Articles Posted by the Author:

 • அஞ்சலை அம்மாள் – நூல் மதிப்பீடு

      கோ. மன்றவாணன்   ராஜா வாசுதேவன் அவர்கள் எழுதிய அஞ்சலை அம்மாள் என்றொரு நூல் வெளிவந்துள்ளது. அண்மையில் வெளிவந்த நூல்களில் இது முக்கியமானது. மறைக்கப்பட்டோ அல்லது மறக்கப்பட்டோ உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரிசையில் உள்ளவர் கடலூர் அஞ்சலை அம்மாள். அவரைப் பற்றிய தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆனால் கடலூரில் உள்ளவர்களுக்கே அவரைப் பற்றித் தெரியவில்லை. இத்தனைக்கும் இரண்டு முறை கடலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 243 ஆம் இதழ் இன்று (28 மார்ச் 2021) வெளியிடப்பட்டது. இதன் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக… – நாஞ்சில் நாடன் காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம் – மைத்ரேயன் வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக் – மைத்ரேயன் பய வியாபாரியா ஹிட்ச்காக்? – பஞ்சநதம் ஜே.பி.எஸ். ஹால்டேன்: கிட்டத்தட்ட எல்லாமறிந்த மனிதர் – கடலூர் வாசு காருகுறிச்சியைத் தேடி… (2) லலிதா ராம் காடு […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 242 ஆம் இதழ் ஞாயிறு (14 மார்ச் 2021) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: காருகுறிச்சியைத் தேடி…   – லலிதா ராம் பரோபகாரம் – நாட்டுக்கு நாடு  (பாகம்- 5) சுந்தர் வேதாந்தம் கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்  – வித்யா அருண் காடு – லோகமாதேவி கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம்  – கடலூர் வாசு (பாகம்-8) பூமுள் கதைகள் – கமலதேவியின் குருதியுறவு நூலை முன்வைத்து  கா. சிவா இடவெளிக் கணினி  – பானுமதி ந. மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1 – ரவி நடராஜன் புவிக்கோளின் நான்கு வடமுனைகள் – கோரா   கதைகள்: குதிரை மரம்  கே.ஜே. அசோக்குமார் முகமூடி – எம். ஏ. சுசீலா நேனெந்து வெதுகுதுரா  -லலிதா ராம் ஒரு பெண் பற்றிய சொற்சித்திரம்  – குஷ்வந்த் சிங் […]


 • வடக்கிருந்த காதல் – நான்காம் பாகம்

  வடக்கிருந்த காதல் – நான்காம் பாகம்

    அழகர்சாமி சக்திவேல்      பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி.    இசைமரபு  ஆக  நட்பு  கந்தாக  இனியதோர்   காலை  ஈங்கு  வருதல்  வருவன்  என்ற  கோனது  பெருமையும்  அது  பழுதின்றி  வந்தவன்   அறிவும்  வியத்தொறும்  வியத்தொறும்   வியப்பிறந்தன்றே.    விமானத்தில் ஏறி உட்கார்ந்த நேரத்தில் இருந்து, புறநானூற்றின், இந்தப 217வது பாட்டுத்தான், எனது நினைவில், வந்து வந்து போனது. கோப்பெருஞ்சோழன், சொன்ன[படியே, அன்று பிசிராந்தை வந்து சேர்ந்தான். இந்தச் சந்திரனும், அப்படி வருவானா? எனது நினைவெல்லாம், சந்திரனும், அரண்மனையாரும்.    இப்போது நான், தாய்லாந்துவில் இருந்து, சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்துவிட்டேன். அங்கிருந்து, […]


 • ஒரு கதை ஒரு கருத்து – சுப்ரமண்யராஜுவின் நாளை வரும் கதை

      அழகியசிங்கர்             எண்பதுகளில் முக்கியமான எழுத்தாளர் சுப்ரமண்ய ராஜ÷. கிட்டத்தட்ட 100 கதைகள் எழுதியிருப்பார்.  இன்னும் பிரசுரமாக வேண்டிய கதைகள் இருப்பதாக இலக்கிய நண்பர் ஒருவர் சொல்கிறார்.  சுப்ரமண்ய ராஜ÷ கதைகள் என்று கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தில் 32 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு குறுநாவல்கள்.           பொதுவாக எல்லாக் கதைகளையும் கச்சிதமாக ஆரம்பித்து கதைகளைச் சுலபமாக முடிக்கிறார் சுப்ரமண்ய ராஜ÷.           அதில் நான் எடுத்துக்கொண்டு எழுத உள்ள கதை நாளை வரும் என்ற கதை.  அம்மா வீட்டிற்கு ஊருக்குப் போக […]


 • இலக்கியமும் காசநோயும்! – (மார்ச் 24, உலக டி. பி. தினம்)

  இலக்கியமும் காசநோயும்! – (மார்ச் 24, உலக டி. பி. தினம்)

                                                                          .                                                                              மீனாக்ஷி பாலகணேஷ்             மார்ச் 24, உலக டி. பி. தினம் – அதற்கு இப்போது என்ன? வருடாவருடம் இந்தவிதத்தில் பலப்பல தினங்கள் வந்து போகின்றன. என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? இதென்ன பெரிய கொண்டாட்டமா? இப்படிப்பட்ட கேள்விகள் காதில் விழத்தான் செய்கின்றன.             முதலில் ஒரு சிறு சம்பவத்தை விவரிக்கிறேன்.                                                 ————————————–             மார்ச் மாதம் 24ம் தேதி, வருடம் 1882. பெர்லின் நகரில் உடற்கூறு இயல் ஸ்தாபனத்தின் […]


 • வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்

  வடக்கிருந்த காதல் – மூன்றாம் பாகம்

    அழகர்சாமி சக்திவேல்    ஆயர் டேனியல் – திண்டுக்கல்.   முத்தொழிலோனே, நமஸ்காரம் மூன்றிலொன்றோனே, நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா, நித்திய திரியேகா, நமஸ்காரம். சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம் தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம்   சங்கராபரணம் ராகத்தில்,  ஆதிதாளத்தில் அமைந்திருந்த அந்த இனிமையான பாடலை,  புழைக்கடையில் இருந்து ரோஸி சந்திரன் பாடுவது எனக்குக் கேட்டது. பாடல் என்னவோ, நான் எப்போதும் கேட்கும், கீர்த்தனைப் […]


 • எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் – “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

  எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் – “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு

    திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு   சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக  அவரின் “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய்  ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள்  மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.  விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்   திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்  அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  சென்னை  எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “  என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும்,  முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம்  வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார்.  விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்   திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு   இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக  முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும்  அறக்கட்டளை உறுப்பினர்களாக  கவிஞர் வைரமுத்து , மூதறிஞர்  அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா   ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 ) . . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக  எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார். ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய  அறக்கட்டளை  ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது   மதுராந்தகன் ( கனவு இலக்கிய வட்டத்திற்காக)/   Tiruppur 77089 89639 8/2635  Pandian Nagar, Tiruppur 641602


 • கவிதையும் ரசனையும் – 13

  அழகியசிங்கர்               சமீபத்தில் நகுலனைப் பற்றி பேச்சு வந்தது.  நகுலன் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை என்று எழுதியிருக்கிறார்.  மிகக் குறைவான வாசகர்களுக்காகவே அவர் எழுதியிருக்கிறார்.            1987ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுருதி’ என்ற புத்தகத்தின் பிரதி ஒன்று கிடைத்தது.  இத் தொகுதியில் கடைசியில் இக் கவிதைத் தொகுதி பற்றி நகுலன் இவ்வாறு எழுதியிருக்கிறார்.             ‘சமீபத்தில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் காரணமாகக் கவிதை, கதை, நாவல் இவைகளை எழுதுவது முக்கியமன்றி, அவைகளைப் பிரசுரிக்க வேண்டிய அவசியமில்லை என்று […]


 • ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு  இன்று  93  ஆவது பிறந்த தினம்

                                                                    முருகபூபதி முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை  நகர்ந்துள்ளார்.   உரும்பராய் கிராமத்தில்  செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும்  அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில்  ஆறாம் தரம் வரையிலும்  கற்றபின்னர்,  யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை […]