நூல் அறிமுகம் – 2 CULTURE LITERATURE PERSONALITIES _ A COLLAGE By Dr.K.S. SUBRAMANIAN

This entry is part 14 of 15 in the series 26 பெப்ருவரி 2023

_ லதா ராமகிருஷ்ணன்

மதிப்பிற்குரிய மூத்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரர் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் இடம்பெறும் இந்த நூலை சமீபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.

Dr.K.S. உயிரோடு இருக்கும்போதே பிரசுரத்திற்கு அனுப்பிவைத்திருந்தார். புத்தகத்தைப் பார்த்தி ருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்.

இலக்கியம் – சமூக வெளிகளில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களைக் கட்டுரைக ளாக டாக்டர் கே.எஸ். எழுதி பல்வேறு தொகுப்புகளில் அவை வெளியாகியிருக்கின்றன. அவற்றி லிருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளும், புதிதாக எழுதிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

டாக்டர் கே.எஸ். மீது மிகுந்த மரியாதையும் அபிமானமும் கொண்ட, தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராகத் திகழும் திரு.இறையன்பு டாக்டர் கே.எஸ்.ஸின் அரும் பணிகள் குறித்து அகல்விரிவான முன்னுரை எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 20க்கும் மேற்பட்ட அடர் செறிவான கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலின் முகப்பு அட்டையைப் பார்த்ததும் மிகவும் வருத்தமாயிருந்தது. ‘ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல் ஒரு நூலின் முகப்பு அட்டை அந்த நூலின் சாரத்தை, முக்கியத்துவத்தைக் குறிப்பு ணர்த்துவதாய், அடிக்கோடிட்டுக் காட்டுவதாய் அமையவேண்டும். இந்த நூலின் முகப்பு அட்டை நூலின் உள்ளடக்கத்திற்கு நியாயம் சேர்ப்பதாக இல்லை. இதற்கு பதில் Dr. கே.எஸ்.ஸின் புகைப் படத்தையே பெரிதாக வெளியிட்டிருக்கலாம் என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடிய வில்லை.

 

 

Series Navigationநூல் அறிமுகம் – 1: அலிஃப் லைலா வ லைலா எனும் 1001அரேபிய இரவுகள் உயிர்மை வெளியீடு தமிழில் : சஃபிரிஷி (லதாராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *