புதுவித உறவு

This entry is part 6 of 12 in the series 21 மே 2023

சி. ஜெயபாரதன், கனடா

தாமரை இலைமேல்
தண்ணீர்
போலொரு வாழ்வு.
கண்டது உன்
கண்ணீர் !
சிறகு ஒன்றில் தினம்
பறக்க முயன்று
தவிக்கும்
பெண் புறா !

உனக்கும் எனக்கும்
உறவில்லை.
பந்த பாசம் பிணைப்புகண
ஒன்று மில்லை.
உனக்கு உதவி செய் என்று
உசுப்பியது
எதுவெனத் தெரியாது
எனக்கு.
எவ்வளவு எனத் தெரியாது
கணக்கு !
நமக்குள் வாராது
பிணக்கு !

Series Navigationமாசற்ற ஊழியன்நியூட்டன் இயக்கும் பிரபஞ்சம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *