கதி

author
0 minutes, 0 seconds Read
This entry is part 3 of 7 in the series 24 நவம்பர் 2019

கு. அழகர்சாமி

மலை மேல்

குதிரை போக

குதிரை மேல்

நான் போக

எனக்கு மேல்

நிலா போக-

எத்தனை காலம்

எத்தனை பேர்களை

எத்தனை முறை

ஏற்றி இறக்கி

குதிரை

இதுவரை

இப்போது

இனியும்-

ஏற்கனவே

நிலவடைந்திருக்குமோ

குதிரை

கடந்த

தொலைவு?

நிலவெட்டியிருக்குமோ

குதிரையின்

கதி?

குதிரையிலிருந்து

கீழிறங்கும் போது

சந்தேகம்.

நிலவிலிறங்கினேனா?

குதிரைக்காரன்

குதிரைக்கு

தீனி

போடுவான் –

ஒரு

பிடி

புல்.

கு. அழகர்சாமி

Series Navigationபேச்சாளர்ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 5
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *