் கதை  – ஆதவன் தீட்சண்யா
  29. கூட்ஸ் வண்டியின் கடைசி பெட்டி – அஜயன் பாலா
  30. கோட்டு – கலாஸ்ரீ 41. குருத்து – இந்துமதி
  31. குழந்தையின் கேள்வி – கி சந்திரசேகரன்
  32. லட்சுமி ஓடிப் போகிறாள் – வீர வேலுச்சாமி
  33. மனமகிழ்ச்சி – திரிலோக சீத்தாராம் 45. மண்பாரம் – இமையம்
  34. மண்குடம் – மாதவராஜ்
  35. மார்டின் ஹைடேக்கரும் மத்தியான சோறும் – உதய சங்கர்
  36. மறு ஜன்மம் – பி எம் கண்ணன் 49. மறுமணம் – விந்தன்
  37. மாயக்கிளிகள் – ஜீ முருகன் 51. மழையின் குரல் தனிமை – பா வெங்கடேசன்
  38. மீன் சாமியார் – எம் எஸ் கல்யாணசுந்தரம்
  39. மொழிக்கு அப்பால் – ம ந ராமசாமி            54. காசி – பாதசாரி                 
  40. ஏழாம் திருநாள் – ச தமிழ்ச்செல்வன்
  41. முதல் கடிதம் – சரோஜா ராமமூர்த்தி          57. முடிவு – இந்திரா
  42. முட்டர் பாஸ் – பொ கருணாகரமூர்த்தி 59. கற்பனை அரண்– ந முத்துசாமி    
  43. நான் அவன் அது – கவிதா சொர்ணவல்லி
  44. நாலு அவுன்ஸ் பிராந்தி – அ ந சிவராமன்
  45. நஞ்சு – வாஸந்தி                  63. நந்துவின் தம்பி – குமுதினி
  46. நாரணம்மா – தனுஷ்கோடி ராமசாமி
  47. கடற்கரை கிளிஞ்சல் – இலங்கையர்கோன் 66. கூரை – வேல ராமமூர்த்தி
  48. நதியில் மிதக்கும் கனல் – சந்திரா       68. நாற்று – க சீ சிவக்குமார்
  49. நீர் ஊற்று – கௌரி அம்மாள்
  50. நிஜத்தை மீறிய நிழல்கள் – தேவக்கோட்டை வா மூர்த்தி
  51. நிகழ மறுத்த அற்புதம் – திலீப் குமார்  72. நிலம் நீர் ஆகாயம் – ஐராவதம்
  52. நியாயங்கள் மாறும் – ஜோதிர்லதா கிரிஜா
  53. நொண்டிக்குழந்தை – சி சு செல்லப்பா
  54. ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் – பவா செல்லதுரை

    76.ஊமைச்சி காதல் – றாலி         77. ஊமங்காடை – லட்சுமணப்பெருமாள்

  1. ஒரு ஜோடி காளை – தி ஜ ரங்கநாதன்
  2. ஒரு பூனையும் லெதர் பை வைத்திருப்பவர்களும் –தமிழவன்
  3. ஒரு புதிய ஆயுதம் – நா பார்த்தசாரதி
  4. ஒரு தாத்தாவும் எருமையும் – பாமா

82.ஒற்றைச்சிறகு – சூத்ர தாரி

  1. கூரை மேலேறி கோண சுரைக்காயை ….. சிவசங்கரா
  2. பைத்தியக்காரி – தி ஜ ரங்கநாதன் 85.பகல் உறவுகள் – ஜெயந்தன்
  3. பலி – தேவி பாரதி 87. பள்ளத்தெரு – விழி பா இதயவேந்தன்
  4. பால்மணம் – கோமகள் 89. பாம்பும் பிற கனவுகளும் – கோகுலக்கண்ணன்
  5. பணம் பிழைத்தது, பூச்சூட்டல் – பி எஸ் ராமையா
  6. பங்கீடுகள் – வீர வேலுச்சாமி
  7. கோட்டை – மு தளையசிங்கம் 93. கோவில் பூனை – சிற்பி
  8. பறக்கும் திருடனுக்குள் – சுரேஷ்குமார் இந்திரஜித்
  9. பச்சை மோதிரம் – குகப்ரியை 96. பட்டா – ம ராஜேந்திரன்
  10. பட்டாளக்காரன் – தி சா ராஜு 98. பட்டித்தெரு – கால பைரவன்               
  11. லிபரல் பாளையத்தில் தேர்தல் – ஆதவன் தீட்சண்யா
  12. பெற்றோர்கள் – புரசு பாலகிருஷ்ணன் 101. பேய்க்கவிதை – தஞ்சை ப்ரகாஷ்
  13. பிம்பங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்     103. பிற்பகல் – ந முத்துசாமி
  14. போணி – சிவசங்கரி 105. பூமாலை – ஆர் சூடாமணி
  15. பொறி – சல்மா             107. பொருதகர் – செண்பகம் ராமசாமி
  16. புலிப்பாணி ஜோதிடர் – காலபைரவன்
  17. புதிய ஏவாள் – சூ இ குழந்தை
  18. புயல் ஓய்ந்தது – கு ப சேதுஅம்மாள் 111. ராஜதந்திரிகள் – நா பார்த்தசாரதி
  19. ராக்கம்மா – நஞ்சுண்டன்            113. ரணகள்ளி – உமா மகேஸ்வரி
  20. நைவேத்தியம் – கிருஷ்ணன் நம்பி 115. சகோ“டி” – பிரதிபா ஜெயச்சந்திரன்
  21. சக்ரவாகம் – ந சிதம்பர சுப்ரமணியம்

117.நாடக வாத்தியார் தங்கசாமி – சி எம் முத்து

  1. சங்கை – இரா முருகன் 119. சராசரிகள் – சி ஆர் ரவீந்திரன்
  2. சரஸ்வதி பூஜை – தனுஷ்கோடி ராமசாமி 121. சர்டிஃபிகேட் – அன்பாதவன்
  3. சசாங்கனின் ஆவி – ந சிதம்பர சுப்ரமணியம்
  4. சாஸ்தா ப்ரீதி – அ மாதவையா 124. சாது மிரண்டால் – டி செல்வராஜ்
  5. சாட்டை – கண்மணி குணசேகரன் 126. சீவன் – கந்தர்வன்
  6. சின்னம்மிணி – திருப்பூர் கிருஷ்ணன்
  7. சிபிகள் – மேலாண்மை பொன்னுச்சாமி
  8.   சிறை – அ பிரேமா                130. சிதறியபடி ரூபங்கள் – தமிழவன்
  9. சொத்துக்குடையவன் – கி ரா 132.சுருட்டுப்பா – தோப்பில் முகம்மது மீரான்
  10. சுதந்திரப்போர் – குமுதினி            134. நூறுகள் – கரிச்சான் குஞ்சு                                                                                                                                                           
  11. டண் டணக்கு – தய் கந்தசாமி
  12. தமயந்தி – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

   137.ஒரு சம்சாரியின் பஞ்சங்கள்– அ முத்தானந்தம்                           

  1. தார் குளிர்ந்த நதிக்கரையில் – அறிவுமதி
  2. தர்மம் தலை காக்கும் – உ வே சாமிநாதய்யர்
  3. தாசில்தாரின் நாற்காலி – விமலாதித்த மாமல்லன்
  4. தாயம்மா பாட்டி சொன்ன 41 கதைகள் – யுவன் சந்திரசேகர்
  5. தயவு செய்து – களந்தை பீர் முகம்மது 
  6. தேடல் – இந்துமதி 144. தீனி  –  பாரவி
  7. தீராத ஏக்கம் – தி நா சுப்ரமணியம் 146. தேனீக்கள்– ஜி காசிராஜன்
  8. தேன்சிட்டு – பொன்னீலன்              148. தெரு – அழகிய சிங்கர்
  9. தேவகி – குகப்ரியை 150. திறந்த ஜன்னல் – கமலா விருத்தாசலம்
  10. திரிசங்கு நரகம் – சு சமுத்திரம்
  11. தூங்கு பனிநீரே – எஸ் ஷங்கர நாராயணன்
  12. ஒரு நாள் – நகுலன்      154. தோஷம் – ஆண்டாள் பிரியதர்ஷிணி
  13. த்ரில் – உஷா சுப்ரமண்யம்               156.துணி – இந்துமதி
  14. பறவைகளும் ரேஷன் கார்டும் –செண்பகம் ராமசாமி                             
  15. டிராக்டர் – வையவன்
  16. உஞ்சவிருத்தி – கோபுல்ஸ்ரீ 160. உண்ணிகள் – பெருமாள் முருகன்
  17. உபய களத்திரம் – கமலா பத்மநாபன் 162. உதயகுமாரி – மீ ப சோமு
  18. வனம்மாள் – அழகிய பெரியவன்          164. வருகை – விட்டல் ராவ்
  19. வருகை – உமா மகேஸ்வரி 166. வருஷபிறப்பு – எஸ் விசாலாட்சி
  20. வாசுதேவ மிஸ்ராவின் மனைவி – ப கிருஷ்ணசாமி
  21. வீடு – காஞ்சனா தமோதரன்
  22. வீடு பேறு – மா அரங்கநாதன்

   170.வெள்ளை யானையும் குளிர்பதன பெட்டியும் – க்ருஷாங்கிணி

  1. வெள்ளி மீன்கள் – பெருமாள் முருகன்
  2. வென்றிலன் என்ற போதும் – ரகுநாதன்
  3. விபத்து – யூமா வாசுகி 174. விவேகம் – எஸ் வி வி
  4. யாரை நம்பி வந்தாய் ? – ஜி கே பொன்னம்மாள்
  5. யாருக்கு பிரதிநிதி – விந்தன்
  6. உத்தரீயம், யானையின் சாவு – சார்வாகன்,
  7. தனுஷ்கோடி – கோணங்கி
  8. ஈரம் – ஜெயந்தி சங்கர்
  9. சீதாவின் சுயம்வரம் – மகாலிங்க சாஸ்திரி
  10. அன்னையும் பிதாவும் – ராஜாஜி 182. அன்னய்யா – ஆதவன் தீட்சண்யா
  11. அற்ப ஜீவிகள் – மலர் மன்னன் 184. காக்காய் பார்லிமெண்ட் – பாரதியார்
  12. சோகம் – ம ராஜேந்திரன்         186. கோட்டை வீடு – வ ரா
  13. மற்றொன்று – க்ருஷாங்கிணி 188. மாடும் மனிதனும் – விந்தன்
  14. முன்பு ஒரு காலத்தில் நூற்றியெட்டு கிளிகள் இருந்தன – ரமேஷ் ப்ரேம்
  15. நீல ரதம் – சம்பத் 191. ஒரு திருணையின் பூர்வீகம் – மு சுயம்புலிங்கம்
  16. செம்பனார் கோயிலுக்கு போவது எப்படி – ந முத்துசாமி
  17. அமிர்தம் – கா ஸ்ரீ ஸ்ரீ 194. அந்தி மந்தாரை – பெ கோ சுந்தரராஜன்
  18. அப்புச்சியும் பேரனும் – கோவிந்தராஜ்
  19. இங்கேயும் ஒரு கங்கை – பாவை
  20. இது தான் வாழ்க்கை –சரஸ்வதி ராம்நாத்
  21. யாதும் ஊரே – பஞ்சாட்சரம் செல்வராஜ்

     199.. கோகிலா நைட்டிங்கேல் – ருக்மிணி பார்த்தசாரதி

 

        மலேசிய எழுத்தாளர்களின் சிறுகதைகள்

 

  1. ரெ கார்த்திகேசு – ஒரு சுமாரான கணவன்
  2. ஐந்தடியில் ஓர் உலகம் – ப கு சண்முகம்
  3. கம்பத்து மக்கள் – முகம்மது இப்ராஹிம்
  4. நேர்க்கோடுகள் – சாமி மூர்த்தி
  5. பாசத்தின் பரிசு – சி அன்பானந்தம்
  6. புள்ளிகள் – அரு சு ஜீவானந்தன்
  7. சத்து ரிங்கிட் – பாரி

 

               முக்கியமான எழுத்தாளர்களின் கதைகள் இந்த பட்டியலில் பல இடம் பெற்றிருக்கின்றன. அவற்றை பார்க்கலாம்.

 

  1. அசோகமித்திரன் – காந்தி, காத்திருத்தல், குகை ஓவியங்கள், அம்மாவுக்காக

ஒரு நாள், முறைப்பெண், சார் சார்,  விமோசனம், விடிவதற்குள்,

பறவை வேட்டை,

 

  1. நாஞ்சில் நாடன் – ஐந்தில் நான்கு, எண்ணப்படும், மொகித்தே, ஊதுபத்தி,

பிணத்தின் முன் அமர்ந்து திருவாசகம் படித்தவர், சாலப்பரிந்து, சுரப்பு,

மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்

 

  1. புதுமைப்பித்தன் – அகலிகை, அன்றிரவு, நாசகார கும்பல், பால்வண்ணம்

பிள்ளை, பிரம்ம ராக்ஷஸ், சுப்பையா பிள்ளையின் காதல்கள், துன்பக்கேணி,

வாடா மல்லிகை, வேதாளம் சொன்ன கதை

 

 

  1. பூமணி – அடி, மாற்றம், நேரம், நொறுங்கல், பசை, தகனம்,

உரிமைத்தாகம்,

 

  1. பிரபஞ்சன் – ஆண்களும் பெண்களும், கருணையினால் தான், மனுஷி,

பாயம்மா, விழுது

 

6.. வண்ணநிலவன் – ஞாயிற்றுக்கிழமை, குடும்பச்சித்திரம்,

மயானகாண்டம், மழை, மெஹருன்னிசா, தேடித்தேடி,

 

  1. தி ஜானகிராமன் – கடன் தீர்ந்தது, குழந்தைக்கு ஜுரம், முள்கிரீடம்,

பஞ்சத்து ஆண்டி, சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்,

தாத்தாவும் பேரனும்,

 

  1. அ முத்துலிங்கம் – கறுப்பு அணில், ஒட்டகம், பக்குவம், பூமாதேவி,

ராகு காலம், ரி,

 

  1. கு ப ராஜகோபாலன் – பண்ணைச்செங்கான், வீரம்மாளின் காளை

 

  1. கு அழகிரிசாமி – அழகம்மாள், சிரிக்கவில்லை, தன்னையறிந்தவர்,

 

  1. எம் வி வெங்கட் ராம் – ஏழை, ஊஞ்சல், பெட்கி,

 

  1. ந பிச்சமூர்த்தி – காவல், கவலை மாடு, மோகினி,வானம்பாடி,

முள்ளும் ரோஜாவும்

 

  1. சுஜாதா – எல்டொராடோ, குதிரை , நிபந்தனை, பார்வை , தாஜ்மஹால்,

தனிமை கொண்டு

 

  1. ஆதவன் – கணபதி ஒரு கடை நிலை ஊழியன், கத்தி,

முதலில் இரவு வரும் ,சினிமா முடிந்த போது,

சிவப்பா உயரமா மீசை வச்சுக்காம

 

  1. வண்ணதாசன் – கூறல், போர்த்திக்கொள்ளுதல்

 

  1. லா ச ராமாமிர்தம் – ஈ ஜெகமுலோ திக்கவரம்பா, கொட்டு மேளம் ,

ராஜகுமாரி , யோகம்

 

  1. மௌனி – அத்துவான வெளி, குடும்பத்தேர், உறவு பந்தம் பாசம்,

 

  1. கி ராஜநாராயணன் – மாயமான், தாவைப்பார்த்து, மின்னல்

 

  1. இந்திரா பார்த்தசாரதி – அற்றது பற்றெனில்,

குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்,

 

  1. ஜெயமோகன் – ஹம்பி, நதிக்கரையில், பல்லக்கு, வலை

 

  1. எஸ் ராமகிருஷ்ணன் – ஹசர் தினார், மழை சார்ந்த வீடு,

ரகசிய ஆண்கள், பி விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்

 

  1. அம்பை – மல்லுக்கட்டு, மிலேச்சன், திரிசங்கு, சூரியன்

 

  1. ஜி நாகராஜன் – கிழவனின் வருகை, மிஸ் பாக்கியம், ஓடிய கால்கள்

 

  1. சுந்தர ராமசாமி – நாடார் சார், மேல் பார்வை

 

  1. ஜெயகாந்தன் – தாம்பத்யம், யாருக்காக அழுதான்,

முன் நிலவும் பின் பனியும்

 

  1. கந்தர்வன் – துண்டு,  கதை தேசம், மைதானத்து மரங்கள்

 

  1. சா கந்தசாமி – தேஜ்பூரிலிருந்து, பாய்ச்சல், மூன்றாவது பிரார்த்தனை

 

  1. அகிலன் – புயல், பூச்சாண்டி, எரிமலை,

 

  1. ராஜம் கிருஷ்ணன் – ஊசியும் உணர்வும், திங்கள் கிழமை , ஏக்கம் ,

தனிமை

 

  1. பாவண்ணன் – ஆறு, அடி, துரோகம், வேஷம், சம்மதங்கள் ஏன் ?,

பயணம்

 

  1. ஆர் சூடாமணி – இறுக மூடிய கதவுகள், நாகலிங்க மரம்,

நடன விநாயகர், ரயில், டாக்டரம்மா அறை,பெருமையின் முடிவில்

 

  1. சோ தர்மன் – மருந்து, சருகுகள்

 

  1. விட்டல் ராவ் – தூரதேசம், பன்றி, பந்து பொறுக்கி, சின்னவாடு

 

  1. விந்தன் – முல்லைக்கொடியாள், முதல் தேதி, கண்ணம்மா

 

இந்த பட்டியலில் 375 கதைகள் இடம் பிடித்திருக்கின்றன. 200 க்கு மேற்பட்ட எழுத்தாளர்களையும் அவர்களின் சிறந்த கதைகளில்  சிலவற்றையும் பார்க்க முடிகிறது. இந்த கட்டுரைத் தொடர் ஆரம்பிக்கும் போது சில எழுத்தாளர்களே எனக்கு தெரிந்தவர்களாக இருந்தார்கள்.   இப்போது பல எழுத்தாளர்களையும் அவர்களின் சிறந்த கதைகளையும் வாசிக்க முடிந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

இந்த கட்டுரையை  எழுத கவிஞர் மகுடேஸ்வரன் ஒரு காரணம் என்று சொல்லலாம். அவருடைய வலைப்பூவில்  தமிழில் நல்ல சிறுகதைகள் 1000 இருக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதற்கு ஒரு வாசகர் அந்த கதைகளின் பெயரை குறிப்பிடுங்கள் எனக் கேட்டு இருந்தார். அவரின் கட்டுரையில்  உள்ள வரிகளை அப்படியே இங்கு தருகிறேன்.

            ” என்னதான் அகலமான அளவுகோல்களை வைத்து அளந்தாலும் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் என ஓராயிரம் (1000) மட்டுமே  இருக்கின்றன. அவற்றைத் தேடுவதற்கோ கண்டடையவோ யாருக்கும் யாதொரு சிரமமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எல்லாச் சிறுகதைகளும் அந்தந்த ஆசிரியர்களின் பெயரில் முழுத்தொகுதியாக வந்திருக்கின்றன. வந்துகொண்டுமிருக்கின்றன.  சிறந்த சிறுகதைகளின் தேர்ந்த தொகுப்புகளும் வந்திருக்கின்றன. விட்டல்ராவ் (இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்), மாலன் (அன்று), தீபம் சிறுகதைகள், கணையாழி கதைகள் என அவை கிடைக்கின்றன. அவற்றின் வழிச் சென்றாலே போதும். தமிழ்ச் சிறுகதை உலகைக் கடைந்து எண்ணெய்

 எடுத்துவிடலாம்.”  –கவிஞர் மகுடேஸ்வரன்.

               

               அவர் அந்த கட்டுரையில் சொல்லி இருப்பது போல் 1000 சிறந்த சிறுகதைகளை கண்டடைவதே மிகச்சிரமமான வேலை என்பது சிறுகதை தொகுப்புக்களை தேடும் போது தான் தெரிந்தது. நூற்றுக்கணக்கான தொகுப்புக்கள் இதுவரை வெளிவந்திக்கின்றன என்பது தேடும் போது தான் தெரிந்தது. அந்த தொகுப்புக்களின் வழியாக மற்றும் பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் வழியாக சிறந்த கதைகளாக இரண்டு அல்லது அதற்கு மேல் குறிப்பிடப்பட்ட கதைகள் சுமார் 700 கதைகள்.  அவற்றையே  1.சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது  2. நல்ல சிறுகதைகள் – ஒரு பட்டியல் மற்றும் இந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

              

Email : enselvaraju@ gmail.com

 

 

Series Navigationசக்ர வியூகம்ஆனந்த விகடன் இலக்கியக் களத்தில் இறங்கியது – ‘தடம்’ ஒரு வாசிப்பு