ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 9  

This entry is part 5 of 15 in the series 26 பெப்ருவரி 2023

இடம் : அரசவை மன்றம்  
நேரம் : இரவு வேளை  
பங்கு கொள்வோர் : வெனிஸ் நகர டியூக், செனட்டர்கள், விளக்கேற்றிய மாளிகை. 

[முன் பக்கத் தொடர்ச்சி] 

மோனிகா: கருமூர் இனத்தவ ஜெனரலை நான் நேசித்து திருமணம் செய்து கொண்டது, அவருடன் இல்வாழ்வு நடத்தப் போவதைை வெனிஸ் நகர மக்களுக்கு அறிவிக்கத்தான். என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது, அவரது கண்ணியப் பண்பாடும் உன்னத தோற்றமும் தான். ஒத்தல்லோவின் மெய்யான தோற்றத்தை நான் அவரது உள்ளத்தில் கண்டேன். அதற்காக என் ஆத்மா, என் செல்வாக்குகள் அனைத்தையும் நான் அவருக்கு சமர்ப்பணம் செய்தேன். கணவர் போருக்குப் போக நான் பிறர் தயவில் காலம் கடத்த வேண்டும் என்றால், மனைவி யாக நான் உடன்பட்டதற்கு அர்த்தம் இல்லாது போகும். மேலும் என் மனம் உடைந்து தனிமையில் வேதனை மிகுந்திடும். ஆதலால் கணவ ரோடு செல்ல எனக்கு அனுமதி தாருங்கள்.  

ஒத்தல்லோ: [பெருமகிழ்ச்சியுடன்] அனுமதி அளிப்பீர் பிரபு. என் உடற் பசிக்கோ, காம இச்சைக்கோ நான் திருப்தி செய்யக் கேட்ப தாக நினைக்க வேண்டாம். ஆயினும் எனது இளம்பருவ ஆசைகள் இன்னும் உள்ளன. அதோடு என் மனைவி என்னோடு இருப்பதால் போர்ப் பணிகளில் என் கவனம் குறைந்து விடும் என்று கருத வேண்டாம். காம தேவன் விளையாட்டுப் பொம்மைகள் என் கவனத்தை மங்கச் செய்யும், அல்லது கடமை உணர்ச்சியைக் கறைப் படுத்தும் என்று எண்ணாதீர். இல்லத்தரசிகள் என் போர்த் தலைக் கவசத்தை யாசிப்பு பாத்திரமாய் ஆக்கி மானக் கேடான துயர்களை ஒரு போர்ப் படைக்கு உண்டாக்காது.  

டியூக்: மோனிகா உன்னோடு செல்வதா, இல்லை இங்கு விட்டுச் செல்வதா என்பதை நீ தீர்மானம் செய். சைப்பிரஸில் போர்  நெருக்கடி முற்றி விட்டது. விரைவில் நீ சைப்பிரஸ் செல்ல வேண்டும். உத்தரவை உடனே  நிறைவேற்று நீ.  

முதல் செனட்டர்: இன்றிரவே நீ செல்ல வேண்டும். 

மோனிகா: [மனம் வெம்பி] என்ன ? இன்று இரவிலே சென்றாக வேண்டுமா பிரபு ? 

 டியூக்: ஆம் இன்று இரவு. 

ஒத்தல்லோ: நான் தயார்  மேதகு டியூக். 

டியூக்: [குழுமி உள்ள அரசவை நபர்களை நோக்கி] நாமிங்கு காலை ஒன்பது மணிக்கு இதே இடத்தில் நாளை சந்திக்க வேண்டும்.  [ஒத்தல்லோவை நோக்கி] சில நபரை இங்கு விட்டுச் செல். எனது ஆணைகளை உனக்கு கொண்டுவரவும், உனது தகவலை எனக்கு அறிவிக்கவும் தேவை     

ஒத்தல்லோ: உங்கள் அனுமதியுடன் மோனிகாவை என் பணியாள் புருனோவின் பாதுகாப்பில் அவனது இல்லத்தில் விட்டுச் செல்ல விரும்புகிறேன். என் மதிப்புக்கும் நம்பிக்கைக்கும் உடந்தை ஆனவன் அவன். எனது மனைவி அவனது கண்காணிப்பில் வாழ்ந்து வருவாள் நான் மீண்டும் வரும் வரை. 

டியூக்: அப்படியே இருக்கட்டும். [அனைவரையும் பார்த்து] நல்லிரவு வந்தனம் ஒவ்வோர் நபருக்கும். [சிசாரோவைப் பார்த்து] செனட்டரே ! முன் கூறிய பழமொழி நினைவில் சொல்கிறேன் , 

பதவி மதிப்பு மிகுதி அழகீனத்தை ஈடு செய்தால் உன் மருமகன் மிக மேலான வெளுப்பன் தான். 

முதல் செனட்டர்: பராக்கிரம மூர் இனத்தோனே. போய்வா,  மோனிகாவை மகிழ வைப்பாய்.  

சிசாரோ: [மனக் கசப்புடன் ஒத்தல்லோவிடம்] கவனம் வை, யார் திரும்பி வருவார் என்று யார் சொல்வார் ?  இது இன்னும் முடிய வில்லை. உன் மண வாழ்வு துப்பாக்கி மாளிகையில் துவங்கிறது.  எது நிஜம் என்று பார்ப்பாய் ? என்னை ஏமாற்றினாள் என் மகள்.  பார், உன்னையும் ஏமாற்றுவாள் அவள். நான் கலங்கி துயர் உற்றது போல், நீயும் அவளால் வேதனை அடைவாய். சுக வாழ்வு உனக்கு அவளால் நிகழாது ஒருபோதும். 

[ஒத்தல்லோ அதிர்ச்சியுடன் நிற்கிறான்.] 

[தொடரும்] 

Series Navigationகசக்கும் உண்மைவெளிச்சம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *