பாதி முடிந்த கவிதை

கு.அழகர்சாமி கீழே வீழ்ந்து கொண்டே வெளியின் அகலப் பக்கங்களில், காற்று வீசி அவசரமாய் எழுதும் சருகின் பாதி முடிந்த சாவின் கவிதை முழுதும் எழுதி முடிவதற்குள்- சருகு மண் சேர்ந்து கடைசியாய்க் கண் மூட எழுதி முடிக்க முடியாது- மீதியை எழுத…
திரைப்பட வாழ்க்கை

திரைப்பட வாழ்க்கை

ஆர்யா. கட்டுமானத்துறையில் பொறியியல் பட்டம் பெற்ற புதுமுகம். வேலைச் சந்தைக்குள் நுழையுமுன் ஓர் அரசு வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்ய ஆசைப்பட்டார். அறந்தாங்கி முக்கியச் சாலையிலிருந்து காட்டுப் பிராமண வயல் செல்லும் சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய் பதிக்கும் வேலையை எடுத்தார்.…
தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்  – 16 -23இ பேருந்தில்

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 16 -23இ பேருந்தில்

                                                                                                                     எழுதிய / பிரசுரமாகிய காலமோ, இதழ் பெயரோ குறிப்பிடப்படாத பதினைந்து கதைகளை உள்ளடக்கி ஐந்திணைப் பதிப்பகம்  "தி. ஜானகிராமன் படைப்புகள்" என்று இரண்டு தொகுதிகள் கொண்டு வந்தது. அந்தப் பதினைந்து கதைகளுள் ஒன்றுதான்  "23இ பேருந்தில்"  முதல் தடவை வாசிக்கும் போது…

திருநறையூர் நம்பி

                                                                                  பன்னிருஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வார் பல திவ்யதேசங்களுக்கும் சென்றவர். வடக்கே பதரியிலிருந்து தெற்கே திருப்புல்லாணி வரை சென்று அங்கங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமானைப் பாடிப் பரவி யிருக்கிறார். திருநறையூர் என்ற தலத்திற்கும் செல்கிறார்.அங்கே பெருமான் வீற்றிருக்கும் கட்டுமலைக்கு “சுகந்தகிரி”…
இந்த வாரம் இப்படி (அக்டோபர் 4, 2020) அகழ் இதழ், மேற்கு வங்க வன்முறைகள், உபி குற்றங்கள், துரைமுருகன்

இந்த வாரம் இப்படி (அக்டோபர் 4, 2020) அகழ் இதழ், மேற்கு வங்க வன்முறைகள், உபி குற்றங்கள், துரைமுருகன்

சின்னக்கருப்பன் அகழ் இதழ் சமீபத்தில் ஒரு நண்பர் மூலம் இணைப்பு கிடைக்கப்பட்டு அகழ் இதழை வாசித்தேன். இதழில் “போருக்கு எதிரான அசல் பிரகடனம் - சக்கரவர்த்தியின் கதைகளை முன்வைத்து” என்று சுரேஷ் பிரதீப் எழுதிய கட்டுரை மூலமாகவே சக்கரவர்த்தியின் கதைகளின் களத்தை…

தலைமுறை இடைவெளி

எனக்கும் என் மகனுக்குமிடையே அரைநூற்றாண்டு இடைவெளி அப்பா-மகன், குரு-சீடன் இப்படித்தான் நாங்கள் குருவாக அப்பாவாக என்மகன் எங்கள் மல்லிப்பூ உரையாடலில் முட்கள் இருந்ததில்லை கின்னஸ்களில் அவர் வாழ்க்கை கிண்ணத்தில் என் வாழ்க்கை போயிங்கில் அவர் பயணம் பொட்டு வண்டி என்பயணம் அவரின்…

நம்மாழ்வார் காட்டும் பரமபத தரிசனம்

                                       இன்று பல இடங்களுக்கும் சென்றுவர பலவகையான போக்குவரத்து வசதிகள் உள்ளன. சந்திரமண்டலம் சென்றுவரக்கூட போக்குவரத்து வசதி வந்துவிட்டது! ககன்யான் செல்லப் பயணிகளுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார் கள்! இந்நிலையில் உலகவாழ்வை நீத்தபின் பரமபதம் சென்று அனுபவிக்கக்கூடிய…

தி.ஜாவின் சிறுகதை உலகம் – கொட்டு மேளம் 14 – விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும் 15

  கால தேச வர்த்தமானங்களைக்  கடந்து நிற்பதுதான் இலக்கு என்று இலக்கியம் வளர்ந்து கொண்டு வருகிறது. ஒரு சீரிய இலக்கியவாதியின் பார்வை, நட்டு வைத்த மைல்கல் போல அன்றும் அதற்கு அப்புறமும்  தான் முதலில் கொண்ட அபிப்பிராயத்தையே ஒரு சுமையாக முதுகில் ஏற்றிக் கொண்டு, கண்…

எங்கெங்கு காணினும்

கௌசல்யா ரங்கநாதன்      --------- மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது..தத்தளிக்கிறது..என்ன முயன்றும் மனதை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்பதே உண்மை..வயதான எந்த வருமானமும் இல்லாத, என் பெற்றோர்தான் என்ன செய்ய முடியும்? அவர்களைப் பார்த்தாலும் பாவமாய்த்தான் இருக்கிறது. சொற்ப…

வாங்க, ராணியம்மா!

ஜோதிர்லதா கிரிஜா (23.11.1978 குமுதத்தில் வெளியானது. கவிதா பப்ளிகேஷன்ஸின் “விடியலின் வருகையிலே” எனும் தொகுப்பில் இடம் பெற்றது.) மணியின் பார்வை காற்றில் படபடத்துக்கொண்டிருந்த நாள்காட்டியில் பதிந்தது. மே, பதினெட்டு. மே பதினெட்டு? ஆம். மே பதினெட்டு. அவன் வேலைக்கு வந்து சேர்ந்த…