This entry is part 5 of 13 in the series 9 ஆகஸ்ட் 2026

கடல்

              முத்துக்களையும் தரும்           

              மீன்களையும் தரும்

              முத்தெடுக்க

              மூச்சுப் பயிற்சி வேணும்.

              முயறசி அதிகம் வேணும்

              மீன்களைப் பிடிப்பது

              எளிதெனத் தோன்றும்

              பெரிய மீன்களைப் பிடிக்க

              ஆழ்கடலில் அதிக தூரம்

செல்லவேண்டும்..

              முத்தெடுப்பதோ

              மீன் பிடிப்பதோ

              அவரவர் தேர்வு

              முத்தோ மீனோ

              கடலுக்குள் இறங்காமல் கிடைப்பதில்லை.

              —-லாவண்யா சத்யநாதன்

Series Navigationதுக்கம்எழுத்து