மௌனி

ஆர் வத்ஸலா உனது மூன்று முகங்களை கண்டு உன் பால் ஈர்புற்றவள் நான் ஒரு மகனின் ஆதூரத்துடன் அணுகி எனக்கு தேவையானதை நான் கேட்காமலேயே தந்தாய் ஒரு நண்பனாக என்னுடன் விவாதித்தாய் பல்வேறு விஷயங்களை வியக்கத்தக்க வகையில்  நாம் கருத்தொருமித்தோம் ஒரு…

நாவல்  தினை              அத்தியாயம்  பத்தொன்பது          CE 1900

     * எங்கே வந்திருக்கிறோம் என்று புரியவில்லை. இருட்டு மூடியிருந்தாலும் பகலா இரவா என்ற அடுத்த கேள்விக்கும் குயிலியிடம் பதில் இல்லை. ஒரு சௌகரியத்துக்காகக் கற்பித்துக்கொண்ட காலக் கணக்கு எங்கோ நின்று இயக்கம் நிலைத்து விட்டது.  இறங்க வேண்டாம்   காலப் படகு…

நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன்

துயர் பகிர்வோம்: நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன். இனிய நண்பர், நாடகநெறியாளர்; கலைஞர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-6-2023 சனிக்கிழமை அன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை நம்பமுடியாமல் இப்பொழுதும் இருக்கின்றது. பழகுவதற்கு மிகவும் அன்பான, பாசமான ஒரு நண்பரை இழந்து…

ஜனநேசன் என்ற படைப்பாளியும் மொழிக்கலைஞனும் – நூல் அறிமுகம்

தேனிசீருடையான் சொல்லப்படாத கதைகள். ஜனநேசன். பாரதி புத்தகாலயம். பக்கம் 92. விலை 110/ முதல் பதிப்பு டிசம்பர் 2022 நூல் அறிமுகம்.  எளிய மனிதர்களைப்பற்றிய எளிமையான கதைகள். விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைப்பாடு ரத்தமும் சதையுமாய் எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது. எல்லாமே சின்னஞ்சிறு கதைகள்.…

திரை

ஸிந்துஜா   காசி ஐயாவின் வீட்டை அடைந்த போது மணி எட்டாகி விட்டது. அவரைப் பார்த்து, வந்த காரியம் பங்கமெதுவுமில்லாமல் நடந்து விட்டால், வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்து விட்டு கிரவுண்டுக்கு ஓட வேண்டும். ஒன்பது மணிக்குள் அங்கு நிற்காவிட்டால் அவன் இடத்தைக் கபளீகரம்…

அப்பாவின் கை பற்றி…

ஆர். வத்ஸலா பிஞ்சு வயதில் அப்பா கை பற்றி உலக அற்புதங்களை காண பழகுகையில் கண்டேன்  மின்மினி பூச்சியையும் அதன் வால்விளக்கையும் அப்பாவிடம் கேட்டேன் சந்திரன் இருக்கும்போது மின்மினி பூச்சிக்கு விளக்கெதெற்கென அப்பா சொன்னார் – ‘என் கண்ணே, மின்மினி பூச்சி…

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்: அங்கம் -2 காட்சி -3 பாகம் -1

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்    அங்கம் -2 காட்சி 2  பாகம் -1 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா  ++++++++++++++++++++++++   நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன]  ஒத்தல்லோ :  வெனிஸ் சாம்ராஜிய  ராணுவ ஜெனரல் [கருந்தளபதி]   [45 வயது]  மோனிகா :  செனட்டர்  சிசாரோவின் மகள்.  ஒத்தல்லோவின் மனைவி [25 வயது]  புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன்  [30 வயது]  காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது]  ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25]  சிசாரோ :  மோனிகாவின் தந்தை.  வெனிஸ் செனட்டர் [60 வயது]  எமிலியோ : புருனோவின் மனைவி.  மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர்.  பயாங்கா :  காஸ்ஸியோவின் கள்ளக் காதலி.  மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள்.   நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு  இடம் :  சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் ஒரு தெரு நேரம் : பகல் வேளை  பங்கெடுப்போர் :  சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக்.  [தளபதி ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] [கூட வந்த அறிவிப்பாளன் பியூகிள் ஊதிக் கூறுகிறான்] அறிவிப்பாளி;  சைப்பிரஸ்…

ஜெயமோகனுக்கு – பி கே சிவகுமார், திண்ணை, எனி இந்தியன் பற்றிய தகவல் பிழைகள் 

கோபால் ராஜாராம்  ஜெயமோகன் தன் வலை தளத்தில் திண்ணை பற்றியும் மற்றும் பி கே சிவகுமார் பற்றியும் எழுதியுள்ள கீழ்க்கண்ட பத்திகள் என் கவனத்திற்கு வந்தது. ‘பி.கே.சிவக்குமார் 2000 வாக்கில் எனக்கு அணுக்கமாக இருந்த திண்ணை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கோ.ராஜாராம்,…

சொல்வனம் இணையப் பத்திரிகையின்296 ஆம் இதழ்

அன்புடையீர்,                                                                                 12 ஜூன் 2023   சொல்வனம் இணையப் பத்திரிகையின் 296 ஆம் இதழ்,12 ஜூன் 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/          இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எலிசபெத் பிஷப்: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும் - நம்பி ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ – மீனாக்ஷி பாலகணேஷ் (அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும் தொடர்-3) தமிழ் நாவலின் விரியும் எல்லைகள் – ப. சகதேவன் ஒழிக தேசியவாதம்-2 – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) கனி மரம் - லோகமாதேவி தென்னேட்டி ஹேமலதா- பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் - காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் -18 ஆம் அத்தியாயம் இறை நின்று கொல்லுமோ? – கமலக்கண்ணன் – (ஜப்பானியப் பழங்குறுநூறு-26) சகோதரி  நிவேதிதையின் பார்வையில் இந்தியா - எஸ்ஸார்சி கதைகள்: மூங்கில் காடு - கமலதேவி தேவகுமாரன் – சியாம் வாசம்  - பாஸ்கர் ஆறுமுகம் சிதறும் கணங்கள் – காந்தி முருகன் குறுநாவல்கள் மார்க் தெரு கொலைகள்- பகுதி 4 - எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. ) நாவல்கள்:…