புதிய போர் !

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 15 in the series 16 மே 2021

              இரா.பானுப்பிரியா          

அண்டத்தை அழிக்க ;

ஆறறிவாளர் ஏந்திய ,

ஆயுதம் !

அறிவியல் ஆச்சரியம் !

புதிய போர் முறை !

அதிசய ஆபத்து !

வாள் வேல் இன்றி 

நடக்கும் போர் !

புற்றுநோய் பங்காளி !

இரத்தயுக இரகசியம் !

ஒளி-ஒலியின் ஓரங்க நாடகம் !

குருதி கடலின் ,

கொடை மேகம் !

பிளப்பு – இணைப்பு ,

போராற்றல் !

கதிர்வீச்சு காலன் !

ஏவுகணை ஏவல் !

வெடிசத்த வேட்டைகாரன் !

அருவுருவ அசுரன் !

எக்ஸ் கதிர் காதலன் !

கரும்புகை பகைவன் !

குறு பாதகன்!

கருவை சிதைக்கும் ,

கொடூரன் !

அணுவால் அணுவானது அண்டம் !

      

                    -இரா.பானுப்பிரியா

Series Navigationவெவ்வேறு அறைகள்நல்ல மனம் வேண்டும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *