சோம. அழகு ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு, தலையில் தூக்கிக் கரகம் வைத்துக் கொண்டாடி, மனம் உருகிக் கரைந்து, அப்படியே விட்டத்தைப் பார்த்தவாறே மோவாய்க் கட்டையைத் தடவி விட்டு, பழைய நினைவுகளைக் கிண்டுகிறது, கிளறுகிறது, கொத்துக்கறி போடுகிறது என ஓர் அட்டுப்பிடித்த flashbackல் மூழ்கி, …. – ‘96’ என்னும் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது அல்லது ஒவ்வொரு வருடமும் அந்த ‘அமரகாவியத்திற்கு’, ‘ஒப்பற்ற(!) ஓவியத்திற்கு’த் திவசம் கொண்டாடப்படும் போது நடப்பவையே மேற்கூறியவை. […]
சோம. அழகு அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் செய்து ஒரு காலத்தில் எழுதின? இப்போ எப்படி? தடபுடலா விசேடங்கள் முடிஞ்சுதா?” என அவசரமும் ஆர்வமுமாய்க் கேட்போருக்கு […]
குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்கிறது. உள்ளே நுழைந்ததுமே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நுழைந்த உணர்வு இருக்கும். மளிகைக் கடைகள் சார்ந்த வணிகப் பகுதியில் வரும்போது நாகர்கோவில் கோட்டாறு கம்போளத்தெருவுக்குள் நுழைந்த உணர்வும் ஏற்படும். மலையாளத் தமிழர்கள் ஆ.மாதவனின் […]
முனைவர் ம இராமச்சந்திரன்உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். மதுரை தியாகராசர் கல்லூரி பல சிறப்புகளைக் கொண்டு தனக்கான ஆளுமையை உருவாக்கிக் கொண்டது. அதற்குப் பல அறிஞர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இக்கல்லூரியில் நான் 1995-2000 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக்கொண்டு இருந்தேன். தியாகராசர் கல்லூரி சைவ மரபிற்கும் தமிழ் அறிஞர்களுக்கும் பெருமக்களுக்கும் பெயர்பெற்ற கல்லூரி. […]
ஆயிரத்தொரு இரவுகள் என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில், அதாவது திரைப்படத்திற்கான காட்சிகள் ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல். ஆயிரத்தொரு இரவுகள் அரபிக் கதையல்ல. இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால் வியாபாரப் பொதிகளோடு எடுத்துச் செல்லப்பட்டது. இப்படியான கதை சொல்லல் ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள […]
2020 கார்த்திகை மாதம்- மெல்பேன் – மல்கிறேவ் மிருக வைத்தியசாலை வசந்தகாலமாக இருக்கவேண்டும் ஆனால் இந்த வருடம் குளிர்காலமும் வசந்தமும் ஒன்றுடன் ஒன்று பிரியாது இருந்தது. அது பெரிதான பிரச்சனை இல்லை . கொரானால் மெல்பேன் நகரம் மூடப்பட்டு அல்பேட் காமுவின் பிளேக்கின் கற்பனைக்கு, 21ம் நூற்றாண்டில் நிஜமான வடிவம் கொடுக்கப்பட்ட காலம். ஆனால் மிருகவைத்தியர்கள் அவசரகால வேலையாளர்களின் பகுதியாக இருப்பதால் தொழில் செய்ய அனுமதியுள்ளது. மிருக வைத்திய நிலையத்தில் காலை பத்து மணிக்குப் பதியப்பட்டிருந்த முதலாவது […]
அழகியசிங்கர் 15.12.2020 பாரதியாரின் வசன கவிதையை எடுத்துக்கொண்டு எழுதலாமென்று நினைக்கிறேன். பாரதியார் மரபுக் கவிதைகள் மட்டுமல்ல வசன கவிதைகளும் எழுதி உள்ளார். 90 சதவீதம் மரபுக் கவிதைகளும் பத்து சதவீதம் வசன கவிதைகளும் அல்லது அதற்குக் குறைந்த சதவீதம் எழுதி உள்ளார். பாரதி மறைந்தபோது கவிதை உலகில் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெறுமை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். இத்தனைக்கும் பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் இருந்தபோதும். பாரதி இறந்த 10 ஆண்டுகள் கழித்துத்தான் ந பிச்சமூர்த்தி , க.நா.சு மூலமாக புதுக் கவிதை என்ற இலக்கிய வடிவம் பாரதியின் […]
ஜோதிர்லதா கிரிஜா நான் அறிந்த தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களில் கலைஞன் பதிப்பகத்தைத் தோற்றுவித்த அமரர் “கலைஞன்” மாசிலாமணி அவர்கள் சற்றே வித்தியாசமானவர். சமுதாயப் பிரச்சினகள் பற்றிக் கவலைப்பட்டு அலசக்கூடியவராக அவர் இருந்துள்ளார். அவரை நான் சந்திக்க வாய்த்தது தற்செயலாகத்தான். ஒரு நாள் தியாகராய நகர்ப் பேருந்து நிறுத்தம் ஒன்றில் என் தோழி ருக்மிணியும் நானும் நின்றிருந்தபோது எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. ருக்மிணியைச் சந்தித்துவிட்டு அன்று எங்கள் வீட்டுக்குச் செல்லும் பொருட்டு நான் பேருந்து நிறுத்தத்தில் […]
மு.கவியரசன் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தூய சவேரியார் கல்லூரி – தன்னாட்சி பாளையங்கோட்டை, திருநெல்வேலி. 7397164133 எழுத்து பல வகைப்படும். ஒவ்வொரு எழுத்தும் தனித்துவமாக விளங்குவதற்கு தனித்துவமான தன்மைகள் அதற்குள் இருந்தாக வேண்டும். அப்போதுதான் அவ்வெழுத்து உயிர்ப்பெற்று சமூகம் எனும் நிலப்பரப்பிற்குள் அலைந்து திரியும். முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி அவர்களின் எழுத்தும் அலைந்து திரிகிறது. முட்டி மோதிக்கொள்கிறது. இம்மோதல் எங்கிருந்து தொடங்குகிறது என்பதுதான் கேள்வி. கல்விப்புலத்தில் […]
[ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு] முனைவர் க. நாகராசன் ”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக அது காட்சி அளித்தது. விழுப்புரத்தை அடுத்த பிரௌட தேச மகரஜபுரம் என்னும் வளவனூரில் பல கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. ஜகன்னாத ஈஸ்வரர் கோயிலையும், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலையும் ஆய்வுப் பொருள்களாக […]