1956. அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டு தீபாவளிக்காக சிதம்பரம் – விருத்தாசலம் பேருந்தில் எனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். முன்னிரவு. பஸ் குறுக்கு ரோடில் நின்றது. மறுநாள் தீபாவளி என்பதால் பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். கூட்டமாக பேருந்தில் ஏற முண்டியடித்தார்கள். நடத்துனர் அவ்வளவு பேரையும் சமாளித்து ஏற்றிக் கொண்டு விசில் கொடுத்தார். பேருந்து நகரத் தொடங்கியதும் சீட்டு போடத் துவங்கினார். ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் […]
வே.சபாநாயகம் ‘புனிதமான தொழில் – சோகமான வியாபாரம்’ என்றெல்லாம் ஆசிரியர் பணியைக் குறிபிட்டது ஒரு காலம். இப்போது ஆசிரியர் தொழில் சோகமானதல்ல. மற்ற தொழில்களை விட மிகவும் பொறாமைக்குரிய ஒன்றாகிவிட்டது. ஆசிரியப் பணிக்கு ஊதியம் வெகுவாக உயர்ந்த பின் அது சோகமான வியாபாரம் அல்ல- கொழுத்த வியாபாரம்! ஊதியம் மிக்க் குறைவாக இருந்த போது, ஆசிரியர்களது வாழ்க்கை – வசதிக் குறைவாக இருந்தும் மனநிறைவோடு மனசாட்சிக்குப் பயந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பிள்ளைகளுக்குப் போதித்தார்கள். இப்போது தேவைக்கு அதிகமான […]
வே.சபாநாயகம். 1965 ஜூனில் தான் நா.பாவின் ‘தீபமு’ம், கி.கஸ்தூரிரங்கன் அவர்களின் ‘கணையாழி’யும் தொடங்கப் பட்டன. தீபம் தொடங்கிய மறு மாதமே எனக்கு ஒரு நண்பர் மூலம் அறிமுகமாயிற்று. ஆனால் கணையாழி 10 மாதங்கள் கழித்துதான் பார்க்கக் கிடைத்தது. அப்போதே நான் பல இலக்கிய சிற்றேடுகளுக்கு சந்தா கட்டி வரவழைக்கும் ஆர்வமுடையவனாக இருந்தேன். அதற்கு முன்னோடியாகத்தான் தீபமும், கணையாழியும் என் சேகரிப்பில் வந்தன. இவை இரண்டும்தான் எனக்கு இலக்கிய உலகின் நான் அறியாத சாளரங்களைத் திறந்து விட்டன. தீபம் […]
1953ல் என் மூத்த சகோதரரின் திருமணத்தின்போது திருமணப் பரிசாக வந்த புத்தகங்களில் ஒன்று ‘பெண் தெய்வம்’ என்னும் நாவல். அப்போதெல்லாம் திருமணப் பரிசாக நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டன. அந்நாவலை எழுதியவர் பி.எம்.கண்ணன் என்கிற – அவரது காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தவரும் மணிக்கொடி காலத்தவருமான எழுத்தாளர். ‘மறு ஜன்மம்’ என்ற அவரது சிறுகதை ‘மணிக்கொடி’ யில் வெளிவந்திருக்கிறது. ’கலைமகள்’ நாவல் போட்டியில பரிசு பெற்றவர். கலைமகள் காரியாலயம் சிறந்த எழுத்தாளர்களது அருமையான படைப்புகளை 1950களில் பதிப்பித்து […]
கதைகள் அனைத்துமே கற்பனையால் மட்டுமே எழுதப்படுவதில்லை. கதைக்கான உந்துதல் ஏதாவது ஒரு நிகழ்வின் பாதிப்பாகவே இருக்கும். எனது கதைகள் எதுவுமே கற்பனை இல்லை. நான் கண்ட, கேட்ட, பரவசப்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலேயே எழுதப்பட்டவை. தங்கத்துக்கு செம்பு சேர்ப்பது போல கதையின் முழுமைக்கு கற்பனை துணையாகும். எனது முதல் கதை ‘எங்கள் வாத்தியார்’ கதையா நடைச்சித்திரமா என்று புரியாத நிலையில் எழுதப்பட்டது. பின்னாளில் பல ஆண்டுகளுக்குப்பின் ‘வ.ரா’ வின் நடைச்சித்திரங்களை ‘மணிக்கொடி’ படித்த பின்தான் நான் எழுதியது […]
