This entry is part 7 of 7 in the series 9 ஜூன் 2024

வெங்கடேசன் நாராயணசாமி

தபாலில் அனுப்பியுள்ளது

விசித்திர விதைகளை

சீனா அமெரிக்காவிற்கு.

கண்டித்துள்ளார் அமெரிக்க உளவுத்துறையை

கவனக்குறைவிற்காக

அமெரிக்க ஜனாதிபதி.

சுமந்து வந்தோமிங்கு

விசித்திர வாதனா விதைகளை

கவனக் குறைவினால்.

இங்கிருந்து மீண்டும்

சுமந்து செல்வோம்

இவ்விசித்திர வாதனா விதைகளை

இதே கவனக் குறைவினால்.

உள்ளிருக்கும் உள்ளானை

ஓயாது உள்கிறோமா,

இல்லையா,

என்று

உளவு சொல்பவரும்

உறங்குகிறார்

இவ்வும்பரரங்கில்.

முரசுக் கட்டிலிலுறங்கும்

இம்மோசிகீரனாரைக்

கண்டிக்காமல்

கவனமாகக்

கவரி வீசும்

தகடூர் எறிந்த

இச்சேரமான் பெருஞ்சேரல்

இரும்பொறை யார்?

Series Navigationதனிமையின் இன்பம்