This entry is part 8 of 9 in the series 28 டிசம்பர் 2025

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்:

(THE CONQUEST OF HAPPINESS)

பாகம் – 1

மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள்

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்!

(BERTRAND RUSSEL)

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:

லதா ராமகிருஷ்ணன்

அத்தியாயம் 6

பொறாமை

கவலையை அடுத்து மகிழ்ச்சியின்மைக்கான மிகவும் வலுவான காரணங்களில் ஒன்று பொறாமை. பொறாமை என்பது மிக அதிக அளவு உலகளாவியதாய் இருக்கும் மனித வேட்கைகளில் ஒன்று என்று கூறுவேன். குழந்தைகளிடம் இது அவர்கள் ஒரு வயது நிரம்பியவர்களாக இருக்கும்போது மிகவும் வெளிப்படையாகக் காணக் கிடைக்கும். ஒவ்வொரு கல்வியாளரும் இதை மிகவும் கனிவான மரியாதையோடு அணுகி சரிப்படுத்தவேண்டியது அவசியம். இரண்டு குழந்தைகளில் ஒன்றை அலட்சியம் செய்து, மற்ற குழந்தைக்கு அதிக கவனம் தருவது உடனடியாக அந்த முதல் குழந்தையால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது; வெறுக்கப்படுகிறது. பகிர்வு நீதி முழுமையானது இறுகியது மாறாதது

குழந்தைகளைக் கையாளும் பொறுப்பில் உள்ள எல்லோராலும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படவேண்டியது. ஆனால், குழந்தைகள் தங்களுடைய பொறாமையை, காழ்ப்புணர்ச்சியை (இது பொறாமையின் தனிச்சிறப்பான வடிவம்) வெளிப்படுத்துவதில் வளர்ந்த மனிதர்களை விட சற்றே அதிக வெளிப்படையானவர்கள்.  இந்த உணர்வு வளர்ந்தவர்களிடம் இருப்பது போலவே குழந்தைகளிடமும் இருக்கிறது. உதாரணத்திற்கு, வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களை எடுத்துக்கொள்ளுங்கள். எங்கள் வீட்டிலிருந்த பணிப் பெண்களில் ஒருவர், திருமணமானவர்,  கருவுற்றபோது அவர் கனமான பொருட்களைத் தூக்கலாகாது என்று நாங்கள் சொன்னோம். உடனடி விளைவு, மற்றவர்களும் கனமானவற்றைத் தூக்குவதை நிறுத்தினார்கள். தேவைப்படும் அத்தகைய வேலைகளை வேலைகளை நாங்களே செய்துகொள்ளும்படி யாகியது.  

பொறாமை என்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. (1)Heraclitus  உறுதியாக (2)Ephesus இன் குடிமக்கள் அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டியவர் என்கிறார். ’நம்மில் யாரும் முதலாவதாக இருக்கலாகாது’லாம் என்று அவர்கள் சொன்னது தான் காரணம். கிரேக்க நிலங்களில் நடந்தேறிய மக்களாட்சி இயக்கங்களில் ஏறத்தாழ எல்லாமே இந்த உனர்வெழுச்சியால், தீவிர எண்ணப்போக்கால் தூண்டப்பட்டவையே. நவீன கால மக்களாட்சியை பொறுத்த அளவிலும் இதுவே தான் உண்மை. மக்களாட்சி ஒரு இலட்சியார்த்தக் கருத்தியலில் ஆகச் சிறந்த அரசு நிர்வாக வடிவமாக இருப்பது அரசு நிர்வாகமாக இருப்பது உண்மைதான். இந்த கருத்தியல் உண்மையென்று நானும் கருதுகிறேன். ஆனால், நடைமுறை அரசியலின் எந்த துறையிலுமே இலட்சியார்த்தக் கருத்தியல்கள் பெரிய அளவு மாற்றங்களை கொண்டுவரும்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தவையாக இல்லை. மாற்றங்கள் ஏற்படும் போது அவற்றை நியாயப் படுத்தும் கருத்தியல்கள் எப்போதுமே மக்களாட்சித் தத்துவக் கருத்தியல்களுக்கு தூண்டுகோலாய் எழுச்சி ஊட்டுவதாய் அமையும் தீவிர உணர்வெழுச்சி சந்தேகத்திற்கிடமில்லாமல் பொறாமையுணர்வே. என்ற தீவிரப் பற்றி ஆகும் மேடம் ரோலண்டின் நினைவுக்குறிப்புகளை வாசியுங்கள். மக்களிடம் மிகுந்த அன்பும் மிகுந்த அன்பும் அபிமானமும் கொண்ட உன்னதப் பெண்மணியாக அடிக்கடி முன்வைக்கப்படும் அவர் அத்தனை தீவிரமான ஜனநாயகவாதியாக மாறியதற்குக் காரணம் ஒரு மேற்படி வர்க்க கோட்டை வீட்டுக்குப் போயிருந்தபோது அங்கிருந்த பணியாளர்களின் கூடத்திற்குள்ளாகப் போகும்படி அனுப்பி வைக்கப்பட்ட அனுபவமே என்பதை நீங்கள் காண்பீர்கள்.

