தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 அக்டோபர் 2019

யூசுப் ராவுத்தர் ரஜித் படைப்புகள்

யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள் வெளியீடு

யூசுப் ராவுத்தர் ரஜித் நூல்கள்  வெளியீடு

வணக்கம் கடந்த சில மாதங்களாக திண்ணையில் வெளிவந்த என் கதைகள் தொகுக்கப்பட்டு திரு கோபால் ராஜாராம் அணிந்துரையுடன் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியீடு காணவிருக்கிறது. அதோடு என் புனைபெயர் அமீதாம்மாள் என்ற பெயரில் எழுதப்பட்டு கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக வெளியான கிட்டத்தட்ட நூறு கவிதைகளும் வெளியீடு காண்கிறது. இந்தக் கதைகளுக்கும் கவிதைகளுக்கும் [Read More]

பூச்சிகள்

  கலவரப்பட்ட ஒட்டகம் மாதிரி அந்த அம்மா கத்தியதில் கையிலிருந்த கண்ணாடிக் குவளை கீழே ணங்கென்று விழுந்து உடைந்தது. சில்லுகள் காலில் குத்திவிடாமல் தாண்டித் தாண்டி சென்று பார்த்தால் அந்த அம்மா நெற்றியைப் பிடித்தபடி கழிவறையிலிருந்து வந்துகொண்டிருந்தார். என்ன நடந்ததாம்? கழிவறையில் ஒரு கரப்பான் பூச்சி மல்லாந்து கிடந்து கால்களை உதறிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு [Read More]

காலணி அலமாரி

அது என்ன காலணி அலமாரி? தமிழிலேயே சொல்லிவிடுகிறேன் ‘ஷூ ரேக்’. வீட்டில் கட்டில், சாப்பாட்டு மேசை, சோபா என்பதுபோல் காலணி அலமாரி ஒரு முக்கியப் பொருளாகிவிட்டது. சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரப்படி ஒரு நபருக்கு 5 காலணிகள். ஒவ்வொருவரும் ஓர் ஆண்டுக்கு தொலைக்கும் காலணிகள் குறைந்தது 2. இந்தப் புள்ளிவிபரங்கள் எந்த இணையதளத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது [Read More]

என் தஞ்சாவூர் நண்பன்

25 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் போய்க்கொண்டிருக்கிறேன். அன்று மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்த ஊர் இப்போது வல்லத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. விமானம் ஓடுதளம் மாதிரி சாலைகள். அதிகமான பேருந்துகள், லாரிகள். எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கும் மக்கள். இதோ கந்தக நிறத்தில் சூரிய வெளிச்சத்தில் கம்பீரமாகத் தெரிகிறது பெரியகோவில். ‘இவ்வளவு நாளா எங்கடா போயிருந்தே?’ [Read More]

மண்தான் மாணிக்கமாகிறது

கிட்டத்தட்ட பத்து நாட்கள் ரஜூலா கப்பலில் பயணப்பட்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார் நயினா முஹம்மது என்கிற நயினார். தேக்காவில் இருக்கும் அலி டீக்கடையில் வேலை பார்க்கத்தான் அவர் வருகிறார். கப்பல் தஞ்சோங் பஹாரில் வந்து நின்றது. மேட்டூர் மல்லில் தைத்த இரண்டு அரைக்கை சட்டை, இரண்டு தறிக் கைலி, லைஃபாய் சோப், 501 சவுக்காரம் அரை பார், கருவப்பட்டை பல்பொடி, ஓர் ஈரிழைத் துண்டு [Read More]

அப்பா எங்க மாமா

அப்பா எங்க மாமா

  தமிழரசனை முதன்முதல் அந்தத் திருமண விருந்தில்தான் சந்தித்தேன். நானும் என் மனைவியும் அமர்ந்திருந்த மேசையை அப்போதுதான் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ‘இங்க யாரும் வர்றாங்களா சார்?’ என்று கேட்டபடி நின்றார் அவர். அந்த மரியாதை எனக்குப் பிடித்திருந்தது. இல்லையென்றதும் அமர்ந்துகொண்டு அடுத்த நாற்காலியையும் சரிசெய்தார். அவர் மனைவி வரவேண்டும் என்று ஊகித்தேன். [Read More]

தப்பிக்கவே முடியாது

நாகா டோர்செட் ரோட்டில் இருக்கும் அந்த மூவறை வீட்டை 70 களில்தான் வாங்கினார். 20000 தான் விலை. மாதத்துக்கு 120 வெள்ளி செலுத்திக் கொண்டிருக்கிறார். நாகலிங்கம் என்கிற நாகாவைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 12 வயதில் சிங்கப்பூருக்கு வந்தவர். வந்ததுமுதல் அடைக்கலராஜ் வம்சாக்கடையில் தான் வேலை செய்கிறார். அடைக்கலராஜிடம் தான் காசு என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, குடும்பம் என்றால் [Read More]

நகைகள் அணிவதற்கல்ல.

  நாளைக் காலை பத்து மணிக்கு நானும் மனைவி சாய்ராவுன் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குப் பயணமாக வேண்டும். 20 கிலோ எடையில் நான்கு பெட்டிகள் எங்கள் உடமைகளைப் பொத்திக்கொண்டு கூடத்திற்கு வந்துவிட்டன. கையில் இழுத்துச் செல்ல இரண்டு சிறிய பெட்டிகளும் அவைகளுக்குத் துணையாக வந்து உட்கார்ந்து கொண்டன. என்னுடைய கணினிப் பையும் சாய்ராவின் கைப்பையும் அந்த மேசையில் தயாராக [Read More]

பாரம்பரிய வீடு

  1956ல் அடித்த புயல் தஞ்சாவூர் திருச்சி மாவட்டங்களை தலைகீழாய்த் புரட்டிப்போட்டது. விமானங்கள் தாழப் பறந்து அரிசி மூட்டைகளைத் தள்ளிவிட்டுப் பறந்தன. அப்போதுதான் முதன்முதலாக பலர் விமானத்தையே பார்த்தார்கள். மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியில் அறந்தாங்கியும் ஒன்று. ஆவிடையார் கோவில் ரோட்டுப் பகுதியில் கிட்டத்தட்ட 300 பேர் வீடுகளை இழநது தங்கதுரையின் வீட்டில் அடைக்கலம் [Read More]

என் சுவாசமான சுல்தான் பள்ளி

என் சுவாசமான சுல்தான் பள்ளி

1   இரவு மணி 10.45. ரொட்டித் துண்டில் லேசாக வெண்ணெயைத் தடவிக்கொண்டிருக்கிறார் முகம்மது. ஒரு கோப்பையில் தண்ணீரில் கலந்த பால். கொஞ்சம் ஊறியபின் சாப்பிட்டால் மெல்லும் வேலை மிச்சமாம்.. மாத்திரைகளைத் தந்துவிட்டு ஒரு தாமிரச் செம்பில் தண்ணீர் எடுத்துவந்தார் கதீஜா. தாமிரம் உடம்புக்கு நல்லதென்று கதீஜா ஊரிலிருந்து வாங்கிவந்த செம்பு அது. மகன் அப்துல்லா அவர் அறையில் [Read More]

 Page 3 of 7 « 1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்

நேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்

பாண்டித்துரை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த [Read More]

மாலை – குறும்கதை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் [Read More]

மீப்புனைவாளன்

இல.பிரகாசம் சிற்பி ஒருவன் தனது கையில் [Read More]

5. பாசறைப் பத்து

                             போருக்காகச் [Read More]

ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் [Read More]

4. புறவணிப் பத்து

புறவு என்பது முல்லை நிலக் காட்டைக் [Read More]

Popular Topics

Archives