– வே.சபாநாயகம். சோலை அருகாவூர் கவிஞர் ஆதிராஜ் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையை நினைவூட்டும் அற்புதமான மரபுக் கவிஞர். எளிய இனிய தமிழ்நடையில், சந்த அழகுடன் ஆற்றல்மிகு சொல் நயம்மிக்க கவிதை பாடுவதில் வல்லவர். ‘தேவி’ அவரது இரண்டாவது சிறு காவியம். சமண மத போதனையை அடிப்படையாகக் கொண்ட கதையை தன் கவித்திறத்தால் தெவிட்டாத இனிய காவியமாக்கி இருக்கிறார். ‘அகிம்சையைப் பேணும் சீலம் அன்புடன் கருணை உள்ளம் சகிப்புடன் சமம் புரத்தல் சத்தியம் காக்கும் தீரம் பகிர்ந்திடும் பரந்த […]
-வே.சபாநாயகம். தமிழ் மொழியின் பெருமைக்கு வளம் சேர்த்ததில் மொழி பெயர்ப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை பேரலை போல வந்து தமிழர்களை திணற அடித்து வருகின்றன. 1940 களில் சரத்சந்திரர், பக்கிம் சந்திரர் போன்றோரின வங்காள மொழி நாவல்கள், 50களில் வி.ஸ.சாண்டேகரின் மராட்டி மொழி நாவல்கள், தொடரும் மலையாள மொழி ஆக்கங்களின் மொழி பெயர்ப்புகள் என காலம்தோறும் வந்து தமிழை மேலும் இனிமையாக்கி வருகின்றன. இன்றைய காலகட்டதில் தொடர்ச்சியாய் குறிஞ்சிவேலன் போன்றோரின் சிறப்பான மொழி பெயர்ப்புகளால் […]
எதுவும் சூனயத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத்தான் வருகிறது. படைத்தவனின் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன் எண்ணங்களும் குணங்களும் மறுபடியும் சூன்யத்தில் பிறந்ததில்லை. அதற்கும் முந்திய தடங்களைக் காட்டும் சங்கிலித்தொடர் பின்னோக்கிப் போய்க்கொண்டே இருக்கும். அதுபோலத்தான் படைப்பின் முன்னோக்கிய வாழ்வும்.. தான் ஒரு வரலாற்றோடு வந்தாலும், வந்தபின் தனித்து விடப்பட்டு அவ்வக்காலத்து சூழலுக்கு ஏற்ப இன்னொரு வரலாற்றை அது உருவாக்கிக்கொண்டே போகிறது. […]
கடினமான காரியங்களுள் ஒன்று படிப்பபது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தப்பித்துக்கொள்ள முடியாதபடி நவீன மனிதனின் வாழ்க்கை அமைந்துவிட்டது.. எனவே சிலவற்றைப் படித்தும் வேறு சிலவற்றைப் படிக்காமலும் விட மனிதன் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் எழுதுகிறவர்களுக்குப் பெரிய நஷ்டம். நாவல் படிக்கிறவர்கள் கவிதை படிப்பதை விட்டு விடுகிறார்கள். கவிதை படிபவர்கள் நாவல் படிப்பதாகத் தெரியவில்லை. பலர் பழைய இலக்கியங்களை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள். தமிழாசிரியர்கள் நவீன இலக்கியங்களைப் படிப்பதில்லை. படிப்பவர்கள் அதைக் கேலி […]
கடற்கரையில ஒரு இலக்கிய உரையாடலின்போது, ‘புதிய அலைகள்’ என்று இலக்கியத்தில் இப்பொழுது ஒரு சொல் அடிபடுவது பற்றி சர்ச்சை எழுந்தது ‘அலைகளில் புதிசு உண்டா?’ என்று கேட்டேன் நான். ‘’அலைகளில் ஏது புதிது, கரைகள் வேண்டுமானால் புதிது புதிதாகத் தோன்றலாம்” என்றார் நண்பர். .அலையா, கரையா? என்ற சர்ச்சையை ஒதுக்கிவிட்டு, பொதுவாக இன்று பெரிய பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் கதைகளைப் பார்த்தோமானால் இலக்கியத் தரம் என்ற ரசமட்டத்தில் துல்லியமாக அடங்குவது மிக அரிது. ஆனால் இன்று சிறுகதைகளில் […]