தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

24 மே 2020

சத்யானந்தன் படைப்புகள்

தேடப்படாதவர்கள்

    காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன   ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது   வேறு வீடு இன்னொரு கோவில் பக்கத்து ஊர் புதுத் தெரு மாற்றி மாற்றி எங்கு போனாலும் அன்னத்தில் இருக்கும் பெயர் மாறவில்லை   வளர்ந்து அவன் உழைத்து’ ஒரு நிலம் வாங்கினான்   தானே விதைத்து பயிரிட்டு கண்காணித்து அறுவடை செய்தான் [Read More]

புத்தன் பற்றிய​ கவிதை

    எதிரி நாட்டு வீரன் மீது கூர் வாளை வீசிக் கொல்வது வீரம் அல்லவா?   மிரளும் கண்களுடன் மாமிச​ மலையாய் ஓடி வரும் காளையை விரட்டி விரட்டி வாலைப் பிடித்து வளைத்து வளைத்து திமிலைப் பிடித்து முதுகில் ஏறி அடக்கி நிமிர்வதை விட​ வீரம் எது உண்டு?   வீரம் மட்டுமா? நேயமுமுண்டு என் வளர்ப்பு மிருகம் பசியால் வாடினால் மற்றொரு மிருகத்தின் சதைத் துண்டுகளை அறுத்துத் தருவேன்   இரு [Read More]

கல்லடி

    அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில்   பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது   அதிரும் காலடிச் சத்தம் கேட்டதும் ஆமை ஓட்டுக்கு உள்ளே ஒளிந்தது   வேட்டுச் சத்தம் கேட்டதும் யானைகள் ஓடி இடம் பெயர்ந்தன   கிரகணத்தில் சூரியன் மறைந்ததும் பறவைகள் மரங்களுள் தஞ்சமடைந்தன   இதில் [Read More]

ஜெயந்தி சங்கரின் நாவல் “திரிந்தலையும் திணைகள்”

  அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில் பின்னப்பட்டிருக்கிறதா? நாவல் எதைப்பற்றியது?   எந்த ஒரு பிரதியும் அது நம் மீது ஏற்படுத்தும் தாக்கம் அதாவது அதை வாசித்த பின் நம் மனதுள் ஆழப்பதியும் அதன் மையப் பொருளை வைத்தே முடிவு செய்யப்பட வேண்டும். ஜெயந்தியின் [Read More]

நிர்வகிக்கப்பட்ட​ கர்வம்

    பழுது பார்ப்பவரது வருமானம் நிறம் வேறுபடலாம் ஆனால் பழுதுகளுக்காக​ யாரையேனும் கட்டாயக் கூட்டாளியாக்க​ வேண்டியிருக்கிறது அடிக்கடி   சாதனங்கள் தானியங்குவதும் என் கர்வமும் சார்புடையவை கர்வ​ பங்கம் நேரும் போது பழுது பார்ப்பவர் மையமாகிறார்   என் தேவைகளை முடிவு செய்யும் நிறுவனங்கள் என்னையும் அவரையும் சேர்த்தே நிர்வகிக்கிறார்கள் அவ்வழியாய் என் கர்வங்களையும் [Read More]

தன்னிகரில்லாக் கிருமி

  யோக நித்திரை கலைந்த போது கடவுள் எதிரே ஒளிதேவன்   “கிருமிகள் நோய் என்னும் இருளை இனிப்பரப்ப முடியாது கவலை நீங்குவீர்”   “இறைவா எப்படி இந்த அற்புதம்?” வியந்தார் ஒளி.   “அவசரப்படாதீர் அற்புதம் இனிமேல் தான் நிகழும்…”   “புரியவில்லை”   “கிருமிகளுக்கு மனிதரை விடவும் வலிய மனசாட்சியை அருளி இருக்கிறேன்”   “நன்றி இறைவா…. இனி இருள் என் வழியில் [Read More]

அவன் முகநூலில் இல்லை

அவன் முகநூலில் இல்லை

  நிழற்படங்கள் செய்தித் துளிகள் முகநூலில் சமூக​ வலைத்தளத்தில் மின்னஞ்சலில் எல்லாமே ஒத்திகைகளாய்   அரங்கேறும் நாடகத்தில் எதிர் கதாபாத்திர​ வசனம் உடல் மொழி யூகிக்கும் முயற்சிகளாய்   மின்ன்ணு ஒத்திகைகள் எப்போதும் முழு ஒப்பனையுடன்   ஒப்பனையின்றி ஒத்திகையின்றி சாட்டையால் கத்தியால் தன்னை ரணமாக்கும் கல்லூளிமங்கன் சலங்கை சத்தம் மேல் தளத்தில் இருக்கும் என் அறை [Read More]

நூலிழை சத்யானந்தன்   நான் எங்கேயாவது நினைத்த​ போதே கிளம்பி விடுவேன் என்பது அம்மாவுக்குப் பழக்கமானது   உணவு பரிமாறும் போது அம்மா சொன்னது பயணத்தின் போது முழுவடிவாகி பக்கத்தில் அமர்கின்றன​   எந்தத் திசையில் பயணித்தாலும் அது இறந்த​ காலத்தை விட்டு மேலும் விலகவே செய்விக்கிறது   ஆனால் அம்மாவுக்கு இறந்த​ காலத்தில் இருந்து புது பட்டு நூலிழையை உருவுவது எளிதாய் [Read More]

தோற்றம்

இது நானில்லை சுனையில் தெரிவது என் பிம்பம்   அப்போது இது தான் நீயா என்றான் என் மேல் சுட்டு விரலை வைத்து   இது என் உடல் அதன் தோற்றம்   தோற்றம் நீயில்லை என்கிறாயா   ஆமாம்   உன் தோற்றமே நீயில்லையா   என் தோற்றம் தரும் தாக்கம் உனக்கு வேறு ஒரு பெண்ணுக்கு வேறு என்னிடம் உதவி கேட்டு வருபவனுக்கு வேறு எனக்கு உதவி செய்தவனுக்கு வேறு   அது சரி [Read More]

நிழல்களின் நீட்சி

சத்யானந்தன் இயங்காத நிழல்கள் போல் நாம் விடுதலை வரம் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றது கால்பந்தின் நிழல் வரம் கொடுத்தவர் இரவில் நாம் இச்சைப்படித் திரிய அனுமதி தந்தார் கட்டிட நிழலும் குப்பைத் தொட்டி நிழலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய இயலும்? பதிலளித்தது கங்காருவின் நிழல் பகலில் நாளுக்கொரு வடிவம் ஒரு நிலைப்பேயில்லை இது பிச்சைக்காரன் நிழல் கூர்மையான பல் இல்லை [Read More]

 Page 4 of 26  « First  ... « 2  3  4  5  6 » ...  Last » 

Latest Topics

இன்னும் சில கவிதைகள்

இயல்பு  தெரியாததைத் தெரியாது என்று [Read More]

எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !

நவின் சீதாராமன் உலகத்தையே உயிர் பயத்தில் [Read More]

தனிமை

    உன் மௌனத்தின் உதடுகள் என் இரவின் [Read More]

ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை

 முகநூல் எழுத்து என்பது அழகான கனவு.  அந்த [Read More]

இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்

கோ. மன்றவாணன்       தமிழகத்தின் பல [Read More]

Popular Topics

Archives