கசக்கும் உண்மை

This entry is part 4 of 15 in the series 26 பெப்ருவரி 2023

லதா ராமகிருஷ்ணன்

தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியறிவிலும் தேர்ச்சியிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள் என்று சமீபத்தில் INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25, 2023 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழில் கல்வி தொடர்பாக INSTITUTE FOR COMPETITIVENESS, STANFORD நடத்திய சுற்றாய்வு ஒன்றின் முடிவுகள் தரப்பட்டுள்ளன. இந்தியாவில் 10000 பள்ளிக ளில் 20 தாய்மொழிகளில் பயிலும் 86000 மூன்றாம் வகுப்பு மாணாக்கர் களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்மொழித்திறன் தமிழ் மாணாக்கர்களிடம் மிகவும் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் பட்டம் என்ற சொல்லை படம் என்று படித்தது நினைவுக்கு வருகிறது.

ஈரோடு இடைத்தேர்தலைப் பற்றிப் பரபரப்பாகப் பேசுவ தில் 100இல் ஒரு பங்காவது இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேச அரசியல்கட்சிகளும் ஊடகங்களும் முன் வருமா என்பது மிக மிக சந்தேகமே.

அரசுப் பள்ளிகளில் மொழியறிவு, கணித அறிவு போது மான அளவு மாணாக்கர்களுக்கு சொல்லித்தரப்படுவ தில்லை என்று ஓர் ஆய்வு வெளிப்படுத்தினால் உடனே தனியார் பள்ளிகள் மட்டும் என்ன தரமானவையா என்று எதிர்க்கேள்வி எழுப்ப நிறைய ஆட்கள் உண்டு.

ஆனால், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்கானவை அரசுப்பள்ளிகள். அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபடு வதாய் சொல்லிக்கொள்ளும் அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், மனித உரிமைப் போராளிகளும் எழுத்தா ளர்களும்அரசுப்பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு இணக்க மான கற்கும் சூழல் நிலவுகிறதா, நல்லவிதமாக கல்வி சொல்லித்தரப்படுகிறதா, மாணவர்களின் தன்மதிப்பை மேம்படுத்தும் விதமாக அந்த சூழல் இருக்கிறதா, அல்லது மாணாக்கர்களை மதிப்பழிக்கும்போக்கு நிலவுகிறதா என்றெல்லாம் கண்டும் கேட்டும் அறிய , ஏன் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை?

ஆசிரியர்களுக்கு தொழிற்சங்கம் இருக்கிறது. ஆசிரியர் களால் தங்கள் குறைகளை எடுத்துரைக்க முடியும். ஆனால், சிறு குழந்தைகள் முதல் வளரிளம்பருவத்தினர் வரை உள்ள மாணாக்கர்களுக்கு?

ஆசிரியர் – பெற்றோர் சங்கங்கள் பெயரளவுக்குத்தான் பல பள்ளிகளில் இயங்குகின்றன என்கிறார்கள்.

தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளி ஆசிரியப் பெரு மக்களுக்கு ஊதியம் அதிகம். ஆனால், படிப்பறிவற்ற பெற்றோர்கள் அவர்களிடம் எதையும் இயல்பாகப் பேச முடிவதில்லை. ’இலவசமாகக் கல்வி தருகிறோம் – இதில் கேள்வி கேட்கிறீர்களே’ என்று இடித்துக்காட்டும் இழிவுபடுத்தும் ஆசிரியப் பெருமக்கள் என்று சொல்லிக் காட்டும் ஆசிரியப் பெருமக்கள் உண்டு என்று பல பெற் றோர்கள் வருத்தத்தோடு சொல்லக் கேட்டிருக்கிறேன்.

கல்வி தரவேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று; கல்வி பெறவேண்டியது குழந்தைகளின் அடிப் படை உரிமைகளில் ஒன்று’ என்பதை அறியாத அப்பாவி பெற்றோர்கள் தங்கள் பள்ளிக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியப் பெருமக்கள் கற்றுத்தருவதே தங்களுக்குத் தரப்படும் ஆகப்பெரும் சலுகையாகக் கொள்கிறார்கள். அவ்விதமாய் அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள்.

அந்தந்த அரசியல் கட்சி அவரவர் தொண்டர்களின் குழந்தைகளின் கல்வி குறித்த அக்கறை காட்டினாலே போதும். ஆனால், செய்கிறார்களா என்பது சந்தேகமே.

பாடத்தின் ஒரு பத்தியை ஆசிரியர் உரக்க வாசிக்கிறார். குழந்தைகள் அதை திருப்பிச் சொல்லுகின்றன. முடிந்து விட்டது மொழியறிவுக் கல்வி. ஒரு பத்தியை பத்து முறை எழுதச் சொல்கிறார்கள். மனப்பாடமாகக் கூட அந்தப் பத்தியை அந்தக் குழந்தையால் சொல்லமுடிய லாம். ஆனால், அந்தப் பத்தியில் உள்ள தனித்தனி சொற்கள், எழுத்துகள் ஆகியவற்றை அந்தக் குழந்தையால் அடையாளம் காண முடிவதில்லை. இது என்னவிதமான மொழியறிவு? மொழியறிவுக்கல்வி?

’ஒரு வகுப்பில் எட்டு பத்துக் குழந்தைகள் இப்படியிருப் பார்கள்தான். அதற்காக கல்வித்திட்டத்தை, ஆசிரியப் பெருமக்களை ஒட்டுமொத்தமாகக் குறைகூறுவதா?’ என்று கேட்பவர்கள் உண்டு. ஆனால், ஒரு வகுப்பில் பத்து குழந்தைகள் கற்றலில் பின் தங்கியிருந்தால் அவர்களை அப்படியே விட்டுவிடலாமா? அவர்களைக் கற்றலில் முன்னேற்றுவது தேவையில்லையா?

