Posted in

வேலி

This entry is part 2 of 8 in the series 4 ஏப்ரல் 2024

ஆர் வத்ஸலா

அன்றைக்குள் மென்பொருளை முடித்து
பயனாளி நிறுவனத்திற்கு
அனுப்பி வைக்க வேண்டுமென்று
மேலதிகாரி உத்தரவிட்டதால்
நள்ளிரவு தாண்டி கிளம்பிய என்னை
என் இரு சக்கர வாகனம்
பழக்க தோஷத்தில்
மேய்ச்சலுக்கு பின்
தன்னிச்சையாக
வீடு திரும்பும்
பசுக்களைப் போல்
என்னிடம் எதுவும் கேட்காமல்
விளக்குகள் எரியாத
வெறிச்சோடிக் கிடந்த
என் தெருவுக்கு
கொண்டு சேர்த்தது
கவலையில்லாமல்
முன்னேறிய நான்
தெரு முடிவில்
கவனித்தேன்
ஒரு காவல்துறை அதிகாரியை
கொஞ்சம் பயமாக இருந்தது

Series Navigationநாடகம் – ஸ்தீரி பருவம்-   அ. மங்கை.நான் மனிதன் அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *