இது எனதுகடல் THIS IS MY SEA கவிஞர் எம்.ஏ.ஷகியின் 20 கவிதைகள் மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெறும் இருமொழித் தொகுப்பு

This entry is part 1 of 6 in the series 14 ஜூலை 2019

ஒற்றைப் பெற்றோராய் தனியாய் தன்னுடைய நான்கு குழந்தைக ளையும் பேணிப் பராமரித்து, தனக்குத் தெரிந்த தையற்கலையை வாழ்க்கைத் தொழிலாக வரித்துக்கொண்டு மார்பகப் புற்று நோயின் கொடிய வலி வேதனைகள், சிகிச்சை களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்திருந்த கவிஞர் ஷகிக்கு கவிதை எழுதுதல் வலிநிவாரணமாக வும் வடிகாலாகவும் இருந்திருக் கிறது.

இந்த வருடம் ஜூன் மாதம் கவிஞர் ஷகி 44 வயதே ஆகி யிருந்த நிலையில், அமரரானார். அவருடைய கவிதைகளின் வழி அவர் என்று வாழ்வார்.

திருமலை ஷகி என்றும் அறியப்படும் சக கவிஞர் ஷகியின் கவிதைகள் நமக்கு அளித்த நிறைவான வாசிப்பனுபவத்திற்கும், அவருடைய அருமையான கவித்துவத்திற்கும் பதில் மரியாதை செய்யும் விதமாக அவருடைய குடும்பத்திற்கு நிதியுதவி திரட்டும் பொறுப்பை கவிஞர் நஸ்புல்லாவும் பிறரும் ஏற்றுக்கொண்டுள் ளனர். சிறு துளி பெருவெள்ளம். உதவ முடிந்தவர்கள் கவிஞர் நஸ்புல்லாவுக்கோ அல்லது இந்தியாவில் ஷகிக்காக நிதி திரட்டிக்கொண்டிருக்கும் என் வங்கிக்கணக்குக்கோ அவர்களால் முடிந்த தொகையை இம்மாதம் 20ஆந் தேதிக்குள் செலுத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்.

Latha Ramakrishnan

SB Ac,No. 10054052350

STATE BANK Of India

Saidhapet Bazaar Road Branch(Branch Code 2266)
IFSC CODE SBIN0002266

கவிஞர் ஷகியின் நினைவைப் போற்றும் விதமாக அவருடைய 20 கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெறும் சிறிய நூல் வெளியிடப்படுகிறது. கவிஞர் ஷகியின் 20 கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும், அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகக்குறிப்பும், அவருடைய கவித்துவம் குறித்து தன்னளவில் குறிப்பிடத்தக்க கவிஞராகத் திகழும் கவிஞர் ரியாஸ் குரானா எழுதிய கட்டுரை ஒன்றும் தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் இந்த நூலில் இடம்பெறுகின்றன. இந்த நூலில் இடம்பெறும் ஷகி யினுடைய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமாக AMAZON PAPERBACK EDITIONஆக வெளியாகியுள்ளது.  அமேஸான் நூலிற்கான ‘லிங்க்’ இங்கே தரப்பட்டுள்ளது.

SHAKI’S 20 POEMS IN ENGLISH TRANSLATION – NOW IN AMAZON PAPERBACK


Link: 
https://www.amazon.com/…/1080304592/ref=rdr_ext_sb_ti_hist_1

KINDLE EDITION M.A.SHAKI’S 20 POEMS AND THEIR ENGLISH TRANSLATIONS – A BILINGUAL VOLUME

https://www.amazon.com/s…

ஏன் இந்த நூல்?

_லதா ராமகிருஷ்ணன்

_நான் ஃபேஸ்புக்கில் இணைந்துகொண்டபோது இந்தியா விலிருந்தும் இலங்கை யிலிருந்தும் பல கவிஞர்கள் நட்பினராயினர்.

நட்பினர் என்றால் நாங்கள் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதில்லை.

ஆனால், எங்கள் கவிதைகள் கலந்துரையாடின.

அப்படிப்பட்ட கவிஞர்களில் ஒருவர் எம்.ஏ.ஷகி. இலங்கை யைச் சேர்ந்தவர்.

ஒரு கவிஞர் கடல் என்று குறிப்பிடும்போது அவர் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட கடலாக இருக்க வேண்டியதில்லை, தூலக் கடலாக இருக்கவேண்டியதில்லை, ஏன் கடலாகக்கூட இருக்கவேண்டியதில்லை என்பதை தேர்ந்த வாசகர்களால் உணர முடிகிறது.

கவிஞர் ஷகி ‘இது என்னுடைய கடல்’ என்று சொல்லும்போது தூல, சூக்குமக் கடல்கள், அற்றைத் திங்கள் முதல் இற்றைத் திங்கள் வரையான, இருந்து இல்லாமலான, இருந்துமில்லாம லான எல்லாவிதமான கடல்களும் பல்கிப் பெருகி நம்மைச் சூழந்துகொண்டு திக்குமுக்காட வைக்கின்றன.

ஷகியின் அத்தனை நுட்பமான கவிதைகளை வாசிக்கும்போது தற்காலத் தமிழ்க்கவிதையின் முன்னணி முகங்களாக உலகெங்கும் தெரிய வந்துள்ள சில கவிஞர்களின் கவித்துவப் போதாமை தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வந்தது.

இது எல்லாக் காலமும் எல்லா மொழிகளிலும் பல்வேறு காரணங்களால் வழக்கமாக நடக்கும் விஷயம். சாதி, மதம் எல்லாவற்றையும் தாண்டிய அளவில் நடந்துகொண்டிருப் பது.

இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால் தரமான கவிஞர்கள் என்றாலும் ஒரே சாதி அல்லது ஒரே மதத்தைச் சேர்ந்த தரமான கவிஞர்கள் எல்லோருக்கும் உரிய அளவு கவனமும் அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைத்துவிடுவதில்லை.

இது ஒருவகையான வாழ்வியல் நெருக்கடி என்றும் வகைப்படுத்தலாம்.

ஒற்றைப் பெற்றோராய் தனியாய் தன்னுடைய நான்கு குழந்தைகளையும் பேணிப் பராமரித்து, தனக்குத் தெரிந்த தையற்கலையை வாழ்க்கைத் தொழிலாக வரித்துக் கொண்டு மார்பகப் புற்று நோயின் கொடிய வலி வேதனைகள், சிகிச்சை களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்திருந்த கவிஞர் ஷகிக்கு கவிதை எழுதுதல் வலிநிவாரண மாகவும் வடிகாலாகவும் இருந்திருக்கிறது.

இந்த வருடம் ஜூன் மாதம் கவிஞர் ஷகி 44 வயதே ஆகி யிருந்த நிலையில், அமரரானார். அவருடைய கவிதைகளின் வழி அவர் என்று வாழ்வார்.

திருமலை ஷகி என்றும் அறியப்ப்டும் சக கவிஞர் ஷகியின் கவிதைகள் நமக்கு அளித்த நிறைவான வாசிப்பனுபவத்திற்கும், அவருடைய அருமையான கவித்துவத்திற்கும் பதில் மரியாதை செய்யும் விதமாக இந்தச் சிறிய நூல் வெளியிடப் படுகிறது. கவிஞர் ஷகியின் 20 கவிதைகளும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும், அவரைப் பற்றிய ஒரு சிறு அறிமுகக்குறிப்பும், அவருடைய கவித்துவம் குறித்து தன்னளவில் குறிப்பிடத்தக்க கவிஞராகத் திகழும் கவிஞர் ரியாஸ் குரானா எழுதிய கட்டுரை ஒன்றும் தமிழ் – ஆங்கிலம் இரு மொழிகளிலும் இங்கே இடம்பெறுகின்றன.

இந்தச் சிறுநூலை என் எளிய பதிப்பக முயற்சியான ANAAMIKAA ALPHABETS மூலம் வெளியிடுவதில் மனநிறை வடைகிறேன்.

இந்த நூல் உருவாக்கத்திற்கு தார்மீக ஆதரவளித்த முகநூல் நட்பினர், சக கவிஞர்கள் அனைவருக்கும், குறிப்பாக கவிஞர் நஸ்புல்லாஹ், கவிஞர் ரியாஸ் குரானா மற்றும் கவிஞர் ஷகியின் மூத்த மகளான கவிஞர் அமைராவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஷகியின் கவிதைகள் சில( ஆங்கில மொழிபெயர்ப்புடன்):

1

ஒரு ஆயிரம் வருடங்களை
ஒருமித்த தன்மை வாய்ந்த
பெருங்காதல் கடந்து 
போகிறது,
கணப்பொழுதில் நிரந்தரமாக ஆட்கொண்ட
மரணத்தின் கடைசி
நறுமணத்தினூடு……

Goes past thousand years,

Grand Wholesome Love

Harmonious to the core

Wades through thousand years

In a split second

With the aroma of death

Seizing for ever.

  •  

2

பூப்பெய்திய அன்று 
கூச்சப்பட்டு நின்றவளை
கண்ட மூத்த சகோதரனின்
அர்த்தங்கள் கற்பிக்க முடியாத
கலங்கிய கண்கள்

முதன்முறை மார்பை மறைக்க
தாவணி அணிந்த 
பெரிய மனுஷி வெட்கம்

பிரசவப்போராட்டத்தில்
உயிர் அறுந்ததாய்
சோர்ந்த நேரம் கேட்ட
சேயின் அழுகுரல்

நோன்பு திறக்கும்
முதல் மூன்று மிடறுத்தண்ணீர்

பவுடர் அதிகமாக அப்பியிருந்த
எந்தன் முகம் துடைத்து 
சரிசெய்த தந்தையின் 
கடைசிப்பரிவுக் கைலி வாசம்

பிரிவைச்சொல்லிச்சென்று 
‘மறக்கமுடியலடி’…என
நா தளுதளுத்து நீ பேசிய 
வார்த்தையால் மன அச்சில்
கோர்வையான வியாசங்கள் ….
மறுபடியும் .

The incomprehensible teary eyes

of the elder brother

upon seeing her standing diffidently

on the day of attaining puberty

The shyness of an adult woman

on the first day of wearing Dhavani for

covering the breast

The cry of the new born baby

heard at the instant when

growing immensely weary

as if on the throes of Death

while giving birth

The first three gulps of water

at the commencement of fasting

The smell of  father’s  ‘lungi’

wiping my face having too much of

talcum powder

at his final parting

All these and more

crowding the memory

as bidding goodbye and going away

the words you choked to  pronounce

‘Can’t forget, you know….’

3

இது எனது கடல்
~~~~~~
கரையிலிருக்கிறேன் .
இடப்பெயர்வுக்குப் பின்னான தசாப்த தனிமையுடன் நிசப்தித்திருக்கும் மலைக்கிராமத்தின் பிரதிமைகளாய் நிழலாடுகின்றன 
கையசைத்து விடைபெற்றவைகள்.
வெகுதொலைவானது கடல் என்கிறாய் இழந்தவற்றையும் கடல் என்கிறாய் ..
உறுமும் அலைகளுடன் பேய் இரைச்சலாய் கொதித்தெழும் கடலின் கரையில் அன்றிருந்தோம்
தீராத பசியுடன் அது கரையைத் தின்றுகொண்டிருந்தது .
முள்ளந்தண்டு சில்லிடும் அச்சத்துடன் வெறித்து நின்ற என் கண்களை நுணுகி ஆலாபித்து சாய்ந்திருந்தாய் மணலில்
உலர்ந்த உதட்டு வெடிப்புகளை உப்புக்காற்று நிரவ, கசிந்துகொண்டிருந்த கடலின் மென்னணுக்கத்திலிசைந்து புதையுண்டிருந்தேன் 
மனவெளியில் படர்ந்திருக்கும் 
எனது கடலுக்குள்
இன்னும் நீ இழந்ததாய் சொல்வதும் தொலைத்ததாய் அங்கலாய்ப்பதுமான கடல் எனதில்லை.

அது சாபங்களால் புரட்டப்பட்ட இறந்த கடல் போன்றது.
ஈரமணலில் ஊறியொன்று கீறி நகர்ந்த சிறு கோடாய் இழையோடுகிறது புன்னகை
விடுவிக்கப்பட்ட நிலத்தில் உதிரும் சருகின் நரம்பிழைகளில் 

மீட்ட விரையும் காற்றின் பாதையில் பயணிக்கும் மனதுடையவளாக இப்போது நான் மட்டும் கரையிலிருக்கிறேன்
ஆழ்ந்த மௌனத்துடன் தன்னில் படர்ந்த வானை மென்னலைகளால் ஆராதித்தபடி மல்லாந்து கிடக்கிறது

3

THIS IS MY SEA

On shore I am

That which were taken leave of
with an adieu 
sway as the phantom silhouettes of
the figurines of mountain-range hamlet 
steeped in decade-long silence
after displacement

‘Sea is so faraway’ say thee
‘All that is lost is the sea so vast’
claim thee

We were there on the shore 
of the roaring sea 
soaring in rage
with rumbling waves

With unquenched hunger 
it was gobbling up the shore.

My eyes staring 
with fear pervading my spinal column
watching it all too minutely 
and expanding infinitely
you were reclining on the sand.

With salty breeze stroking the cracks of dry lips, 
in absolute consonance
immersed in totality 
I remained in the sea
within.

Also
the sea that you claim to have lost
lamenting at its having gone off course
is not mine.

That of course
is like a dead sea rolled over 
with curses outnumbered.

As a thin stroke of line soaked in the wet sand 
and is drawn
a smile sprouts.

As one inclined to voyage along the passage of wind
that hurries on to play the strings of 
the nerves of withered leaf
dropping on the land retrieved
now
all alone upon the shore
I remain.

In silence supreme
with the laurels of waves
hailing the firmament
that pervades the entire interior
the sea lays there facing upward.Series Navigationஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *