தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

பிச்சினிக்காடு இளங்கோ படைப்புகள்

ஈரமுடன் வாழ்வோம்

ஈரமுடன் வாழ்வோம்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) பரந்துகிடக்கும் உலகில் பரவியிருக்கும் தமிழர்களின் தமிழ் தலைநிமிர தமிழ்த்தலை நிமிர தமிழர்களின் நிலையுயர எழுதுகோலை மட்டுமே தலைவணங்கவைக்கும் வணங்காமுடிகளே! உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் தமிழ்வெளிச்சம் பரப்பும் தமிழ்மூளைகளே! மூளைச்சூரியன்களே நிலாக்களே! நித்திலங்களே! நம்மைச்சந்திக்க வைத்த-தமிழைச் சிந்திக்கவைத்த [Read More]

அம்மா

பிச்சினிக்காடு இளங்கோ எல்லார்க்கும் போலத்தான் எனக்கும் அம்மா ஆனால் என் அம்மா என் அம்மாதான் தைரியத்தின் படிமம் பன்முகச்சிந்தனையின் வடிவம் இரக்கத்தின் குறியீடு உலகத்திற்காகவும் உலகமாயும் சிந்தித்தவள் சிந்திக்கச்சொல்பவள் சகோதரப்பாசம், பற்று உறவினர்மீது பரிவு ,அக்கறை உதிரத்தில் கலந்தவள் செயலில் காட்டியவள் கொடுத்துதவுவதில் அப்பாவுக்குப்போட்டி சொல்லில் செயலில் [Read More]

வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11) அதிகாரம் 119: பசப்புறு பருவரல்

வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (11)  அதிகாரம் 119: பசப்புறு பருவரல்

  “பசலை படுத்தும்பாடு ”   பிரிவை என்னிடம் பேசாதீர் என்ற நான் என் காதலர்பிரிவுக்கு உடன்பட்டேன் விளைவு! பசலைபடரக்காரணமானேன்   அன்று பிரிவை மறுதலித்துப் பின் பிரிவை அனுமதித்த நான் பசலை படர்ந்ததை யாரிடம் சொல்வேன்? எப்படிச்சொல்வேன்?   பசலையைத்தந்தவர் காதலர் காதலர்தந்ததால்   காதலர்தந்தார் என்ற செல்லத்தால்; காதலர்தந்தார் என்ற உரிமையில்; காதலர் தந்தார் என்ற காரணம் [Read More]

(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம்) (10) அதிகாரம் 118: கண் விதுப்பு அழிதல் -“கண்களுக்கு அவசரமேன்? ”

      கண்கள்தாம் கண்டன அவரை கண்களால்(தான்) நானும் கண்டேன் அவரை அதனால்தான் எனக்கு இத்தீராநோய்   தீராகாமநோய் தீயில் இருப்பது நான் தீர்வின்றித் தவிப்பது நான் துடிப்பது நான் துவள்வது நான்   கண்கள் ஏன் அழுகின்றன? எதற்கு அழுகின்றன?   காரணமின்றிக் கண்ணீர் சிந்துவதேன்?   ஆய்ந்து அறியாமல் அவரைப்பார்க்க அவசரப்பட்ட கண்கள்; பார்த்தலால் காதல்தீ பற்றிக்கொண்ட கண்கள்; [Read More]

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்

      (வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் )(9) அதிகாரம் 117: படர் மெலிந்து இரங்கல்   “நீள் இரவு கொடியது”   நான் காமநோயை மறைப்பேன்   அந்நோய் யாரும் அறியக்கூடாத நோய் ஆகவே அந்நோயை மறைப்பேன்   ஆனால் கொடுமை! அது இறைக்க இறைக்க ஊறும் ஊற்றுநீர்போல் பெருகும்!       மறைக்கமுடியாமல் நான்படும் துன்பம் அதிகம் அதை அந்நோய்தந்த காதலருக்குச்சொல்லுதல் இன்னும் வெட்கமானது வெட்கம்கலந்த [Read More]

உயிரோட்டம்

உயிரோட்டம்

    பெளர்ணமியாய்   பவனி எனினும்   குகைக்குள் கொஞ்சம்   அமாவாசை     இதை   மறந்தும்; மறைத்தும்   நடிக்கும் பாத்திரமாய்   பகல் இரவு     முழு பூசணிக்காயை   மறைக்க முடிவதைப்போலவே   முழுநிலவாய் காட்டிக்கொள்வதும்     சிலர்   நிலவென்று சிலாகித்தனர்   சிலர்   இருளென்று ஆர்ப்பரித்தனர்     தவிர்க்க முடியாத   மதிப்பீடுகளோடுதான்   தரையிறங்கி   கால் பதித்து   [Read More]

பிரியும் penனே

பிச்சினிக்காடு இளங்கோ என்னைவிட்டுப் பிரிகிறாய் நீ இருளாய்ச் சூழ்கிறது கவலை உண்மை கம்பீரம் பிறக்கிறது அதனினும் உண்மை எனக்காக என்னுடன் எப்போதும் இருந்தது நீதான் எனக்கு முதலில் வந்து முதலுதவி செய்ததும் நீதான் உன்னை என்னோடு வைத்திருந்ததில் கர்வப்பட்டிருக்கிறேன் எது இருந்ததோ இல்லையோ இல்லாமல் நீ இருந்ததில்லை நான் என்னோடு நீ இருந்ததால்தான் எனக்குப் புகழ் நீ [Read More]

ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்

ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்

பிச்சினிக்காடு இளங்கோ அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் தம்பி யூமா வாசுகி. வெளியீடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நைஜீரியாவில் நைநகர் நதி தீரத்திற்கு வடக்கு கிழக்கான கடலோர சமதளங்களில் அமைந்திருக்கிற நிலப்பகுதிதான் ஒகோனி.. ஷெல் நிறுவனம் இயற்கை வளமிக்க அப்பகுதியில் எண்ணெய் எடுத்ததால் ஒகோனி பகுதிக்குள் [Read More]

வேண்டா விடுதலை

     பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)     கட்டடக்  காடுகளின்   காட்சிப்  பெருவெளியில்   அடர்ந்த  காடெங்கே   அடர்மர  நிழலெங்கே   எதோ   ஆங்காங்கே   இருக்கின்ற மரங்களில்தான்   குயிலிருந்து கூவவேண்டும்   குஞ்சுகளைப் பேணவேண்டும்     எங்கள் குடியிருப்பில்   ஏழெட்டு மரங்களுண்டு   ஏழெட்டு மரமெனினும்   எல்லாம்  அடர்மரங்கள்   வெயிலே நுழையாது   விரித்த உயிர்க்குடைகள்   அங்கேதான் [Read More]

கவியெழுதி வடியும்

கவியெழுதி வடியும்

    இலையிருளில் இருந்தவண்ணம்   எனையழைத்து ஒருபறவை பேசும்   இதயத்தின் கனத்தையெல்லாம்   இதமாகச் செவியறையில் பூசும்   குரலொலியில் மனவெளியைத்   தூண்டிலென ஆவலுடன் தூவும்   குரலினிமை குழலினிமை   கொஞ்சும்மொழித் தேனாக மேவும்      துயில்கின்ற மனமானோ   துள்ளலுடன் கனவாடை கலையும்   கனவாடை கலைந்தாலும்   கவிவாடை தானாக விளையும்   பொருள்புரியா  மொழிகேட்டு   புலர்காலை ஏக்கமுடன் [Read More]

 Page 2 of 5 « 1  2  3  4  5 »

Latest Topics

கையால் எழுதுதல்  என்கிற  சமாச்சாரம்

கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்

எஸ்ஸார்சி எழுத்தாளர்கள் [Read More]

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

வளவ துரையன் அவனும் அவளும் மனத்தால் [Read More]

மலையும் மலைமுழுங்கிகளும்

மலையும் மலைமுழுங்கிகளும்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்: [Read More]

துணைவியின் இறுதிப் பயணம் – 13

சி. ஜெயபாரதன், கனடா   என் இழப்பை நினை, ஆனால் [Read More]

காதலர்தினக்கதை

குரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே! [Read More]

Popular Topics

Archives