தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

10 ஜனவரி 2021

ஷம்மி முத்துவேல் படைப்புகள்

வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …

இரவின் நிழல்கள் கோலமிடுகின்றன அவைகளின்,  விரல் பிடித்தே வெளிச்சங்கள் கதிர்களின் கிரகணங்கள் படர மீண்டு வரா தொலைவில் புதைந்தன கனவுகளின் வாத்சல்யம் நிழலின் படங்கள் ஒருபோதும் கலைவதோ அல்ல கலைக்க படுவதோ  இல்லை … எங்காகிலும் ஒளிந்து ஒவ்வொரு நிகழ்விலும் தலைப்படும் அவை … தர்கிக்கும்  .. உருகி நிற்கும் தருணங்கள் உறையும் நிகழ்வுகள் இவைகள்  கிரகண பொழுதில் ஒளிகள் அற்று [Read More]

யாதுமாகி …

நாற்புறச்சட்டகத்தின்  பின்  இருப்பது தெரியாமல் பேசிக்கொள்கிறார்கள் .. நிறமிகளின் பின்னே நரை  மறைத்து  நிரந்தரமாகவே அவை சென்று விட்டதாகவே நினைத்து கொள்கிறார்கள் … கண்ணோரச் சுருக்கங்களையும் மோவாயின் தளர்ந்த தசைகளையும் நீவி இழந்தவைகளை ஷன நொடிகளில் பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள் குழந்தையிடமும் சிரியவர்களிடமும் மட்டுமே தம் கோபங்கள் [Read More]

………..மீண்டும் …………..

எண்ணற்ற நட்சத்திரக் கோள்களில் தேடி த் தேடி களைத்துபோய் இருக்கையில் எங்கோ ஒரு மூலையின் ஓரமாய் கண்சிமிட்டி அழைக்கிறாய் இறகுகளின் சுமைகளை அப்போது தான் உதிர்த்து பரவலாய் வைத்திருந்தேன் … அவைகளை எடுத்து பிணைத்து கொண்டு இருக்கையில் … சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது ஒரு காலைப்பொழுது …. இரவிற்கான காத்திருத்தல் தொடங்குகிறது ….. ஷம்மி முத்துவேல் [Read More]

ஓர் பிறப்பும் இறப்பும் ….

  எங்காகிலும் தட்டுபடுகிறதோ அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ? நீள் கோடுகளும் அங்காங்கே புள்ளிகளுமாய்.. அழகின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்த பிம்பமென தாவி தாவிப் பறக்கும் அது …?   மனம் கவர்ந்திழுத்த அதன் நினைவுகளில் அழுகிப்போன இதயங்களின் சுவடுகள் ஏதும் பதிப்பிக்க அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய்      இல்லை …   மெல்லிய இறக்கைகள் விரித்து பறக்கும் அவைகளில் [Read More]

முடியாத் தொலைவு

கசக்கி எறிந்த காகித வார்த்தைகள் உறைந்து மடிகின்றன … காத்திருக்கின்றது இன்னும் எச்சமாகி நிற்கும் விகுதிகள் எதிலும் பூரணத்துவம் பெற்றிருந்த அவ்வார்த்தைகள் ஒரு சில நேரங்களில் முரண்படுகின்றன அவ்வேளைகளில் வீரியம் அதிகமாக … வெளிவரும் ஒவ்வொன்றிலும் தொக்கி நிற்கும் ஒரு துளி விஷம் …. விடுதலற்ற கணக்காகி எங்கிலும் எச்சமென தொடரும் அவை .. என்றும் முடியாத் தொலைவு வரை …. [Read More]

சிற்சில

சிற்சில சொல்லாடல்கள் பிரித்து அறியப்படாமலே  வாதங்கள் என மேல்போர்வை கொண்டு ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன .. மீட்சி என்னும் சொல்லறியா அவை தனக்குள் முடங்கி  “தான் ” விடுத்து.. தர்க்கத்தில் கலந்து பிணைந்து  பின்னர் தானாய் கரைந்தும் விடுகின்றன அவைகளுள் சிலவோ நீரினடியில் வேர் பிடித்து தண்டின் வழி உண்டு எங்காவது  மலர சேற்றின் அடியில் இன்னும் சிக்கி மூச்சடக்கி [Read More]

அவன் …அவள் ..அது ..

அவன் ஏதோ ஓர் அடர்வண்ணம் நிரப்பியே அவன் எழுதுகிறான் பலசமயம் அவை புரிவதாயில்லை .. எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் , ஒட்டிக்கொண்டும் கையெழுத்து வேண்டாம் என மசிநிறைத்த தட்டச்சு இயந்தரத்தில் பிரதி எடுக்கிறான் அப்போதும் அவன் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்றாய் அப்பிக்கொள்கின்றன அவள் .. எழுதிய வார்த்தைகளினூடே கூறா மொழிகளையும் சேர்த்தே படிக்கிறாள் .. விழிகளின் மொழிகளை [Read More]

எங்கிலும் அவன் …

எங்கிலும் அவன் ஒளிந்தே இருக்கிறான் காலை பொழுதின் கதிரினூடே கிளம்பி மாலை மயங்கியும் கூட அவனின் உறக்கங்கள் துவக்கபடவேயில்லை அடர் வனங்களின் தருவின் இடுக்குகளில் வீழ்ந்து கிடந்த இலையொன்று கதைத்து கரைத்தது அவனின் எண்ணற்ற வெற்றி பொழுதுகளை சுழன்றடித்த பெருங்காற்று கிளப்பியது எரிந்து போன சாம்பல் நினைவுகளை பெருந்தீவின் பாரமென ஒளிந்து நின்ற பெருங்கனவின் சார்பை ஒத்தே [Read More]

எங்கோ தொலைந்த அவள் . ..

யன்னல்கள் ஏதுமற்றிருந்த அந்த ஒற்றையறையின் கதவுகள் சாத்தப்பட்டே இருந்தன எப்போதும் அலறல்களும் கூச்சல்களும் அங்கே கசிய விடப்பட்டிருக்கும் ஒலித்துகள்கள் ஒவ்வொரு அணுவிலும் ஏற்றப்பட்ட உடல் அதிரத்துவங்கும் மௌனமான நேரங்களில் கூட செவிகளில் ரீங்காரமிடும் அந்த அழுகையின் ஒலி அவளிலிருந்து அந்த அறைக்கு விடுதலை தந்தது ஒர் மரணம் மீண்டும் பூட்டப்பட்ட அந்த அறைக்குள் அவள் [Read More]

கனா தேசத்துக்காரி

கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள் என்றுமே தனித்திருந்தாள் அம் மாய உலகில் தனக்கெனவோர் அரியாசனம் அமைத்தவள் பிரஜைகளையும் உருவாக்கினாள் அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர் அதில் அனைவரும் பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள் அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள் வெளிர் நிறங்கள் தாங்கிய போர்க்கொடியும் ஏற்றப்படுவதேயில்லை மனதின் நீரூற்றுகள் [Read More]

 Page 1 of 2  1  2 »

Latest Topics

சாலைத்தெரு நாயகன்

சாலைத்தெரு நாயகன்

குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் [Read More]

திருநீலகண்டர்

அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று [Read More]

மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… –  ‘கோமதி’ சிறுகதை

மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை

ஜெ.பாஸ்கரன் கடைத்தெரு கதைகள் (ஆ.மாதவன்) [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

ஸிந்துஜா    பல பத்தாண்டுகளுக்கு முன்பு [Read More]

கோடுகள்

அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக [Read More]

நடை

நடை

மருத்துவர் அவனைக் காலையில் நடக்கச் சொல்லி [Read More]

மொழி பெயர்ப்பு கவிதைகள்  ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]

மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]

மொழிபெயர்ப்பு  : மூலம்    : ஜிசினா மெல்ப் [Read More]

Popular Topics

Archives