 சராசரியான, மரியாதைக்குரிய பெண்கள் மத்தியில் பொறாமை அசாதாரணமான அளவுக்குப் பெரிய பங்கு வகிக்கிறது. நீங்கள் ஒரு மாற்றுக்கலை நிகழ்வில் அமர்ந்திருக்க, நன்றாக நன்றாக உடையணிந்திருந்த இன்னொருத்தி கார் பக்கமாக நடந்துசென்றால், மற்ற பெண்களின் கண்களை கவனியுங்கள். அவர்கள் ஒவ்வொருவரும், நேர்த்தியாக உடையணிந்திருப்பவர்களைத் தவிர்த்து, அந்தப் பெண்ணை அத்தனை காழ்ப்புணர்ச்சி  நிரம்பிய கண்களோடு பார்ப்பார்கள். அந்தப் பெண்ணைப் பழிக்கத்தக்க, அவதூறு செய்யத்தக்க, குறிப்புகளைத் தரஒ பிரயாசைப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த பொதுவான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான் புரளி, அவதூறு பேசுவதற்கான பேரார்வம்; இன்னொரு பெண்ணைப் பற்றிய எந்தக் கதையும் உடனடியாக நம்பப்படுகிறது. அதற்கான ஆதாரம் மிக மேலோட்டமானதாக, அற்பமாக இருந்தாலும். உயரளவு ஒழுக்கம் என்பது இதே நோக்கத்திற்கே பயன்படுகிறது. அதற்கு எதிராகக் குற்றமிழைக்க வாய்ப்புக் கிட்டியவர்கள் மற்றவர்களின் பொறாமைக்காளாகிறார்கள். அவர் களை அவர்களது பாவங்களுக்காகத் தண்டிப்பது ஒழுக்கமாக, அறநெறியாக பாவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்தவகையான ஒழுக்கம் நிச்சயமாக அதனள விலேயே பெரிய விருதாக அமைகிறது

 இதே விதமான அம்சத்தை ஆண்களிடமும் காணலாம். ஒரே வித்தியாசம். பெண்கள் மற்ற எல்லா பெண்களையும் தங்களுடைய போட்டியாளர்களாக பாவிக்கிறார்கள் .ஆனால் ,ஆண்களுக்கு இந்த உணர்வு தனது துறையைச் சேர்ந்த மற்ற ஆண்கள் விஷயத்தில்தான் ஏற்படுகிறது. வாசகரே, நீங்கள் எப்போதாவது ஓர் ஓவியனைப் இன்னொரு ஓவியனிடம் பாராட்டிப் பேசுமளவு விவேகமற்றவராக இருந்ததுண்டா? ஒரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவரைப் பற்றி அதே கட்சியைச் சேர்ந்த இன்னொருவரிடம் பாராட்டிப் பேசியதுண்டா? ஒரு எகிப்தியலாளரைப் பற்றி இன்னொரு எகிப்தியலாளரிடம் பாராட்டிப் பேசியது உண்டா? அப்படிப் பேசியிருந்தால் நீங்கள் பொறாமை. பொச்சரிப்பை வெடித்துச் சிதறச் செய்திருப்பீர்கள்.LOIBNIZக்கும்  HUGHENSக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்தில் நியூட்ரினுக்கு மனநிலை பிறழ்ந்து விட்டது. என்று நம்பப்பட்ட விஷயம் குறித்து வருந்திப் பேசும் கடிதங்கள் கணிசமாக உள்ளன. ”எத்தனை வருத்தமான விஷயம் இது? திருவாளர் நியூட்டனின் ஈடு இணையற்ற மேதமை இப்படி மனநிலை பிறழ்வால் இருட்டடிப்பு செய்யப்படுவது எத்தனை வருத்தமான விஷயம்”, என்று புலம்பும் கடிதங்கள் கணிசமாக உள்ளன. இந்த இரண்டு சிறந்த ஆண்கள் இவ்வாறு அடுத்தடுத்த கடிதங்களில் தொடர்ச்சியாக முதலைக்கண்ணீர் சிந்தினார்கள் – உள்ளூர் ஆனந்தத்தோடு.  சொல்லப்போனால், அவர்கள் அப்படிப் போலியாக வருந்திப் புலம்புவதற்கு காரணமான விஷயம் நடக்கவேயில்லை.  நியூட்டனின் சில விசித்திர நடவடிக்கைகள் அப்படி ஒரு வதந்தியை பரப்பிவிட்டன. அவ்வளவே.

 சாதாரண மனித இயல்பின் எல்லா குணநலன்களிலும் மிகவும் துரதிஷ்டம் பிடித்தது பொறாமைதான்; பொறாமை பிடித்த மனிதன் இன்னொருவருக்கு துரதிஷ்டம் ஏற்பட வேண்டும் என்று விரும்புவதோடு மட்டுமல்லாமல் தன்னால் முடிந்தபோதெல்லாம் அதை மற்றவருக்கு உண்டாக்கவும் செய்கிறார். அதற்கான எந்தத் தண்டனையுமில்லாமல். ஆனால், அவரது பொறாமை காரணமாக அவரும் மகிழ்ச்சியற்றவராக இருக்கிறார். தன்னிடம் இருப்பவற்றைக் கொண்ட ஆனந்தம் அடைவதற்கு பதிலாக மற்றவர்களிடம் இருப்பவற்றிலிருந்து வலி துக்கம் அனுபவிக்கிறார். அவரால் முடியுமானால் மற்றவர்களிடம் உள்ள மேலான அனுகூலங்களை அவர்களுக்கு இல்லாமல் ஆக்குகிறார் .அப்படிச் செய்வது அந்த நன்மைகள் அனுபவங்களை தான் பெற்றால் எத்தனை ஆனந்தத்தை தருமோ அதே அளவு ஆனந்தத்தை அவருக்கு அளிக்கிறது. இந்தத் தீவிர விருப்பம் கட்டவிழ்த்து ஓட அனுமதிக்கப்பட்டால் அது எல்லாவிதமான உன்னதங்களையும் அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்ததாகிறது. மிக அசாதாரணத் திறனாற்றலின் பயனுள்ள செயல் விளைவுக்குக்கூட பாதகம் விளைவிப்பதாகிறது. ஓர் ஊழியர் தனது பணியிடத்திற்கு நடந்து செல்லும் போது எதனால் ஒரு மருத்துவர் தனது நோயாளிகளை பார்க்க காரில் செல்ல வேண்டும்? மற்ற மனிதர்கள் பஞ்சபூதங்களின் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பொழுது ஓர் அறிவியல் ஆராய்ச்சியாளர் மட்டும் ஏன் ஒரு கதகதப்பான அறையில் தனது நேரத்தை கழிக்க அனுமதிக்கப்பட வேண்டும்? மிக ஆசாதாரணத் திறனாற்றலை – உலக நலனுக்கு, மேம்பாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திறனாற்றலைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒருவர் அவருடைய இயந்திரத்தனமான வீட்டுப் பணிகளின் சலிப்பிலிருந்து காப்பாற்றப்பட வேண்டிய அவசியம் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு பொறாமையால் தகுந்த பதில் எதையும் கண்டுபிடிக்க இயலாது. என்றாலும், நல்ல வேளையாக மனித இயல்பில் இதற்கு ஈடு செய்வதான ஒரு தீவிரப் பற்றும் இருக்கிறது. அதாவது, வியந்து பாராட்டும் தன்மை. மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகமாக விரும்பும் எவரும் வியந்து பாராட்டும் தன்மையை அதிகரிக்கவும், பொறாமையைக் குறைக்கவும் விரும்பவேண்டியது இன்றியமையாததாகிறது.

 பொறாமையை குணப்படுத்த இங்கே என்ன உள்ளது? துறவிகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு ‘தான்’ என்றஉணர்வு அற்ற குணமாக்கல் இருக்கிறது – துறவிகள் மற்ற துறவிகளைப் பார்த்துப் பொறாமைப்படல் எந்த விதத்திலும் அசாத்தியமானது இல்லை என்றாலுங்கூட.. இன்னும் குறுகிய தூண் ஒன்றில் இன்னும் அதிக நேரம் வேறொரு துறவி நின்றிருந்தார் என்பது தெரியவந்தால் St. Simeon Stylites  முழு நிறைவான மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. ஆனால், துறவிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத அளவில், சாதாரண ஆண்கள் – பெண்களைப் பொறுத்தவரை –  பொறாமையை குணப்படுத்துவதற்கான ஒரே மருந்து மகிழ்ச்சி தான். இதில் உள்ள சிரமம் என்னவென்றால், பொறாமையே மகிழ்ச்சிக்கான மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது தான். 

பொறாமை என்பது குழந்தைப் பருவத்தில் அனுபவிக்கக்கூடிய துரதிர்ஷ்டங் களால்தான் மிகத் தீவிரமாக அவர்களிடம் வளர்க்கப்படுகிறது ஊக்குவிக்கப் படுகிறது என்று நான் எண்ணுகிறேன். ஒரு குழந்தை தனது சகோதரனும் சகோதரியும் தன்னைவிட அதிகமாக விரும்பப்படுகிறார்கள், முன்னுரிமை அளிக்கப்படுகிறார்கள் என்பதை அறியும் பொழுது அதனிடம் பொறாமை ஒரு குணமாக வளர்கிறது. அந்தக் குழந்தை வீட்டைத் தாண்டி வெளியுலகில் காலடி எடுத்துவைக்கும் போது அது தன்னை பலிகடாவாக்கும் அநீதிகளைத் தேடுகிறது. அவை தோன்றினால் உடனடியாக அவற்றைக் கவனிக்கிறது. அப்படியான அநீதிகள் ஏற்படாவிட்டாலும் கூட அவை ஏற்படுவதாகக் கற்பனை செய்து கொள்கிறது. அத்தகைய ஒரு மனிதன் மகிழ்ச்சியற்றவனாக இருப்பது தவிர்க்க முடியாததாகிறது. எல்லா நேரமும் அந்த நண்பனால் கற்பனைசெய்யப்படும் புறமொதுக்கல்களைத் தவிர்க்கவேண்டும் என்று ஞாபகப்படுத்திக்கொள்ள இயலாத நட்பினருக்கு அவன் எரிச்சலூட்டும் தொந்தரவாக மாறுகிறான். யாருக்குமே தன்னைப் பிடிக்கவில்லை என்று நம்பத்தொடங்கிவிட்டவன் இறுதியில் தனது நடத்தையால் தனது அந்த நம்பிக்கையை உண்மையாக்கி விடுகிறான். 

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் இன்னொரு துரதிஷ்டமும் இதே விதமான விளைவுகளைக் கொண்டது. அது பெற்றோர்த்தன்மையற்ற பெற்றோர்கள் அமைவது. தன்னைவிட அதிகமான அளவு அன்பு செலுத்தப்படும் சகோதரர் சகோதரி இல்லையென்றாலும்கூட ஒரு குழந்தை மற்ற குழந்தைகள், மற்ற குடும்பங்களில் உள்ள குழந்தைகள், அவர்களுடைய தாய் தந்தையாரால் தன்னுடைய பெற்றோரிடமிருந்து தனக்கு கிடைக்கும் அன்பை விட அதிக அளவு அன்பை பெறுகிறார்கள் என்பதை கவனிக்கக்கூடும். இது அவனை அந்த மற்ற குழந்தைகளையும் தன்னுடைய சொந்த பெற்றோர்களையும்கூட வெறுக்கச் செய்யும். அவன் வளர்ந்து பெரியவனாகும்போது அவன் தன்னை ஒரு Ishmaelலாக உணர்வான். சிலவகை மகிழ்ச்சி எல்லோருக்கும் இயல்பான பிறப்புரிமை. அது கிடைக்காமலிருப்பது அவர்களை ஏறத்தாழ கசப்பும் வெறுப்பும் நிறைந்த கோணல்மனக்காரர்களாய் தவிர்க்க முடியாத அளவு மாற்றுகிறது. 

ஆனால், பொறாமைக்காரர் இப்படிக் கூறக்கூடும்: “பொறாமைக்கான சிறந்த நிவாரணம் மகிழ்ச்சி என்று என்னிடம் சொல்வதால் என்ன பயன்? நான் பொறாமையாக உணர்வது தொடரும் வரை என்னால் மகிழ்ச்சியடைய முடியாது. ஆனால், நீங்களோ, நான் மகிழ்ச்சியைக் கண்டறியும் வரை பொறாமைப்பட்டுக் கொண்டே தான் இருப்பேன் என்று கூறுகிறீர்கள். ஆனால் நிஜ வாழ்க்கை ஒருபோதும் இத்தனை தர்க்கபூர்வமாக இருப்பதில்லை. ஒருவருடைய பொறாமைக்கான காரணங்களை அறிந்துகொள்வது மட்டுமே அவற்றை குணப்படுத்திக்கொள்வதை நோக்கிய ஒரு நீளமான அடியெடுத்து வைப்பதற்குப் போதுமானது அல்ல. எல்லாவற்றையும் ஒப்புநோக்கிப் பார்க்கும் பழக்கம் மிகவும் அபாயகரமானது. இனிமையான விஷயம் நடந்தால் அதை முழுமையாக அனுபவிக்கவேண்டும். வேறொருவருக்கு நடந்து கொண்டிருக்கும் வேறொரு விஷயம் அளவு அத்தனை இனிமையானதல்ல இது என்று எண்ணத் தலைப்படக்கூடாது நாம். இதுவொரு அருமையான சூரியவொளிப் பகற்பொழுதுதான். இது வசந்த காலம். பறவைகளை இனிமையாகப் பறந்து கொண்டிருக்கின்றன; பாடிக் கொண்டிருக்கின்றன. மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால்,  ஸிஸிலியில் வசந்த காலம் இதைவிட ஆயிரம் மடங்கு அதிக அழகாக இருக்கும். பறவைகள் ஹெலிகான் சோலைகளில் இதைவிட மிக அழகாக இருக்கும் .இதைவிட மிக இனிமையாகப் பாடும். ஷாரனில் இருக்கும் ரோஜா என் தோட்டத்தில் உள்ள எல்லா ரோஜாக்களையும் விட அதிக அழகாக இருக்கும் என்பார் பொறாமைக்காரர். இத்தகைய எண்ணங்கள் அவர் மனதை நிரப்புகையில் சூரிய ஒளி மங்கிவிடுகிறது; பறவைகளின் பாடல் அர்த்தமற்ற கீச்சொலியாகிறது; பறவைகள் கணநேர கவனத்திற்குக் கூட அருகதையற்றதாகி விடுகின்றன. வாழ்வின் மற்ற எல்லா மகிழ்ச்சிகளையும் இதேவிதமாகவே அவர் கையாளுகிறார். ’என் மனதுக்கு இனியவள் மிகவும் அழகானவள். நான் அவளை காதலிக்கிறேன். அவளும் என்னைக் காதலிக்கிறாள். ஆனால், ஷீபாவின் ராணி இன்னும் எத்தனை அற்புத அழகு வாய்க்கப்பெற்றவளாக இருந்திருப்பாள்… எனக்கு மட்டும் சாலமனின் வாய்ப்புகள், வழிவகைகள் கிடைத்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்….” இத்தகைய ஒப்புநோக்கல்கள் எல்லாம் அர்த்தமற்றவை; அபத்தமானவை.ஷீபா நாட்டு ராணியோ, அடுத்த வீட்டுக்காரரோ – யார் நம்முடைய அதிருப்திக்குக் காரணமாக இருந்தாலும் சரி –  இரண்டுமே வீண் தான். விவேகமுள்ள மனிதருக்கு, இன்னொருவரிடம் தன்னிடம் இருப்பதல் லாமல் வேறொன்றிருப்பதாலேயே அவருக்கு அவரிடமிருப்பது மகிழ்ச்சி தராமல் போய்விடாது. 

 பொறாமை என்பது தீய குணத்தின் ஒரு வடிவம். பகுதியளவு அறவியல் சார்ந்தது; பகுதியளவு அறிவு சார்ந்தது. இது விஷயங்களை அதனளவில் பார்க்காமல் பிறவற்றோடு தொடர்புடைய அளவில் மட்டுமே பார்ப்பதில் அடங்கி யிருக்கிறது. நான் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு சம்பாதிக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம் எனவே. நான் திருப்தி அடைந்திருக்க வேண்டும். ஆனால், நான் என்னை விட எந்தவிதத்திலும் மேலானவனாக இல்லாத இன்னொருவர் என்னுடைய சம்பளத்தைப் போல இரண்டு மடங்கு சம்பாதிக்கிறார் என்று கேள்விப்படுகிறேன். நான் பொறாமைக் காரனாக இருக்கும் பட்சத்தில் உடனே ’நான் போதுமான அளவு சம்பாதிக்கிறேன் என்பதில்’ எனக்குக் கிடைக்கும் திருப்தி மங்கிவிடுகிறது. ’எனக்கு அநியாயம் நடக்கிறது என்பதான உணர்வு என்னை அரித்துத் தின்னத் தொடங்குகிறது. இதற்கெல்லாம் தகுந்து சிகிச்சையும் நிவாரணமும் மன ஒழுங்கு மனக்கட்டுப்பாடுதான்.  பயனற்ற எண்ணங்களை சிந்திக்காமல் இருக்கும் பழக்கம்தான். சொல்லப்போனால். மகிழ்ச்சியை விட அதிகம் பொறாமைப்படத் தக்க எதுவும் இருக்கிறதா என்ன? நான் என்னிடமுள்ள பொறாமை யிலிருந்து என்னைக் குணப்படுத்திக்கொண்டுவிட்டால், பின் என்னால் மகிழ்ச்சியைக் கையகப்படுத்த முடியும். அதன் பின், மற்றவர்களின் பொறாமைக்காளாகும் தகுதிபெற்றவனாகிவிடுவேன் நான்! என்னுடைய சம்பளத்தைப்போல் இரண்டு மடங்கு  சம்பாதிக்கும் மனிதன் கண்டிப்பாக அவரைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக வைத்திருப்பவரைப் பற்றிய எண்ணங்களால் சித்திரவதைப் பட்டுக்கொண்டிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

 இப்படியே இது போய்க்கொண்டிருக்கும்.

1.ஹெராக்ளிடஸ் (Heraclitus) என்பவர், பண்டைய கிரேக்கத்தின் எபேசஸ் நகரத்தைச் சேர்ந்த, கிமு 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தத்துவஞானி, அவர்எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது‘ (Everything is in flux) மற்றும்ஒரே ஆற்றில் இருமுறை நுழைய முடியாதுஎன்ற புகழ்பெற்ற வாசகங்கள் மூலம் மாற்றம் (Change) மற்றும் பிரபஞ்சத்தின் இயல்பு பற்றிய தனது தத்துவங்களுக்காக அறியப்படுகிறார்

2. எபேசஸ் (Ephesus) என்பது துருக்கியில் உள்ள ஒரு பழங்கால நகரம், இது கிரேக்கம் மற்றும் ரோமப் பேரரசுகளின் கீழ் ஒரு முக்கிய வணிக மற்றும் கலாச்சார மையமாக இருந்தது

3.Madam Roland (மேடம் ரோலண்ட்) பற்றி தமிழில் தேடும்போது, அவர் பிரெஞ்சுப் புரட்சியின் முக்கிய பெண்மணியானதால், அவரது பெயர்ரோலண்ட்” (Roland) எனத் தமிழிலும் குறிப்பிடப்படுகிறது; அவரைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் வரலாறு, அரசியல் சார்ந்த கட்டுரைகள், அல்லதுரோலண்ட் காப்பியம்” (La Chanson de Roland) போன்ற இலக்கியக் குறிப்புகள் மூலம் கிடைக்கின்றன

(Gottfried Wilhelm Leibniz) என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பல்துறை மேதை (கணிதவியலாளர், தத்துவஞானி) ஆவார்.

ஹ்யூகன்ஸ் (Huygens) என்பது டச்சு கணிதவியலாளர், வானியலாளர் மற்றும் இயற்பியலாளர் கிறிஸ்டியன் ஹ்யூகன்ஸைக் (Christiaan Huygens) குறிக்கும்

St.Simeon Stylites  ஒரு கிறித்துவத் துறவி.தூண்களில் வசித்தவர், அங்கிருந்தபடியே மத போதனைகளை மேற்கொண்டவர், உண்ணாநொன்பிருந்தவர், பிரார்த்தனை செய்தவர்.

(*இன்னுமுண்டு)

Series Navigationஇரைபச்சா பாசி – அத்தியாயம் ஆறு