ஜெயானந்தன்.
அ.மங்கையின் புதிய நாடகப் படைப்பாக “ ஸ்தீரி பருவம், மலர்ந்துள்ளது.
போரின் கொடூரத்தையும், பேரழிவையும் பெண்களின் பார்வையில் பார்க்கப் படுகின்றது.
மகாபாரத்தின், ஸ்தீரி பருவத்தின் காட்சிகளை மேடையின் பின்புறத்தில்
டிரஸ்கி மருதுவின் கைவண்ணத்தில் ஓவியங்களாக அமைத்து, நாடக நடிகர்கள் உடைகள் வெண்மையில் கொடுத்துள்ளனர். அமைதிக்கான நிறமாக வெண்மையே ஓளிரட்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்பதே , மங்கையின் எண்ணமாக தெரிகின்றது.
மகாபாரதப்போர், இன்னும் முடியவில்லை. அது ஈழப்போராக, உக்ரைன்-ரஷ்யப் போராக, இஸ்ரேல்- காஸா போராக தொடர்கின்றது என்று சொல்லும்,
மங்கை, இந்த போர்களின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டது பெண்கள்தான்,
என்ற குரலை, உயர்த்திப்பிடிக்கன்றார் .
காந்தாரியும்- குந்தியும் , பாரதப்போரின் முடிவில், மாண்டுக்கிடக்கும்,
மனித உடல்களைக்கண்டு, கதறி அழும் காட்சியை, நாடக துவக்கக்காட்சியாக அமைத்துள்ளார். இந்த போரே, கிருஷ்ணனின்
சூழ்ச்சியால்தான் நடந்தது என காந்தாரி ஓலமிட, இல்லை இது நடக்கவேண்டிய போர்தான் என கிருஷ்ணன், விளக்கின்றார்.
இந்த போர்களை, பெண்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்கமுடியுமென,
கிருஷ்ணன் விளக்கமாக சொல்லி செல்வதாக நாடகக் காட்சிகள் அமைந்துள்ளது. ஆனால்,” பாதிக்கப்படுவது பெண்கள்தானே கிருஷ்ணா,
இங்கே கதறி அழும், அமங்கலிகளைப்பார்” என, காந்தாரி காட்டும் காட்சிகள், பெண்களின் துயரத்தை தூக்கிப்பிடிப்பதாக , நாடகம்
செல்கின்றது.
இந்த நாடகத்தினை, மேலும் கூர்மையாக்கும் விதமாக, மங்கை பல்வேறு விதமான , நாடகத்தன்மைகளை புகுத்தியுள்ளது, இந்நாடக்கதை, மேலும்
சிறப்பாக்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக , பலூஸ்தானிய நாடக
ஆசிரியை தாரா ஹக்கினுடைய , போர் பற்றிய மூன்று நிமிட நாடத்துண்டையும், இலங்கை பெண்ணியவாதி சரளா இமானுவிலுவின் தோற்றமும், ஈழக்கவி நுஃமான், புதுவை கவி ரத்னதுரை , போர் கவிதைகளை தோன்றுமாறு செய்துள்ளார்.
இந்நாடகம் வடலூர் வள்ளாரின் மேன்மையான கவிதை வரிகள்,
“ கருணை இல்லா ஆட்சி கடுகி ஓழிக…………………………………..
………………………………………………………………….”
முடிவடைகின்றது.
எம் எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் துணையுடன், மறைந்த கல்வியாளர் மீனா சுவாமிநாதன் நினைவாக, சென்னை, ஆசிய இதழியல் கல்லூரியில், வருகின்ற , ஏப்ரல் 6&7 தேதிகளில் மேடையேற உள்ளது.
நன்றி – தி இந்து ஆங்கில நாளிதழ்.
- நாடகம் – ஸ்தீரி பருவம்- அ. மங்கை.
- வேலி
- நான் மனிதன் அல்ல
- சுழலும் பூ கோளம்
- வாக்குமூலம்
- அனுபவம்
- என் பெயர்
- கன்னியப்பன் கணக்கு