தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஜூலை 2019

அமீதாம்மாள் படைப்புகள்

கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்

    தாத்தாவுக்கின்று எண்பது வயது   ‘சொந்தக் காலில் நிற்கிறார்’ என்று சொல்லவைத்த ‘கால்’கள் தன் காலை மறந்து ‘கல்’ லாக மறத்து   இன்று உள்ளங்கால் ஊன்றினால் உச்சந்தலை இறங்குது சுத்தியடி வலி   அந்தக் கால்களுக்கின்று காலவரையற்ற ஓய்வு புதிய நியமனம் சக்கர வண்டி   தாத்தாவின் பாதப் பென்சில் பதிந்த தடங்களை ரப்பர் வண்டி அழித்தழித்து உருள உருள்கிறது அங்கே தாத்தாவின் [Read More]

வண்டுகள் மட்டும்

  அந்த மரம் கனி செய்தது   வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன   வண்டுகள் மட்டும் கூலிக்காக உழைத்தன   அமீதாம்மாள்   [Read More]

புரிந்து கொள்வோம்

  உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ********   எரியாத மெழுகு ஒளிராது *******   பூமிக்குத் தேவையில்லை பிடிமானம் *******   வேர்களின் தேடல்கள் வெளியே தெரிவதில்லை ********   விஷமுள்ள பாம்புகள் அழகானவை *******   ஏறவும் இறங்கவும் தெரிந்தால் மட்டும் போதும் மின் தூக்கிக்கு ****** முட்கள் கொண்ட பூக்கள் அழகாய் இருக்கலாம் ஆபத்தில்லை   அமீதாம்மாள் [Read More]

உயிர் சுமந்த உதிரிக் கவிதைகள்

  உறவுகளை அன்பால் வகு ஈவு இன்பம் காசால் வகு ஈவு துன்பம் ******** ராட்சசன் நண்பனானால் அவனைவிட நீதான் பலசாலி ********** சிக்கலை நீக்கையில் சில முடிகள் உதிரும் ************** வினாடிகளாகத்தான் கழிகிறது வாழ்க்கை நினைவு கூரப்படுவது சில வினாடிகளே *********** மலரப்போகும் வினாடியை எழுதிவிட்டுத்தான் ஒரு மொட்டு பிறக்கிறது *********** மிதப்பவை ஒருநாள் கரை ஒதுங்கும் ******** ஆயுளுக்கும் தேவையான பிசின் நூலோடுதான் [Read More]

எழுபதில் என் வாழ்க்கை

    ஆட்டுக்கல் இட்டலி அம்மிச் சட்டினி கறந்தபால் நுரையொடு காலை மாலை காப்பி கூட்டாஞ்சோறு குளத்துக் கெளுத்தி மூங்கில் கட்டில் முற்றத்து நிலா கோழி மேயும் கொல்லையில் தாயம் முகம் பார்த்துப் பேச மூணாங்கிளாஸ் மூர்த்தி   பல் தேய்க்க காட்டு வேம்பு தமுக்கடிக்க தட்டான் குளம் மும்மிய வேட்டியை குடையாக விரித்து நடக்கும் பாதையில் வரப்பு நண்டு   இருப்பதைத் தொலைத்து விட்டு [Read More]

‘நறுக்’ கவிதைகள்

    பெட்ரோல் எரிகிறது பிஸ்டன் துடிக்கிறது சுகமான பயணம் மோட்டாரோட்டிக்கு   ******* பத்தாம் மாடி தொட்டிக் கள்ளி தரைத் தென்னையிடம் தம்பட்டம் அடித்தது தாமே உயரமாம் தென்னையை விட   *********   எவ்வளவு பழுத்தாலும் பாகைக்கு கசக்க மட்டுமே தெரியும்   *******   முகம் காட்டும் கண்ணாடி முதுகுக்குப் பின்னும் காட்டும் முக்கியக் கவனம் இருக்கட்டும் முதுகுக்குப் பின்னே அங்குதான் உங்களுக்கு [Read More]

ஆயிரங்கால மண்டபம்

ஆயிரங்கால மண்டபம்

    ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காலாக ஆயிரங்கால் மண்டபத்தை நம் நெஞ்சங்களில் கட்டி அதிலேயே அடங்கிப் போனார் ஆச்சி மனோரமா   அமீதாம்மாள் [Read More]

நெத்தியடிக் கவிதைகள்

    பத்து ஆண்டுகளாக என்னால் சாதிக்க முடியாததை ஒரு மூட்டைப்பூச்சி சாதித்து விட்டது   என் கணவர் புதுக் கட்டில் வாங்கிவிட்டார்   *****   ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே ***** என்றோ கொடுத்த பத்து வெள்ளியை கொடுப்பார் என்று நானிருக்க மறந்திருப்பேன் என்று அவர் இருக்க இன்றுவரை அந்தப் பத்து வெள்ளியை அவர் தரவுமில்லை நான் பெறவுமில்லை அது கடனா? [Read More]

குட்டிக் கவிதைகள்

புகை ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே —————–   ஆனந்தம் அந்தப் பெண்ணின் ஆனந்த வாழ்க்கைக்கு அந்தப் பெரியவர் அப்படி வாழ்த்தியதுதான் காரணமாம்   இதோ அந்தம் பெரியவரின் வாழ்த்து   ‘தாய்ப்பாசமுள்ள பிள்ளைகளும் தாய்ப்பாசமற்ற கணவனும் பெற்று வாழ்க வளமுடன்’   அமீதாம்மாள் [Read More]

கண்டெடுத்த மோதிரம்

அமீதாம்மாள் நடந்து செல்கிறேன் மண்ணில் ஏதோ மின்னுகிறது அட! ஓர் ஒற்றைக்கல் மோதிரம் யார் கண்ணிலும் படாமல் என் கண்ணில் எப்படி? இது என்ன பிளாட்டினத்தில் வைரமா அல்லது வெள்ளியில் புஷ்பராகமா? ஓர் ஆசரீரி கேட்கிறது என் தேவைகளைச் செய்ய தேவதை எனக்குத் தந்ததாம் இப்போது மனவெளி மேய்வது மோதிரம் மட்டுமே தெரியவந்தது உண்மை அது வைரமில்லையாம் வெறும் கண்ணாடித் துண்டாம் மோதிரத்தைக் [Read More]

 Page 4 of 8  « First  ... « 2  3  4  5  6 » ...  Last » 

Latest Topics

நுரைகள்

மஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு [Read More]

குழந்தைகளும் கவிஞர்களும்

குழந்தைகளும் கவிஞர்களும்

test லதா ராமகிருஷ்ணன் உங்களால்  [Read More]

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் [Read More]

ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்

மஞ்சுளா. ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான [Read More]

மனக்குருவி

வைதீஸ்வரன் கவிதைகள்
1961- 2017….

லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட [Read More]

சரித்திர புத்தர்

மஞ்சுளா  காலம் காலமாய் போதி மரங்கள் தவம் [Read More]

நாடகம் நடக்குது

கௌசல்யா ரங்கநாதன்             —– [Read More]

Popular Topics

Archives