This entry is part 20 of 22 in the series 18 ஜூலை 2021
முனைவர் சி. சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்.), புதுக்கோட்டை. E.Mail.: malar.sethu@gmail.com உலகம் உய்வதற்கு ஏற்ற வழிகளைக் காட்டியவர்கள் பலர். தாம் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளையே அவர்கள் மற்றவர்களுக்குக் கூறினர். அவ்வாறு வாழ்ந்து காட்டி, அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தவர்களுள் முதன்மையானவராகத் திகழ்பவர் திருவள்ளுவராவார். வாழ்வில் தாம் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களை அவர் தனது குறட்பாக்களின் வழி நமக்கும் அடையாளம் காட்டுகின்றார். அவர் காட்டுகின்ற மனிதர்கள் உலகில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். சான்றோர்கள் மனிதர்களை […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்னாட்சி), புதுக்கோட்டை ஓர் உயிரினத்தைச் சுற்றிக் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற கூறுகளை உள்ளடக்கியதே சுற்றுச் சூழல் எனலாம். அது காற்று, ஒலி, மண், வெப்பம், நீர் மற்றும் அவற்றோடு தொடர்புடைய பிற உயிரினங்களையும் அந்த உயிரினங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் காரணிகளையும் உள்ளடக்கியது. சுற்றுச்சூழலை இருவகைப்படுத்தலாம். அவையாவன : 1. இயற்கைச் சுற்றுச்சூழல் 2. மனிதன் உருவாக்கிய சுற்றுச்சூழல் என்பனவாகும். இயற்கைச் சுற்றுச் சூழலில் நீர், நிலம், […]
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com சீவகசிந்தாமணி காப்பிய காலத்தில் ஆண்களும் பெண்களும் பலவிதமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தனர். ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறான நம்பிக்கைகள் நிலவியது. இந்நம்பிக்கைகள் அவர்களின் உள்ளக்கிடக்கையினைப் புலப்படுத்துவனவாக அமைந்துள்ளன. பெண்கள் மலைக்குச் சென்று தவம் செய்தால் நல்ல மைந்தர்களைப் பெற்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை அக்காலத்தில் நிலவியது(465). ஈடும் இணையுமற்ற குழந்தைகளைத் தவத்தால் மட்டுமே பெற இயலும் என்று அவர்கள் நம்பினர்(467) பெண்கள் […]