ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் – அங்கம் – 2, காட்சி – 1 பாகம் – 1

This entry is part 6 of 22 in the series 26 மார்ச் 2023

கோமான் ஷைலக் & வில்லன் புருனோ

காலம்: அடுத்த நாள் பகல்

பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேணோ, மற்றும் இரண்டு படைவீர்கள்

இடம் : சைப்பிரஸ் தீவு, கடல் அலைகள் கொந்தளிப்பு, பேய்க்

காற்றடிப்பு

மாண்டேணோ : உங்கள் கண்களுக்கு கப்பல்கள் வருவது தெரிகிறதா

முதற்காவலன்: [தொலைநோக்கியில் பார்த்து] ஒரு காக்கை, கழுகு கூட இல்லை. அலை உயரம் மிகுந்திருப்பதால் கடல் தொடுவானத்தில் ஏறும் கப்பலோ, பறக்கும் கொடியோ தெரியவில்லை.

மாண்டேனோ: ஓலமிடும் கடற்புயல் நிலத்தின் மீது கலக்கி அடிக்கிறது. கடலில் சாயும் கப்பல் பாய்மரக் கம்பங்கள் முறிந்து போகாதா ? எப்படி நமக்கு தகவல் வரும் இந்தப் புயல் அடிப்பில் ?

இரண்டாம் காவலன் : துருக்கி கப்பற்படை அணி தாக்க வருவதாய் அறிவிப்பு. தொடுவானைப் பார்ப்போம். திசைகாட்டும் கருவி வழிகாட்டினும் நீர்மை வெண்முகில் கண்களை மிரள வைக்கும்.

மாண்டேனோ: துருக்கி கப்பல் படை அணி இடையே எங்காவது தங்கி வராவிட்டால், கப்பலோ குடை சாய்ந்து படை வீரர் மூழ்கி மரிக்கலாம்.

[தகவல் கொண்டு வருகிறான் மூன்றாம் காவலன்]

முதற்காவலன்: இதோ புதுச் செய்தி. [படிக்கிறான்] போர் நின்று விட்டது. புயல் காற்றில் துருக்கியர் படை அணி திரும்பி விட்டதாம். வெனிஸ் கப்பல் ஒன்று மட்டும் புயலில் உடைந்து, பெருஞ் சேதம் விளைந்ததாம். பெரும்பான்மை கப்பல்கள் தப்பின.

மாண்டேனோ: அப்படியா ? இது உண்மையா ?

மூன்றாம் காவலன் : ஆம், ஆம், சைப்பிரஸ்

கரைக்கு ஒத்தல்லோ போர்த் தலைமை தாங்க

வந்தாச்சு. முக்கியமாய் ஒத்தல்லோவின் லெஃப்டினென்ட் மைக்கேல் காஸ்ஸியோவும் இங்கு வந்திருக்கிறார்.

மாண்டேனோ: மிக்க மகிழ்ச்சி. இந்தப் போரை நடத்த ஒத்தல்லோ தான் தகுதி பெற்றவர்.

மூன்றாம் காவலன்: துருக்கியர் தோல்வித் தகவல் கொண்டு வரும் காஸ்ஸியோ, ஒத்தல்லோவின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் பாதுகாப்பீர் என்று ஏன் கவலைப் படுகிறார் ? காரணம் அவர் இருவரும் பிரிவு பட்டு வெகு தூரத்தில் உள்ளார். மேலும் கடற்புயல் வேறு இடையில் தடுத்து விலக்குகிறது.

மாண்டேனோ: காஸ்ஸியோ உடல் நலத்துக்கு நான் துதிக்கிறேன். போரில் அவருக்குக் கீழ் பணி செய்துள்ளேன். அவர் உயர்ந்த தளபதி. வாரீர் கடற்கரைக்கு. சைப்பிரஸ் கப்பலைப் பார்ப்போம்.

[காஸ்ஸியோ நுழைகிறார்.]

காஸ்ஸியோ: வீராதி வீரர்களே ! ஒன்று படுவீர் ஒத்தல்லோவுக்கு கீழ் வெற்றி பெற. பிரிந்து நிற்போர் ஒன்று கூடுவீர்.

மாண்டேனோ: இந்த சைப்பிரஸ் கப்பல் உறுதி யானதா ? புயல் காற்றை எதிர்த்து போகக் கூடியதா? சரி உங்கள் ஜெனரல் ஒத்தல்லோவுக்கு திருமணம் ஆகி விட்டதா ?

காஸ்ஸியோ: ஆம் ஒத்தல்லோவுக்கு திருமணம் ஆகி விட்டது, ரகசியமாக. காதல் திருமணம். கறுமூர் இனத்தோன் எழில் மாது மோனிகாவை மணந்து கொண்டது, அவளது தந்தைக்குக் கூட தெரியாமல் நடந்துள்ளது.

மாண்டேனோ: யாரந்த எழில் மாது ?

காஸ்ஸியோ: பளிங்குச் சிலை போன்ற எழில் மாது நமது ஜெனரல் ஒத்தல்லோவுக்கு தளபதி. வெனிஸ் செனட்டர் சிசாரோவின் ஏக புதல்வி. வெனிஸ் செல்வந்தர் ஷைலக் கூட தனக்கு கிடைப்பாளா என்று ஏங்கும் வெனிஸ் அழகி. ஒத்தல்லோவின் கம்பீரத் தோற்றம், அவரது கடந்த வீர, தீரப் போர் வெற்றிகள் மோனிகாவை கவர்ந்து விட்டன. ஒத்தல்லோவின் பணியாள் புருனோவின் பாதுகாப்பில் தான் வெனிஸ் நகரில் இருக்கிறாள். புருனோ சைப்பிரஸ் வந்து சில நாட்கள் ஆகும். அதோ வருகிறாள் பாருங்கள் வெனிஸ் தாரகை !

[படகிலிருந்து இறங்கி வருகிறாள் மோனிகா தோழியர், எமிலியோ, ஷைலக் சூழ]

[தொடரும்]

Series Navigationஅகழ்நானூறு 20குருவியும் சரக்கொன்றையும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *