பிரம்ம சாமுண்டீஸ்வரி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

This entry is part 2 of 2 in the series 17 செப்டம்பர் 2023

சுலோச்சனா அருண் சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், பரிசளிப்பு விழாவும் சென்னை காந்தி மண்டபச் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் யூலை 27 ஆம் திகதி 2023 மாலை 6:00 மணிக்கு, முனைவர் வவேசு அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும், மற்றும் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 2022 யூலை தொடக்கம் 2023 யூன் மாதம் வரை சர்வதேசத் தமிழ் […]

தேசிய புத்தகநாள் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.

This entry is part 2 of 6 in the series 20 ஆகஸ்ட் 2023

சுலோச்சனா அருண் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி 2023 தேசிய புத்தகவிரும்பிகள் தினத்தை ((National Book Lover’s Day)முன்னிட்டுக் கனடாவில் உள்ள ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ சர்வதேச ரீதியாகப் புத்தகம் வாசிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். புத்தகம் வாசிக்கும் தினத்தை முன்னிட்டு நிகழ்வில் பங்குபற்றிய அதன் அங்கத்தவர்கள் புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். தமிழ்நாடு, இலங்கை, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற இடங்களில் உள்ள வாசகர் வட்டத்தினரிடம் இந்த வாசிப்பு நிகழ்வு பரீட்சார்த்தமாக […]

துயர் பகிர்வோம்:  ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்

This entry is part 7 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

குரு அரவிந்தன் கலைஞரும், ஒலிபரப்பாளருமான இலங்கைத் தமிழரான விமல் சொக்கநாதன் லண்டன் நகருக்குப் புலம் பெயர்ந்திருந்தார். கொக்குவில் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கே நடந்த மின்சாரத் தொடர்வண்டி விபத்தொன்றில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி லண்டனில் காலமாகிவிட்டார். இலங்கை வானொலியிலும் அதன்பின் பிபிசி தமிழோசை வானொலியிலும் அறிவிப்பாளராககக் கடமையாற்றியவர், அதன்பின் ஐபிசி வானொலியிலும் பணியாற்றினார். நண்பர் விமல் சொக்கநாதனும் அவரது மனைவியும் இலங்கையில் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். நான் பட்டயக்கணக்காளருக்குப் படிக்கும் போது […]

முதியோர் இல்லம் கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள்

This entry is part 3 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

அன்பு நண்பர்களே அறிவியல் தமிழின் அடுத்த பெ.நா.அப்புசாமி பேரா. ஜெயபாரதன் எழுத்துகளைத் திண்ணையில் வாசிக்கத் தவறுவது இல்லை. தமிழில் முதல் தடவையாக முதியோர் இல்லம் சேர்ந்த மூத்தோர் ஒருவரின் (அவரே தான்) முதியோர் இல்லக் குறிப்புகளை அவர் எழுதுவது சிறப்பாக உள்ளது.  வானப்பிரஸ்தம் பற்றி விரிவாகச் சொல்லும் இந்த கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள். டாக்டர் ஜெயபாரதனுக்கு இன்னுமொரு நூறாண்டு கிளரொளி இளமையோடு சூழட்டும். அன்புடன் இரா.முருகன்

ரொறன்ரோவில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

This entry is part 3 of 6 in the series 30 ஜூலை 2023

சுலோச்சனா அருண் சென்ற சனிக்கிழமை 22-7-2023 கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் ‘சாக்லாட் பெண்ணும் பண்ணை வீடும்’ என்ற எழுத்தாளர் குரு அரவிந்தனால் தமிழில் எழுதப்பட்ட வெளிநாட்டுச் சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுப்பும், மாலினி அரவிந்தனின் ‘பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டன. கலை, இலக்கிய ஆர்வலர்கள் பலர் மண்டபம் நிறைந்த இந்த நிகழ்வில் கலந்து கொண்டு […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ்

This entry is part 5 of 7 in the series 16 ஜூலை 2023

அன்புடையீர்,                                                                                                                            ஜூலை 11, 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 298 ஆம் இதழ், கடந்தஜூலை 9, 2023 அன்று வெளியானது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் சென்று படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கவிதைகள்: டகாஹாமா க்யோஷி: இலையுதிர் காலம் இன்னும் ஆழமாகிறது – நந்தா குமாரன் (தமிழாக்கம்) ஆமிரா கவிதைகள் ஜூலை பாடல்கள் – கு. அழகர்சாமி நாவல்கள் மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது  – இரா. முருகன் உபநதிகள் – அத்தியாயம்: பத்து – அமர்நாத் தெய்வநல்லூர் கதைகள் – 6 –ஜா. ராஜகோபாலன் அதிரியன் நினைவுகள் -17 – மார்கெரித் யூர்செனார் (ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கம்: நா. […]

கனடா – சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்றுகூடல்

This entry is part 4 of 7 in the series 16 ஜூலை 2023

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-7-2023 சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்று கூடல் ஸ்காபரோவில் உள்ள மோணிங்சைட் பூங்காவில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் மக்களின் நலன் கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய மன்றம் 21 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது. தாயகத்திலும், கனடாவிலும் உள்ள சண்டிலிப்பாய் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அதற்கேற்ற அட்டவணைப்படி சேவை நலன் கொண்டு இயங்குகின்றது. கனடாவில் வசிக்கும் சண்டிலிப்பாய் மக்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து ஒன்று கூடியிருந்தனர். பொதுவாக […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 297 ஆம் இதழ்

This entry is part 12 of 13 in the series 2 ஜூலை 2023

அன்புடையீர்,                                                                         25 ஜூன் 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 297 ஆம் இதழ் இன்று வெளியானது. பத்திரிகையைப் படிக்க விரும்புவோர் செல்ல வேண்டிய முகவர்: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இற்றைத் திங்கள் அந்நிலவில்-1 – கமலதேவி ஒரே ஒரு முத்தம் – குமரன் கிருஷ்ணன் ஊர்வசி காதலில் கண்விழித்தாள்! – மீனாக்ஷி பாலகணேஷ் ராகஜலதி என்ற நாவல்– டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்) சொல்லாத காதல் எல்லாம்– கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் – பாகம் 27) பப்பைரஸ் – லோகமாதேவி நாவல்கள்: மிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு- இரா. முருகன்   தெய்வநல்லூர் கதைகள் – 5  – ஜா. ராஜகோபாலன் அதிரியன் நினைவுகள் – 16 – மார்கரெத் யூர்செனார் (தமிழாக்கம்: நா.கிருஷ்ணா) உபநதிகள் – ஒன்பது – அமர்நாத் கதைகள்: உள்ளிருத்தல் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ் போர் – ஜெகன்மித்ரா […]

இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு-2023

This entry is part 10 of 13 in the series 2 ஜூலை 2023

”மற்றமை” யின் இரண்டாவது வெளியீடாக மார்ச்-08 மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு-2023. சிறகுகளே ஆயுதமாக… இத்தொகுப்பில் இடம் பெற்ற பெண் கவிஞர்கள் அனார், தினுஷா மகாலிங்கம், சஞ்சிகா லோஜன் சித்தி ரபீக்கா பாயிஸ், க.ஷியா, அஸ்ரபா நூர்டீன் மின்ஹா, அம்பிகை கஜேந்திரன், கெக்கிராவ ஸூலைஹா பாலரஞ்சனி ஜெயபால், அஸ்மா பேகம், தாட்சாயணி மரீனா இல்யாஸ் ஷாபி, தயானி விஜயகுமார், தம்பிலுவில் ஜெகா, ஜென்சி கபூர் மிஸ்ரா ஜப்பார், எஸ்தர் மலையகம் […]

காற்றுவெளி மின்னிதழ் – அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ்

This entry is part 10 of 19 in the series 25 ஜூன் 2023

வணக்கம்,காற்றுவெளி மின்னிதழ் விரைவில் ஈழத்து எழுத்தாளர்.அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ் ஒன்றைக் கொண்டு வரவுள்ளது.எனவே,அவரின் நூல்கள் பற்றிய ஆய்வுகள்,அவரின் படைப்பாழுமை,அவரின் இதழியல் சார்ந்த கட்டுரைகளை படைப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.படைப்புக்கள் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமல்,வேறெங்கும் பிரசுரமாகாமலும் இருத்தல்வேண்டும்.படைப்புகள் கிடைக்க வேண்டிய கடைசி நாள்:18/08/2023.அன்புடன்,முல்லைஅமுதன்mahendran1954@hotmail.com