தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஜூலை 2019

அமீதாம்மாள் படைப்புகள்

குரங்காட்டியும் குரங்கும்

  கோலெடுத்தான் குரங்காட்டி ஆடியது குரங்கு கர்ணம் போட்டது காவடி எடுத்தது தங்கச்சி பொம்மையைத் தாலாட்டியது இரண்டு கால்களால் நின்று இசைக்கு ஆடியது கைகளை ஏந்தி காசு கேட்டது குடும்பம் நடந்தது குரங்காட்டிக்கு ஒரு நாள் மனம் மாறினான் குரங்காட்டி ஒரு குரங்கால் நம் குடும்பம் நடப்பதா? வெட்கம் குரங்கை காட்டிலே விட்டு வீடு ஏகினான் பாவம் குரங்கு அதற்கு சுதந்திரம் புரியவில்லை [Read More]

அப்துல் கலாம்

விலாக்கூட்டை விண்கலமாக்கி விண்ணைச் சலித்தவரை நாளைய நாட்டின் நடுமுதுகுத் தண்டாய் மாணவரைக் கண்டவரை அக்னிச் சிறகால் அகிலம் பறந்தவரை அமிலமழை அரசியலில் நனையாமல் நடந்தவரை அகலநீனம் அறிபுக்கில்லை அது தேடத்தேட விரியும் விரிய விரியத் தேடும் என்றவரை தேடுதல் இல்லையெனில் சிக்கிமுக்கிகூட நம் அறிவுக்குச் சிக்கியிருக்காதென்றவரை எடுத்துக்காட்டாய் வாழ்வின் இறுதிவரை [Read More]

சீப்பு

  ‘நானா மூனா கடையில் நயமாக நாலைந்து சீப்பு வாங்கிவா’ என்றார் அத்தா வாங்கி வந்தேன்   சீவிப் பார்த்து வரண்டும் சீப்பைத் தள்ளிவிட்டு வருடும் சீப்பை வைத்துக் கொண்டார் புதுப்புளி நிறத்தில் புலிவரிச் சீப்பு அது   பின் சீப்பு வாங்கும்போதெல்லாம் சீவீப்பார்க்காமல் வாங்கியதில்லை எத்தனையோ சீப்புகள் வாங்கிவிட்டேன்   சிங்கப்பூர்ச் சச்சா தந்த பேனாச் சீப்பொன்று என் [Read More]

சிரித்த முகம்

ஒரு வரலாற்றை முடித்துவிட்டு முற்றுப்புள்ளி அழுகிறது ‘எழுநூறு கோடியின் எழுச்சிமிகு தலைவன்’ ஏற்றுக்கொண்டிருக்கிறது உலகம் ஒரு சூரியனை ஒளித்துவிட்டது கிரகணம் தொலைநோக்குத் தலைவனை தொண்டனை தொலைத்து விட்டோம் நீ உறக்கம் தொலைத்த இரவுகளையும் சேர்த்தால் இருநூறு உன் ஆயுள் முகவரி தந்த உன் முகம் பார்க்கும் இறுதி நாள் கடந்து கொண்டிருக்கிறது சிங்கைத் தீவை இன்று கண்ணீர் [Read More]

முகப்புகழ்ச்சியா நம் முகவரி?

    வடித்த கவிதைகளை வரலாறுகண்ட ஒரு வாரஇதழுக்கு அனுப்பினேன் தேரவில்லை   நூலாக்கினேன்   கவிக்கோவின் கட்டைவிரலாம் நான் அணிந்துரை சொன்னது   என் கவிதைகள் குறிஞ்சி மலர்களாம் குற்றாலச் சாரலாம் ஒரு திரைக்கவி மெச்சினார்   பைரனின் நகலாம் நான் ஒரு பேராசிரியர் புகழ்ந்தார்   மின்சாரம் எனக்குள் மிருதங்கம் இசைத்தது   விழாவில் கொஞ்சம் விற்றது மிச்சம் தோற்றது இன்றுவரை [Read More]

குளத்தங்கரை வாகைமரம்

    குளத்தங்கரை வாகைமரம் நான் விரல்பிடித்து நடந்த இன்னொரு கரம்   உச்சிக்கிளையில் கிளிகளின் கூச்சலில் காட்சியும் கானமுமாய் விடிகிறது என் காலை   பனம்பழம் சுட்டது பட்டம் விட்டது பதின்மக் காதலைப் பகிர்ந்துகொண்டது நட்புகள் பிரிவுகள் முகிழ்ந்தது முடிந்தது இன்னும் இன்னுமென்று வாகையடியே வாழ்க்கையானது   தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள் தாவத் தயாராய் தவளைகள் முதுகு [Read More]

பாம்புகளை விழுங்க தவளைகளால் முடியாது

    நான் கை கூப்புகிறேன் அவர் கை கொடுக்கிறார் …….எனக்குப் புரிகிறது   நடக்கிறேன் கடக்கும் கண்கள் கணைகளாகின்றன …….எனக்குப் புரிகிறது   மருத்துவர் பதிக்கும் ஸ்டெத்தோடு பதிகின்றன விரல்கள் …….எனக்குப் புரிகிறது   கடைக்காரர் சில்லரை தருகிறார் சீண்டுகின்றன விரல்கள் …….எனக்குப் புரிகிறது   எடிஎம்மில் எனக்கு முன்னால் நிற்பவர் வழிவிட்டு வழிகிறார் [Read More]

மக்களாட்சி

    வாக்கு வெள்ளத்தில் முறிந்து வீழ்ந்தன சில நூற்றாண்டு மரங்கள் இடிந்துவிட்டன சில கொத்தளங்கள்   வெள்ளமும் வெயிலும் சுழற்சி மையத்தண்டாக மக்களாட்சி   ஆட்காட்டி விரல்களால் மாறியிருக்கிறது ஆட்சித் தோட்டத்தின் அதிகாரங்கள்   சில புதிய மரங்கள் சேர்க்கப்படலாம் சில பழைய மரங்கள் கழிக்கப்படலாம் அதற்குமுன்   ஆணிவேரைத் தோண்டிய பெருச்சாளிகளை விரட்டுங்கள் இல்லையேல் [Read More]

கவிதை

குப்பைகளைக் கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம்   காணும் காட்சியில் கண்கள் மேய்கிறது   ஆனால் மனம்? அறுத்துக்கொண்டு திரிகிறது   நேற்று நடந்த ஓர் அவமானத்தை ஓர் இழப்பை ஒரு துரோகத்தை கிளறிக் கிளறித் துடிக்கிறது   கிளறினால் துர்நாற்றம் எரித்தால் மின்சாரம்   எப்படி எரிப்பது?   இதோ மனோவியல் ஞானி ஜேகேயின் ஜெயிக்கும் வார்த்தைகள்   காணும் பொருளாக காண்பவன் [Read More]

உயிர்த் தீண்டல்

  மலையுச்சியில் அந்த மங்கைக் குரங்கு மலையடியில் அந்த மன்மதக் குரங்கு   ஒரு நாள் மன்மதன் மலைக்குச் சென்றான் கண்களிலெல்லாம் காதல் பொறியாய் மங்கையிடம் வீழ்ந்தான் மன்மதன்   மலையடியின் சுளைகளையும் கனிகளையும் மங்கையிடம் கொட்டினான் தழைகளால் பந்தல் செய்தான் கொடிகளால் ஊஞ்சல் செய்தான் ராணியானாள்  மங்கை சேவகனானான் மன்மதன்   கருவுற்றாள் மங்கை ஒன்று இரண்டு மூன்று   [Read More]

 Page 5 of 8  « First  ... « 3  4  5  6  7 » ...  Last » 

Latest Topics

நுரைகள்

மஞ்சுளா , மதுரை கூடாரங்கள் போட்டு [Read More]

குழந்தைகளும் கவிஞர்களும்

குழந்தைகளும் கவிஞர்களும்

test லதா ராமகிருஷ்ணன் உங்களால்  [Read More]

ரேகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் :

பேரா.க இராமபாண்டி நாவல்கள், எழுத்து மூலம் [Read More]

ஜே.பிரோஸ்கானின் ‘மீன்கள் செத்த நதி” குறித்து சில பதிவுகள்

மஞ்சுளா. ஒரு கவிதை தொகுப்பை நெருங்குவதற்கான [Read More]

மனக்குருவி

வைதீஸ்வரன் கவிதைகள்
1961- 2017….

லதா ராமகிருஷ்ணன் (*350க்கும் மேற்பட்ட [Read More]

சரித்திர புத்தர்

மஞ்சுளா  காலம் காலமாய் போதி மரங்கள் தவம் [Read More]

நாடகம் நடக்குது

கௌசல்யா ரங்கநாதன்             —– [Read More]

Popular Topics

Archives