Articles Posted by the Author:

 • அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

  அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

  சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்து விழுதற்றுப் போக,விதையும் பழுதாகஹிரோஷிமா எழில்மேனி அழித்துநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு!நாகசாகியும் அணுப் பேரிடியால்நாசமாகிமட்டமாக்கப் பட்டது!திட்ட மின்றிதென்னாலி ராமமூடர்கள் அணு உலையைச்சூடாக்கிவெடிப்புச் சோதனை அரங்கேறிநிர்வாண மானது,செர்நோபில் அணு உலை ! மாய்ந்தனர் மக்கள்,மடிகிறார் !மேலும் மரிப்பார் ! மரிப்பார்!நாடு நகரம்வீடு வயல்கள் எங்கும்மூடின வெங்கதிர் வீச்சுகள்!கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,கடத்தப் பட்டார் வேறூர்,கைப்பையுடன்கதிர்மழைப் பொழிவால்!புற்று நோயும், இரத்த நோயும்பற்றின பாலரை! படுகிறார் வேதனை!மன்னிக்க முடியாத,மாபெரும்மனிதத் தவறால் நேர்ந்தஇரண்டாம்அணுயுகப் பிரளயஅரங்கேற்றம்! +++++++++++++++++++ […]


 • கவிதை என்பது யாதெனின்

  கவிதை என்பது யாதெனின்

  சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை போல். சொல்லாமல் சொல்லும் ஊழ்விதி போல். மெல்லச் சொல்லும் செவிட்டுக் காதில். ஊசிமருந்து போல்  உள்ளிருக்கும் நெஞ்சினில். உரக்க இடிக்கும் முழக்கி முரசு போல் ! அலை அலையாய் அடிக்கும் ஆலயமணி போல். அசரீரி போல் சொல்லும் வானிலிருந்து. உன் எதிரே கூசாமல் உரைக்கும். பையிக்குள் இருந்து குரான், பைபிள், குறள் போல் வழிகாட்டும். குத்தூசி போல் புகுந்து உடல் நோய்க்கு மருந்து தரும். தூங்கும் ஆத்மாவை எழுப்பி தூங்காமல் வைக்கும். ஆத்மாவின் ஆணி வேரை […] • ஆயுள் தண்டனை

  சி. ஜெயபாரதன், கனடா முதுமையின் வெகுமதி இதுதான். ஊழ்விதித் தண்டனை இதுதான். இளமை விடை பெற்றது எப்போது ? முதுமை உடலுள் புகுந்தது எப்போது ? முடி நரைத்து எச்சரிக்கை விடுகிறது ! மூப்பு முதிருது மூச்சு திணருது. நாக்கு பிறழுது, வாய் தடுமாறுது, கால் தயங்குது, கை ஆடுது, கண்ணொளி மங்குது. காதொலி குன்றுது. குனிந்தால் நிமிர முடிய வில்லை. நிமிர்ந்தால் குனிய முடிய வில்லை. உடல் நிமிர்ப்பு குன்றிப் போய் புவியீர்ப்பு மிஞ்சிப் போய் […]


 • பைபிள் அழுகிறது

  பைபிள் அழுகிறது

  சி. ஜெயபாரதன், கனடா நானூறு ஆண்டுகளாய் அமெரிக்க நாகரீக நாடுகளில் கறுப்பு இன வெறுப்பு விதை முளைத்து மாபெரும் ஆலமரமாய் வளர்ந்து கிளைவிட்டு விழுதுகள் தாங்கி ஆழமாய்ப் பூமியில் வேரிட்டு உள்ளது. நாள்தோறும் கொலை நடந்து வருவது நாமறிந்ததே ! கறுப்பு இனம் விடுதலை பெற்றாலும், தற்போது கறுப்பும் வெள்ளையும் சமமல்ல ! வெறுப்பும், வேற்றுமையும் வெள்ளைக் கோமான்கள் குருதியில் இருக்குது. சட்டம் நீக்க முடிய வில்லை சமயம் நீக்க முடிய வில்லை. சமூகம் நீக்க முடிய வில்லை. ஜன நாயக அரசும் நீக்க […]


 • விடுதலை. வெள்ளையனுக்கு !

  விடுதலை. வெள்ளையனுக்கு !

  விடுதலை வெள்ளையனுக்கு ! சி. ஜெயபாரதன், கனடா ஆபே லிங்கன் நூறாண்டு முன்பு உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்று விடுதலை கிடைத்தது வேறான கறுப்பினத் தாருக்கு ! தோல்வி யுற்றுச் சீறிக் கொண்டிருந்த தென்னகக் கோமான்கள், ஆறாத நூறாண்டுப் புண்ணை ஆற்றிக் கொள்ள அடக்கப் பட்ட முதலைகள் இப்போது துப்பாக்கியில் சுட்டுப் பழிவாங்க எழுந்து விட்டார், வெள்ளை யனுக்காக நேரிடைப் போரின்றி ! இந்த ஊமைப் போருக்கு அந்த மில்லை எந்தக் காலத்திலும் ! இப்போது ஒளிந்து கொண்டு […]


 • கறுப்பினவெறுப்பு

  கறுப்பின வெறுப்பு ஆயிரம் காலத்துப் போர் ! கறுப்பு  என்றால் வெறுப்பு எனப் பொருள். கறுப்பும் வெறுப்பும் சமமில்லை ! வெள்ளை மாளிகை  எரிந்துபோய்க் கறுப்பு நிறம் பூசி  உள்ளது ஒரு காலம். கறுப்புத் தளபதி ஆண்ட தடம் உள்ளது. ஞாலத்தில்  எழும்பிய  தீராத தீண்டாமைப் போர். கறுப்பும் வெளுப்பும் அங்கே. சமமில்லை ! ஆப்ரகாம் லிங்கன் அடிமைகட்கு விடுதலை பெற்றார். வெள்ளைக் காவலர்  ஆயினும் கறுப்பரை வேட்டை ஆடும் விலங்குகளாய் பலி ஆடுகளாய்த் தமக்கு நாட்டில் நடமாடும் எளிய […] • அன்னை & மனைவி நினைவு நாள்

  அன்னை & மனைவி நினைவு நாள்

  சி. ஜெயபாரதன், கனடா++++++++ இல்லத்தில் அம்மாதான் ராணி !ஆயினும்எல்லோருக்கும் அவள் சேவகி !வீட்டுக் கோட்டைக்குள்அத்தனை ஆண்களும் ராஜா !அம்மாதான் வேலைக்காரி !அனைவருக்கும் பணிவிடை செய்துபடுத்துறங்க மணிபனிரெண் டாகி விடும் ! நித்தமும்பின்தூங்குவாள் இரவில் !சேவல் கூவமுன்னெழுவாள் தினமும் !அம்மாவைத் தேடாதஆத்மாவே இல்லை வீட்டில் !அம்மா இல்லா விட்டால்கடிகாரத்தின் முட்கள்நின்று விடும் ! எந்தப் பிள்ளைக்கும் அவள்பந்தத் தாய் !பால் கொடுப்பாள்பாப்பாவுக்கு !முதுகு தேய்ப்பாள்அப்பாவுக்கு !சமையல் அறைதான்அவளது ஆலயம் !இனிதாய் உணவு சமைத்துப்பரிமாறிஎனக்கு மட்டும் வாயில்ஊட்டுவாள் ! வேலையில் […]


 • புலியோடு வசிப்ப தெப்படி ?

  புலியோடு வசிப்ப தெப்படி ?

  சி. ஜெயபாரதன், கனடா புலியோடு வசிப்ப தென்று இறுதியில் உலக ஞானிகள் உறுதி கொடுத்தார் !  வீட்டுக் குள்ளே புலியா ? ஒரு  சில மாதங்கள்  உலகத்தார் கிலியோடு புலியோடு  தூங்குவார் ! மீளாத் தூக்கம் சிலர் பெறுவார் ! நரக புரி இன்னும் சொர்க்க புரி ஆகவில்லை ! புலிக்குப் பசித்தால் புல்லைத் தின்னா தென்பது எல்லாரும் அறிவர்  ! கிலி பிடித்து மாந்தர் நித்தம் நித்தம் சித்தம் கலங்கி, பித்துப் பிடித்து தூங்காமல் தூங்கி […]