தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

28 மே 2017

தமிழ்மணவாளன் படைப்புகள்

‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா

‘உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா

வரும்24-12-2016 அன்று என்னுடைய கவிதை நூல்,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’ வெளியீட்டுவிழா சென்னை இக்ஸா மையத்தில் நடைபெறுகிறது. தங்களின் வருகை என்னைப் பெருமைப் படுத்தும்.   [Read More]

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016

அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமையாக இருந்த எழுத்தாளர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும், ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2016 சிறப்பாக நடைபெற உள்ளது.அழைப்பினை அறிவிப்புகள் பகுதிக்கு இணைத்துள்ளேன். வெளியிட்டு ஆதரவு தர கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுக் குழு ஜெயந்தன் [Read More]

மிருகக்காட்சி சாலைக்குப் போவது

மிருகக்காட்சி சாலைக்குப் போவது

விலங்குகளைப் பார்ப்பதற்கென்று மெனக்கெட்டு மிருகக்காட்சி சாலைக்குப் போவதென்பதே ஒரு பிரத்யேகமான மனோபாவம் அநேகமாய் மனிதர்களைப் பார்ப்பதற்கு மறுதலிக்கப்பட்ட சமூகத்தில் ஐம்பது ரூபாய் நுழைவுச் சீட்டில் அனுமதிக்கப் படுகிறோம் மிருகங்களைப் பார்க்க உள்நுழைந்து இடப்புறம் திரும்பியதும் வண்ணப் பறவைகள் தமக்குள் குறைபட்டுக் கொண்டிருக்கின்றன மனிதர்கள் தம்மை [Read More]

கவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)

கவிநுகர் பொழுது-13 (இல்லோடு சிவாவின்,’மரங்கொத்திகளுக்குப் பிடித்தமானவன்’, கவிதை நூலினை முன் வைத்து)

தமிழ்மணவாளன் இலக்கிய வகைமைகளில் கவிதை தனித்துவமானது; முதன்மையானதும் கூட.ஏனெனில் கவிதையில் தான் மொழிக்குள் மொழி இயங்குகிறது. சொற்களுக்குள் சொற்கள் பிரத்யேகமான அர்த்தத்தைப் பெறுகின்றன. தனக்கு முன்னும் பின்னுமான சொல்லோடு இணைந்தோ அல்லது விலகியோ முற்றிலும் புதிதான பொருளடர்த்தியைக் கொள்கின்றன.வாசிப்பு மனத்தின் அனுபவ வெளியில் பெரும்பயணத்தை நிகழ்த்துகின்றன. [Read More]

தமிழ்மணவாளன் கவிதைகள்

தமிழ்மணவாளன் கவிதைகள்

1 துயரத்தையப் பறவையின் காலில் கட்டிப் பறக்க விட்டேன் கண் மறையும் தூரம் கடந்தவுடன் ஆசுவாமாகிறேன் அனிச்சையாய் எனக்குத் தெரியும் உயரப் பறக்கையில் உதறிவிடும் அதை துயரத்தைப் பறக்க விடக்கூடாதென இப்போது தான் புரிகிறது நம் காலடியில் புதைத்து விட வேண்டும் பறவை சுமந்து போய் போட்ட இடத்தில் நாகவிருட்சமாகி கண்காணா இடமிருந்து காவு கேட்கிறது யாவற்றையும் 2 நேற்றைய திரைக்கதை [Read More]

மனிதம் உயிர்த்த பெரு மழை

மனிதம் உயிர்த்த பெரு மழை

முகுளத்தில் அடிபட்டு மூர்ச்சையான குழந்தை மூன்று நாள் கழித்து கண் விழிக்கும் வேளை கவலையுற்று நிற்கும் தாயென வெள்ளம் வடிந்த இரண்டாம் நாள் சென்னையைக் கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தது அந்திப்பொழுது இனி இழப்பதற்கொன்று மில்லை உயிரைத் தவிரவென பிழைத்திருந்தோர் நினைத்திருந்த வெறுமையின் நசநசப்பில் உப்புக்காற்று சுயமிழந்தது இறுதி மூச்சு வெளியேறும் கணத்தின் [Read More]

கவி நுகர் பொழுது-12 பொம்பூர் குமரேசன் ( பொம்பூர் குமரேசனின்,’அப்பாவின் வேட்டி’, கவிதை நூலினை முன்வைத்து)

  பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், பொம்பூர் குமரேசனின்,’ அப்பாவின் வேட்டி’, கவிதைத் தொகுப்பு குறித்து உரையாற்றினேன். அப்பேச்சின் கட்டுரை வடிவமாக இதனைக் கொள்ளலாம். ‘நறுமுகை’, சார்பாக ஜெ. ராதாகிருஷ்ணன் நூலினைப் பதிப்பித்திருக்கிறார்.   ’அப்பாவின் வேட்டி’, என்கிற தலைப்பே ஒரு அணுக்கத்தை உண்டு பண்ணுகிறது. ஒப்பீட்டளவில் [Read More]

தமிழ்மணவாளன் கவிதைகள்

தமிழ்மணவாளன் கவிதைகள்

      1.ரயில்வே ட்ராக் அருகே அறை எடுத்துத் தங்குவது ஏசி குளிர் தாளாமல் கதவைத் திறந்து வெளியில் வர மதுரையிலிருந்து ஒரு பிரமாண்டமான சாரைப்பாம்பு ஊறும்   இந்நேரத்திலும் என்னைப் பார்த்து புன்னகைக்க ஒருவன் நிற்கிறான் கதவோரம்.   இரண்டாயிரம் பேர் இருப்பரா?   மக்கள் போகிறார்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாய்.   இனி அவன் முகத்தில் முழிக்கவே கூடாதென கண்ணில் [Read More]

கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது-10 – (கவிஞர் கனிமொழி.ஜி யின், ’கோடை நகர்ந்த கதை’, கவிதை நூலினை முன்வைத்து)

இதனை, மீறல் இலக்கியக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற, கனிமொழி ஜி யின் ,’கோடை நகர்ந்த கதை’, விமர்சன அரங்கிற்கு தலைமையேற்றுப் பேசியதன் கட்டுரை வடிவம் எனக்கொள்ளலாம். கவிதைகளை வாசிப்பதும் கவிதைகள் குறித்துப் பேசுவதும் கவிதைகளை முன்வைத்து இதுபோன்ற அரங்குகளில் உரையாற்றுவதும் என் மனத்திற்கு மிகவும் நிறைவு தருகிற விஷயங்களாகவே எப்போதும் உணர்கிறேன்.   . ஒரு கவிதையை வாசகன் [Read More]

கவிநுகர் பொழுது (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது  (நேசமித்ரனின் ,’மண் புழுவின் நான்காவது இதயம்’, நூலினை முன்வைத்து)

சதுரங்க விளையாட்டில்,காய்களுக்கு பிரத்யேகமான செயல்பாட்டுத்தளம் கட்டமைக்கப் பட்டுள்ளது.செக் அண்ட் மேட் என்னும் இலக்கின் புள்ளியாய் இருக்கும் ராஜா, மேல் கீழ் வல இடமென ஒற்றைக் கட்டம் நகர்தலே சாத்தியம்.ராணியோ எல்லாவிதமான விஸ்தீரணங்களோடும் நேர், கோணம் என்று அனைத்து நகர்தலுக்குமானது. பிஷப் எப்போதும் நேரின்றி கோணங்களில் மட்டும். சிப்பாய் முதல் நகர்தலில் இருகட்டமும் [Read More]

 Page 1 of 4  1  2  3  4 »

Latest Topics

14 வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!

14 வேண்டாம் அந்த முரட்டுப் பெண்!

ஜோதிர்லதா கிரிஜா (ஆங்கிலத்தில் எழுதியதன் [Read More]

எருமைப் பத்து

பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” [Read More]

தேடாத தருணங்களில்

சித்ரா ————— கூழாங் கற்களை தேடிப் [Read More]

சில நிறுத்தங்கள்

சுப்ரபாரதிமணியன் பழையனூரில் மூன்று [Read More]

சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்

———– சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் [Read More]

தண்டிக்க ஒரு கரம் தாலாட்ட மறு கரம்

எனக்குள் அப்படி ஒரு ஓங்காரக் குரல் இருப்பது [Read More]

கோடைமழை

மீனா தேவராஜன் காத்திருக்கோம் [Read More]

தொடுவானம் 171. மருத்துவச் சேவை கடவுள் சேவை …

டாக்டர் ஜி. ஜான்சன் 171. மருத்துவச் சேவை கடவுள் [Read More]

“இன்பப் புதையல்”

என்.துளசி அண்ணாமலை “வானதி…என் [Read More]

Popular Topics

Insider

Archives