This entry is part 3 of 10 in the series 18 அக்டோபர் 2026

சுப்ரபாரதிமணியன்

என் சாயத்திரை  நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள்  ஆவதை ஒட்டி நொய்யலை வரைவோம் என்ற ஓவியம் வரையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தேன்..

திருப்பூர் சுற்றுச்சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட என் சாயதிரை நாவல்  “ நமக்குத்  தேவை   அந்நிய செலவாணியா , சுற்றுச்சூழல் காப்பா “ என்ற கேள்வியை எழுப்பியது .

அது  வெளிவந்து 30 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் விடை  தராத கேள்வியாக தான் அது இருந்து கொண்டிருக்கிறது

0

 நொய்யல் கரையில் இருந்து நொய்யலை வரைதல் மற்றும் சாயத்திரை  நாவலில் இருந்து சில கதாபாத்திரங்களையும் நிகழ்வுகளையும் வரைதல் என்ற மையத்தில் அதை அழைப்பாக அனுப்பி வைத்திருந்தேன் .அப்போது ஓவியர்களின் சந்திப்பு திருப்பூர் சுற்றுச்சூழல் பூங்காவில் முகப்பிலிருந்து  என்பதாக அறிவிப்பு செய்திருந்தேன். கலந்து கொண்டார்கள் சில ஓவியர்கள்..

    அன்றைக்கு திருப்பூர் நொய்யல் ஆற்றில் செந்நிறமாக ஓடிய சாயக்கழிவு நீரால் பரபரப்பு ஏற்பட்டது என்று ஒரு செய்தி  கைபேசியில் வந்தது .திருப்பூர் சங்கிலிபாளையம் பகுதியில்  அதற்கு முதல் நாள் சாயக் கழிவு நீரை தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விட்டிருக்கிறார்கள். இந்த சாயக் கழிவுகளை அளவுக்கு மீறி வெளியேறியதால் நொய்யல் பல வண்ணங்களில் தெரிந்திருக்கிறது .திருப்பூர் மாநகராட்சி தெற்கு சட்டப்பேரவை தொகுதி ஏபிடி சாலை ஜம்மனை அருகில் உள்ள நொய்யல் ஆற்றுப்பகுதியில் இந்த சாயக்கழிவு நீர் பல வருடங்களாய் ஓடியதும்  என் கைபேசியில் செய்தியாய் வந்தது

நானும் அந்த செய்தியை பார்த்து அந்தப் பக்கம் போயிருந்தேன் அப்போது  நீரளவு குறைந்திருந்தது. சாயத்தின் அளவு குறைவாக இருந்தது .

அன்றைக்கு அந்த நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது இன்னொரு செய்தி

 நிகழ்வு முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது கைபேசியில் இன்னொரு செய்தி வந்தது. .

அது என்  வீட்டிற்கு போகும் வழியில் உள்ள திருப்பூர் கஞ்சம்பாளையம் பகுதியில் பெரிய தீ விபத்து என்று . துணி அட்டை  பாலிஸ்டர் கழிவுகள் போன்றவை தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன என்ற தகவல் வந்தது அங்கு சென்றபோது கேத்தம்பாளையம் அருகில் வாடகை இடத்தில் தகர கொட்டாய் போட்டு சிலர்  பனியன் நிறுவனங்களில் இருந்து வாங்கிய கட்டிங் வேஸ்ட், அட்டைப் பெட்டிகள் ,லேபிள்கள் ,பாலிஸ்டர் பொருட்களை வைத்து குடோன் நடத்தி வந்தனர் .கேத்தம்பாளையம் பகுதியில் பழைய நிறுவனங்களில்  கட்டிங் வேஸ்ட் அட்டைப்பெட்டி லேபில்கள் பாலிஸ்டர் கழிவுகள் போன்றவற்றை போட்டு வைத்திருக்கும் குடோனில் தீப்பற்றி எரிய மெல்ல மெல்ல கருமுகை பரவி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தொடர்ச்சியாக தீ பிழம்புகள் தெரிய  ஆரம்பித்ததைக் கண்டேன் .தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு பலமணி நேரங்கள் செலவழித்து அதை அணைத்தார்கள்…   பாலிஸ்டர் துணி மூட்டைகளில் காகித அட்டை பற்றியபின் பாலித்தீன் பைகள் சுலபமாக எரிந்தன தீயணைப்பு வீரர்கள் சிரமங்களுக்கு உட்பட்டார்கள்.

 இந்தக் கழிவு என்பது பெரிய செல்வம் என்பது பலருக்கும் தெரியும்.. கழிவு பொருட்களை சேகரித்து விற்பதில் பெரும் வணிக நிலமாக  கேத்தம்பாளையம் மாறிவிட்டது.. மிகுந்த சிரமப்பட்டு அவற்றை அணைத்தார்கள்

திருப்பூரில் பாலிஸ்டர் துணியும் அதன் கழிவுகளும் திருப்பூரினை மோசமாக நகரமாக மாற்றி விட்டது .திருப்பூரில் எந்த மூலைக்குச் சென்றாலும் இருக்கும்  குப்பைகளில் பாலிஸ்டர் கழிவு மூட்டைகள் இருப்பதை காணலாம் ..காட்டன் வேஸ்ட்ன்  சிறு சிறு துண்டுகள் கூட பணமாகும். அதேபோல பாலிஸ்டர் கழிவுத் தொழில்  சிரமம் என்றாலும் வருமானம் கிடைக்கிறது. திருப்பூரில் முக்கிய பகுதியில் இருந்து சீனா பங்களாதேஷ் மற்றும் பஞ்சாப் குஜராத்தில் இருந்து பாலிஸ்டர் துணைகளை க் கொண்டு வந்து குவித்து  விற்பனை நடக்கிறது. இந்த பாலிஸ்டர் கழிவுகளை போடும் இடமாக கேத்தம் பாளையம் மாறிவிட்டது. காட்டன்  வேஸ்டுகள் சிறு சிறு துண்டுகள் கூட பணமாகிறது. வேஷ்டி குடோன் வைத்திருப்பவர்கள் காட்டன் துணியை பிரித்து குவிக்கிறார்கள். இந்த கழிவு குடல்களை வைப்பதற்கு அனுமதி தேவையில்லை என்பதால் இவை அதிகமாய்க் கொண்டிருக்கின்றன.

. அது   தவிர பாலிஷ்டர் கழிவுகள் மூட்டை முட்டையாக வீதிகளில் கிடப்பதும் சாதாரணமாகிவிட்டது.  பாலிஸ்டர் கழிவுகளை மறு சுழற்சி செய்வது கஷ்டம் அல்ல. நிறைய செலவு வைக்கும்.  எரிபொருளாகலாம். அதன்  பல வகையான  உலர் கழிவுகளை சரியான முறையில் மறு பயன்பாடு செய்யலாம். பண  வெற்றி செய்வதற்கான நடவடிக்கைகள் சிலர் இறங்கி இருக்கிறார்கள். இந்தக் கழிவுகளை சிமெண்டாலைகள் ஆயிரம் டிகிரி சென்டிகிரிலுக்கு அதிகமான வெப்பத்தில்   பயன்பாட்டிற்கு கொண்டு வருகின்றன  அப்போது எந்த வாயும் வெளியேறுவதும் இல்லை ஆனால் கார்பன் கீழே தங்கி விடுகிறது. இந்த கழிவுகளை மறு பயன்பாடு செய்ய குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கழிவுகளும் மாநகராட்சியின் குப்பைகளும் சேர்ந்து திருப்பூரில் இடம் பிடிக்கின்றன. பாலிஸ்டர் கழிவுகளை  இரவு நேரங்களில் மறைமுகமாக வீசுகின்றனர் இவற்றையெல்லாம் ஒழிப்பதற்காக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை இந்த உலர் கழிவுகள் திருப்பூரில் பெரிய அளவில் குப்பை மலைகளை உருவாக்கி விட்டன. இது போன்றக்  கழிவுகள் தினசரி தேங்கிக் கொண்டே இருக்கின்றன. கார்பன் கழிவுகளாகவும்  அவைஅதிகரித்து விடுகின்றன.

 சாயம் தயாரிப்பதில் இருக்கிற வெவ்வேறு வகையான முறைகள் பற்றி சர்ச்சைகள் உள்ளன .. இயற்கை சாயமுறைகள் பல உள்ளன. முன்பு மத்திய தரைக்கடை பகுதியில் வாழ்ந்தவர்கள் ஆயிரக்கணக்கான  நத்தைகளை எடுத்து கொதிக்க வைத்து சாயம் தயாரித்து இருக்கிறார்கள் இந்த சாயத்தில் தான் பிராமின் என்ற மூலப்பொருள் இருந்திருக்கிறது.. இது ஒரு காலத்தில் தங்கத்தை விட அதிக விலைக்கு விற்பனையாகியிருக்கிறது இதில் செய்யப்பட்ட துணிகளை ரோமானிய பேரரசர்கள் மற்றும் உயர்ந்த பணக்காரர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் ..அது சந்தையில் உலக அளவில் அதிகரித்த போது உலக சந்தையை ஜெர்மன் போன்ற நாடுகளில் நாடுகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. பொருளை பிரித்தெடுத்து கடல் நீரை காட்சி வடிகட்டிய பின்னால் எஞ்சிய நீரில் குளோரின் வாயுவை செலுத்தி திரவத்தை உருவாக்கி பயன்படுத்தி இருக்கிறார்கள் ..மிக்சிகன் மாநிலத்தின்  திறந்த சதுப்பு நிலைகளுக்கு அடியில் பெரும் புரோமைடு போல் நீர் ஆதாரங்கள்  இருப்பதைக்  கண்டுபிடித்து அமெரிக்கா பெரும் சந்தை ஆக்கியது. புரோமனை   அடிப்படையாகக் கொண்டு பல சாயங்கள் உற்பத்தி செய்யப்பட்டு பெரும்  வெற்றி பெற்றனர் சாயக் கழிவுகளில் இருக்கும் வேதிய பொருட்களை அடையாளம் கண்டு கொள்வது சிரமம் தான்.அவை எளிதில் தீபற்றும்  இது போன்ற தீப்பற்றி எரியும் காரணங்களைக் கண்டு கொள்வதும் சிரமமாகத்தான் இருக்கிறது.

தீ பரவட்டும் என்று பகுத்தறிவாளர்கள்   சொன்னது மன்க்குப்பைகளை எரிக்க. இந்த கழிவு மலைக்குப்பைகளை அல்ல. ஆனால் கழிவுக்குப்பைகள் பெரும் பிரச்சினைகளாக இன்று உள்ளன.

புதிய தமிழக அரசு  நொய்யலைச் சுத்தம் செய்ய கணிசமானத் தொகையை ஒதுக்கியிருப்பதும் உதயம் பவுண்டேசன் அந்த நடவடிக்க்கைகளில் கணிசமான வெற்றி பெற்றிருப்பதும் திருப்பூரின் கழிவுப் பிரச்சினையை விட்டு விலகி மந்தில் வந்து நிலைத்திருக்கிற செய்திகளாகும்.

டெயில் பீஸ்:

 என் சாயத்திரை நாவல் சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் விருது பெற்றதும், ஆங்கில, மலையாள, கன்னட, இந்தி , வங்காள மொழிபெயர்ப்புகள் முன்பு வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.சமீபத்தில் தமிழக அரசின் பன்னாட்டு மொழிபெயர்ப்புத்திட்டத்தில்  சாய்த்திரை புதிய மொழிபெயர்ப்புக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதும் கன்னட மொழிபெயர்ர்பில் அது மீண்டும் வெளி வர இருப்பதும் கவனத்திற்குரிய செய்திகளாகும். )

Series Navigationசொற்களின் ஊடே சுழலும் பின்நவீனத்துவப் பிரபஞ்சம்: டீன் கபூரின் கவிதைகள் பற்றிய ஓர் ஆய்வுமகள்கள்…