This entry is part 10 of 12 in the series 21 மே 2023

கோவிந்த் பகவான்


ஓர் ஊழிக்காலத்தின் இறுதியில்

பெய்த மழையொன்றில்

நனைந்த பறவை

அடுத்த ஊழிக்காலத்தில் சிறகுலர்த்திய போது 

அதன் ஈரம் தோய்ந்த இறகுதிர

புவியின் மீதான பாரம் கூடி

விசை செயலிழக்கிறது

பறவையினால் சபிக்கப்பட்ட பாழ்நிலமென

இப்பெருங்கோள் ஏதோவொரு காலத்தில்

பெயர் பெறக்கூடும்.

-கோவிந்த் பகவான்.

Series Navigationநாவல் தினை- பதினைந்தாம் அத்தியாயம். மத்தியாங்கம் CE 300திருமதி.மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய அயல்வெளிப் பயணங்கள் நூல் திறனாய்வு