வகுப்புகளில் மாறி மாறி பாடப்புத்தகங்களைத் தன் முன் விரித்து வைத்து, அல்லது கையில் ஏந்தியபடி அதிலிருக்கும் எழுத்துகள் என்னவென்றே தெரியாமல் ஆசிரியரின் வாயையே பார்த்துக்கொண்டிருக்கும், நாள் முழுக்க வகுப்பில் அமர்ந்துகொண்டிருக்கும், அவ்வப்போது ஆசிரியரால் கண்டிக்கப்படும், மட்டந்தட்டப்படும் குழந்தைக்கு ஏற்படக் கூடிய நீடித்த உளவியல் பாதிப்புகள் ஏராளம் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

தரமான கல்வியை அடித்தட்டு வர்க்கத்தினரின் குழந்தை களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். கிடைக்கச் செய்ய முடியும். அதற்கு முனைப்பான அக்கறையும் செயல் திட்டங்களும், அரசுகளிடம் இருக்கவேண்டியது அவசியம்.

அரசியல் கட்சிகளும், சமூகமும் குழந்தைகளை இரண் டாந்தரக் குடிமக்களாய் பாவிக்கும் பார்க்கும் மனப் போக்கு மாற வேண்டும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் லஞ்சலாவண் யங்கள் மிக அதிகமாகப் பரவியிருப்பதாகக் கூறப்படுகி றது. இதனால் உச்சபட்சமாக பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களின் பிள்ளைகளான ஏழை மாணாக்கர்கள் தான். இந்தவிதமான சீர்கேடுகளும் தொடர்ந்தரீதியில் அடிக் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய தேவையிருக்கிறது.

எத்தனையோ சேவை நிறுவனங்கள் கல்விப் பணியில் அர்ப்பணிப்பு மனோபாவத்தோடு இயங்கிவருகின்றன. அவர்களின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பை யும் அரசு கோரிப் பெறவேண்டும். PPP எனப்படும் PUBLIC-PRIVATE PARTNERSHIP இல் கல்வித்தரத்தை மேம்படுத்த அரசு முன் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

ஊடகவெளி இதில் பெரும்பங்காற்ற முடியும். (ஆனால், தமிழை சிதைப்பதில்தான் அவை முக்கிய கவனம் செலுத்திவருகின்றன என்பது வருந்தத்தக்க விஷயம்).

மனமிருந்தால் ஆக்கபூர்வமாய் எத்தனையோ செய்ய லாம்.

தரமான கல்வி குழந்தைகளின் அடிப்படை உரிமைகளில் தலையாயது. அதைத் தர வேண்டியது, குறிப்பாக அடித் தட்டு வர்க்கத்தினருக்குக் கிடைக்கச்செய்யவேண்டியது அரசுகளின் தலையாயக் கடமைகளில் மிகவும் முக்கிய மானது.

தாய்மொழி மீது பற்றும் மரியாதையும் வருங்கால சந்த தியினரிடம் ஏற்பட வெறுப்புப் பேச்சுகளோ, வெற்று முழக்கங்களோ உதவாது. தாய்மொழியில் பயிற்சியும் தேர்ச்சியுமே இன்றியமையாதவை.

…………………………………………………………………………………………………………………………..

பி.கு: மேற்குறிப்பிட்ட சுற்றாய்வில் தரப்பட்டுள்ள வேறு சில புள்ளிவிவரங்கள் பின்வருமாறு:

2/25/23, 11:51 PM ‘42% of students meet global minimum proficiency level’ – Times of India

https://timesofindia.indiatimes.com/education/42-of-students-meet-global-minimum-proficiency-level/articleshow/98222066.cms 1/1

NEW DELHI: Around 42% of students surveyed across India met global minimum proficiency while 37% partially met it in mathematics, reveals a study by Stanford University’s Institute for Competitiveness.

The survey, conducted on 86,000 Class III students in 20 different languages across 10,000 schools in India, specifically highlighted language as being vital in acquiring early literacy.

The report, “Second State of Foundational Literacy and Numeracy 2022”, was released on Friday by Bibek Debroy, chairman, to the Prime Minister. It said 250 million Indian students were affected adversely due to the pandemic and that recovering from the children’s learning loss during the pandemic required more effort than simply reopening classrooms.

The Global Proficiency Frameworks (GPF) developed by United States

Agency for International Development ( ) defines the minimum proficiency levels for both reading and mathematics. The global proficiency levels include “does not meet minimum proficiency”, where learners lack the most basic knowledge and skills; “partially meets minimum proficiency”, where learners have limited knowledge and skills; “meets minimum proficiency”, where learners have developed sufficient knowledge and skills, and

“exceeds minimum proficiency” means that learners have developed superior knowledge and skills and can successfully complete complex tasks.

According to UNICEF, nearly two-thirds of 10-yearolds globally are unable to read and understand a simple text. With the Covid pandemic situation, the learning loss worsened, and every child across the world has fallen behind in learning.

Commenting on the current state of foundational learning and literacy, the report stated that in the contemporary world, in many countries, most children cannot interpret basic words and perform simple operations with numbers. According to a World Bank assessment, in India, around 50% of children lack foundational learning.

The report, however, says by adopting suitable innovation and agency demonstrated by teachers, collaborating with parents and using experiments with technology, the learning loss can be mitigated. In the last 50 years, India has lost over 220 languages, which means not enough attention is paid to preserving and taking care of languages.

Series Navigationஅகழ்நானூறு 16ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 9  
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *