author

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 6 of 12 in the series 14 மே 2023

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) அடுத்தடுத்துத் தொடர்ச்சியாய் வெற்றிகளைக் குவித்தும் ஆட்டவீர்ர் முகத்தில் அதற்கான குதூகலமில்லை. காரணங்கேட்டவரிடம் கூறினார்: கோமாளிகளும் குயுக்திமூளைக்காரர்களும் குரோதம் நிறை வஞ்சக நெஞ்சங்கொண்டோரும் சிறுமதியாளர்களும் செத்த உயிர் தாங்கியோரும் சாக்கடையை சந்தனமணங்கமழ்வதாக சாதிப்போரும் சக உயிரைப் பகடையாக்கும் சூதாடிகளும் அபத்தப்பேச்சே அறிவுசாலித்தனமாய்க்கொள்வோரும் அடிவாரத்தில் நின்றுகொண்டு மலைமுகடைப் பகடி செய்வோரும் பட்டுப்பூச்சிக்கு மனிதனைப்போல் பாடவருமா என்று  முட்டாள்தனமாய் மார்தட்டிக்கொள்வோரும் கட்டாயம் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுவேன் என்று துண்டுபோட்டுத் தாண்டுகிறவர்களும் உன்னதங்களை அடையாளங்கண்டு அங்கீகரிக்க மாட்டேன்  என்ற […]

வாய்ச்சொல் வீரர்களும் ”வாழ்க வாழ்க” வாயர்களும்

This entry is part 5 of 12 in the series 14 மே 2023

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறுகிய காலத்திற்கு சமத்துவம் பேணுபவர்கள் மறவாமல் அதைக் காணொளிக்காட்சிகளாக்கிப் பகிரத் தவறுவதேயில்லை. உறைந்தும் ஊர்ந்தும் அந்தக் காட்சிகள் அவரை சமத்துவசாலியாகவும்  சாட்சாத் சமூகப்பிரக்ஞையாளர்களாகவும்  காலத்திற்குமாகக் காட்டிக்கொண்டேயிருக்க அண்ணாந்து பார்க்கவைக்கும் அவர்களுடைய மாடமாளிகைகளும்  கூடகோபுரங்களும் அதிகரித்துக்கொண்டேபோகின்றன. அதனாலென்ன ? ஒருதரப்பு அன்னாடங்காய்ச்சிகளை இன்னொரு தரப்பு அன்னாடங்காய்ச்சிகளுக்கெதிராகத் திருப்பிவிட்டால் பின் பரபரப்பாய்த் தங்களுக்குள் அடித்துக்கொள்வார்களேயல்லாது பதுக்கியிருக்கும் கருப்புப்பணத்தின் பக்கம் கவனம் திரும்பாது. அடிப்பதற்கு ஆக்ரோஷமாக முழங்குவதற்கு அசிங்கசிங்கமாகத் திட்டுவதற்கு […]

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 10 of 13 in the series 2 ஏப்ரல் 2023

PAPER MACHE மலைகளும் பசியின் கொடுமையை வருடக்கணக்காக அனுபவித்தவன் முன் பத்து தட்டுகளில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டபோது அவனையுமறியாமல் அவன் நாவில் சுரந்த உமிழ்நீரை மட்டந்தட்டிப் பேசிப்பேசியே அந்த மாளிகையில் அன்றாடங்கள் காலாவதியாகிக்கொண்டிருந்தன மற்றவர்களைத் திட்டித்திட்டி மதிப்பழித்து வெறுப்புமிழ்ந்து விஷங்கக்கி மக்கள்நலப்பணி செய்துகொண்டிருந்தவர் தானே பணங்கொடுத்துத் தயாரித்த மாபெரும் விளம்பரபதாகையில் முகம் மலரச் சிரித்துக்கொண்டிருந்தார். மேடுபள்ளமாய் காலிடறிக் கீழே விழச் செய்யக் காத்திருக்கும் வீதியில் அடிப்பிரதட்சணமாய் நடந்துகொண்டிருந்த எளிய மனிதர் அதைப் பார்த்து மெல்ல முறுவலித்துச் சொல்லிக்கொள்கிறார் முணுமுணுப்பாய் […]

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 2 of 12 in the series 1 ஜனவரி 2023

1. பூனைமனம் வாழ்வோட்டத்தின் ஏதோவொரு புள்ளியில் நானும் black commando என்று என்னால் பெயரிடப்பட்ட கருப்புப்பூனையும் அறிமுகமானோம். நட்புறவு தட்டுப்படுவதற்கும் கெட்டிப்படுவதற்குமான காலதேசவர்த்தமானங்களைத் துல்லியமாக power point வரைகோடுகளில் விளக்கிவிட முடியுமா என்ன? அது ஆணா பெண்ணா தெரியாது. அதற்கு எத்தனை வயது – தெரியாது. அது எங்கிருந்து வருகிறது – தெரியாது. அதற்கான நீள்வட்டப்பாதையின் ஆரம், விட்டம் – சுற்றளவு – எதுவுமே தெரியாது. விளங்கவியலாச் சீட்டுக்குலுக்கலனைய வாழ்வியக்கத்தில் குறைகாலம் கூட்டுச்சேர்ந்தது போலவே கையாட்டி விடைபெறாமல் […]

அரசியல்பார்வை

அரசியல்பார்வை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) …………………………………………………………………………………………………………………… அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள் வனத்தை வனம் என்றுதானே சொல்லமுடியும் என்கிறேன். அதுவொரு வனம் என்று எதை வைத்துச் சொல்கிறாய் என்கிறீர்கள் வனம் நம் கண் முன் விரிந்திருக்கிறது. இது போதாதா என்கிறேன். போதாது. இது வனம் என்பதற்கு அத்தாட்சி வேண்டும் என்கிறீர்கள். காற்றின் இருப்புக்கு அத்தாட்சி கேட்பது எத்தனை அபத்தமோ அதை விட மோசம் வனத்தின் பிரத்யட்சத்துக்கு நிரூபணம் கேட்பது என்கிறேன். இது வனமானால் […]