விநாயகர்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 5 of 8 in the series 24 செப்டம்பர் 2023


ஆர். வத்ஸலா


பல விநாயகர்கள் உண்டு
பூஜையறையில்
பர்மாவிலிருந்து அகதியாக நடந்து வருகையில்
ஒரு சிகை மழித்த பாட்டி தூக்கி வந்த பளிங்கு விநாயகர்
நிற்க வைத்தால் லொட்டென்று விழும் நவதானிய விநாயகர்
கற்பனை வளத்தால் மட்டுமே அது விநாயகர்
என்று ஒப்புக் கொள்ளக் கூடிய மொண்ணை உருவம் கொண்ட
நாள் நட்சத்திரம் பார்த்து
வெட்டிய எருக்கம் வேரில்
செதுக்கப் பட்ட
அரிய பொக்கிஷ
விநாயகர்
மரப் பொடியில் அருமையாக செதுக்கப்பட்ட
விநாயகர்
திருமணமானதும்
அம்மா ‌பிடித்த
முதல் விநாயகர்
ஒரு மாதிரி இருந்ததால்
எங்கள் வீட்டில் களி மண் விநாயகர்
கிடையாது
மற்றபடி விநாயகர்கள்
எல்லோரும்
எங்களுடன்
நிரந்தரமாக

Series Navigationசுனிதா…நிலவின் நீர்ப்பனிப் பாறைச் சேமிப்புக்கு நீரக வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *