This entry is part 6 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா

 கொட்டுகிறது

எனது பால்கனியில்

மழை

வெளியில் துருத்திக் கொண்டிருக்கும் 

ஆஸ்பெஸ்டாஸ் பலகையின் மீது

செல்லம் கொஞ்சிக் கொண்டு

பாவம்!

தெரியும்  அதற்கும்

காலம் கடந்த பின் 

அன்பை மதிக்கத் தெரியாதவர் மேல்

அன்பை சொரிவது

தன்மானத்திற்கிழுக்கென்று 

Series Navigationமழையுதிர் காலம்நாட்டுப்பற்று 1