புரட்சி

This entry is part 1 of 6 in the series 6 ஏப்ரல் 2025

முகுந்தன் பெங்களூரிலுள்ள அந்தக் கல்லூரியில், அந்தப் பிரிவில் சேர்ந்ததற்குக் காரணம் இருந்தது. முதல் நிலையில் தேர்ச்சி பெற்றால் நியூயார்க்கில் வேலை செய்யலாம். அந்தச் சுதந்திரச் சிலையைப் பார்த்தபடி ஒவ்வொரு பொழுதும் விடியலாம். அந்தக் கல்லூரியில் படித்த பலர் அங்கு வேலை செய்கிறார்கள். அவர்களே வேலை வாங்கித் தந்துவிடுவார்கள். அதுமட்டுமல்ல. தன் நெருங்கிய நண்பன் இப்போது நியூயார்க்கில்தான் இருக்கிறான். சொந்தச் செலவில் நியூயார்க் சென்றுவிட்டால் போதும். * எல்லாம் சுமுகமாகவே நடந்தது. நியூஜெர்சியில் மூன்று நண்பர்களோடு இப்போது முகுந்தன் […]

 நம்பாதே நீ

This entry is part 2 of 6 in the series 6 ஏப்ரல் 2025

  மீனாட்சி சுந்தரமூர்த்தி.     நகரின் மையப்பகுதியில் வானளாவ வளர்ந்திருந்த அந்த மருத்துவமனை வாயிலில்  சிவப்பு சைரன் ஒலிக்க  வந்து நின்றது  ஆம்புலன்ஸ். காத்திருந்த அந்த வெள்ளைச் சீருடைப் பணியாளர்கள் . வண்டியிலிருந்தப் பெண்மணியை ஸ்ட்ரெச்சரில் மாற்றிப் படுக்கவைத்து வேகமாக அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்றனர்.அங்கிருந்த மருத்துவர் ஓடி வந்து பார்த்தார், அந்தப் பெண்ணின் மகளும், மருமகனும் கவலை தேக்கிய முகங்களுடன் நின்றனர். மருத்துவர் , ‘ என்ன ஆச்சு சொல்லுங்க’ ‘டாக்டர் அம்மாவுக்கு  ஒரு வாரமா […]

மத்தேயு  6 : 3

This entry is part 5 of 6 in the series 6 ஏப்ரல் 2025

சோம. அழகு “கயலு… உனக்கு சுண்டல் அவிச்சு வச்சிருக்கேன். அந்தச் சின்ன சம்படத்துல வடையும் வாங்கி வச்சிருக்கேன். பசிச்சா சாப்பிடு தங்கம். விளையாண்டு முடிச்சுட்டு எழில் அக்கா வீட்டுல இரு. நான் வந்து கூப்பிட்டுக்குறேன். சரியா?” – அவ்வளவு நேரம் தொடுத்த பூச்சரங்களையும் மாலைகளையும் கூடையினுள் எடுத்து வைத்து வழமையான மாலை வியாபரத்திற்குக் கிளம்பியவாறே தன் மகளிடம் வாஞ்சையாகக் கூறினாள் மலர். என்ன ஒரு பெயர் பொருத்தம்! “யம்மா… நானும் கூட வாரனே!” – கிட்டத்தட்டக் கெஞ்சினாள் […]

சார், பேனா இருக்கா…?

This entry is part 6 of 6 in the series 6 ஏப்ரல் 2025

உஷாதீபன் சின்ன உதவிதானே…செய்தா என்ன…குறைஞ்சா போயிடுவீங்க….-? தாங்க முடியாத சலிப்போடு தன்னை மீறிக் கத்தினாள் விசாலி. தன் கணவனின் குணம் இப்படியிருக்கிறதே என்று மனசுக்குள் மிகுந்த  வருத்தம் அவளுக்கு. எந்தெந்த விஷயங்களுக்கோ சொல்லிச் சொல்லி அவன் திருந்தினபாடில்லை.  குறைஞ்சா போயிடுவீங்க-ன்னு எத்தனைவாட்டிதான் செய்றதாம்? போறபோதெல்லாம் இப்டியே இருந்தா? எரிச்சலா இருக்குல்ல…? என்று பதிலுக்கு அலுத்துக் கொண்டான் வைத்தி.  என்னவோ பெரிய்ய்ய்ய நஷ்டம் ஏற்பட்டுட்டாப்லதான்….போனாப் போகுது….அஞ்சு ரூபாப் பேனா…! இதுக்குப் போய் மூக்கால அழாதீங்க…என்றாள் விசாலி. இன்னும் கடுமையாகச் […]

நீ தான் என் ஜீனி

This entry is part 4 of 5 in the series 16 மார்ச் 2025

ஆர் சீனிவாசன் ஒப்புக்கொள்கிறேன். நான் தான் உரசலை ஆரம்பித்தேன். வேலை அழுத்தத்தின் பின் விளைவுகளை நாவு வரை செல்ல அனுமதித்திருக்க கூடாதுதான். வீட்டிற்கு வந்தவுடனே அலர் “ஏன் இவ்வளவு லேட்டு. இன்னைக்கு வெளியில சாப்பிடலாம்னு நினைச்சோமே” என்றதிற்கு முகம் சுளித்திருக்க கூடாததுதான். “ஏன் இப்படி…” என வாக்கியத்தை முடிக்காமல் ‘உம்’மென முகத்தை வைத்துக்கொண்டு போனவளை சமாளிக்க முடியாமல் அன்று மாலை முழுவதும் மூலைக்கு ஒருவராக கழித்தோம். படுக்கையில் சீண்டி கொஞ்சம் அத்து மீறலாமா என நினைத்தேன். ஆனால் […]

“கடமை “

This entry is part 2 of 5 in the series 2 மார்ச் 2025

உஷாதீபன் சார்…தபால் திரும்பி வந்திருக்கு …..-ஒரு வணக்கம் போட்டு சொல்லிக் கொண்டு வந்த போஸ்ட்மேனை நிமிர்ந்து பார்த்தார் கனகமணி.  நீட்டிய தாளில் கையொப்பமிட, பியூன் செல்லச்சாமி வந்து சீல் வைத்து திருப்பிக் கொடுத்தார். . தபாலை நிதானமாக சிசர் வைத்து நுனியில் கட் பண்ணினார். உள்ளே இருந்த  தாளை எடுத்தார். ஒரு மெல்லிய பதற்றம் அவரிடம் பரவியிருந்ததை உணர்ந்தார்.  எழுத்தர் அவிநாசிக்கு  அனுப்பிய கடிதம்தான அதன் ஜெராக்ஸ்  இணைப்போடு திரும்பியிருந்தது. நாம அனுப்பிச்சதே திரும்பிடுச்சு? என்றவாறே அந்தக் […]

என்னாச்சு கமலம் ?

This entry is part 7 of 11 in the series 16 பிப்ரவரி 2025

         மீனாட்சி சுந்தரமூர்த்தி.                                                 கமலம் பட்டுச்சேலை பளபளக்க கழுத்தில் காசுமாலையும் வைரக்கல் அட்டிகையும்  கலகலக்க, காதில் வைர லோலாக்கு ஊஞ்சலாடப் பேருந்தில் ஏறினாள். பின்னாலேயே முருகேசன் பட்டு அங்க வஸ்த்திரம்,அகலக்கரை போட்ட வேட்டி, ஜிப்பா சிலுசிலுக்க  ஏறினார்.. கும்பிடறேனுங்க ஐயா, அம்மா வணக்கம் என்றார் நடத்துநர்  ஓட்டுநர் திரும்பிப் பார்த்து,’ அம்மா வணக்கமுங்க, பெரியம்மா வரலியா? ‘.. மாடு, கண்ணுங்களை யாரு பாக்கறது?அதான் கெழவிய பாத்துக்கச் சொல்லி வந்துட்டோம்.’ கிழவி என்றது மாமியாரைதான்.  ‘பெரியவரு தேங்கா மண்டியை […]

பூவண்ணம்

This entry is part 8 of 11 in the series 16 பிப்ரவரி 2025

“சாகித்தியா… நீ ஒண்டுக்கும் யோசியாதை. எல்லாம் நல்லபடியா நடக்கும்.நான் ஒருக்கா ரெலிபோன் பூத் வரைக்கும் போட்டு வாறன்.” படுக்கையில்இருந்த என்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சினாள் பமீலா. கண்ணீரைத் தன்கைகளினால் துடைத்துவிட்டாள். இரவு முழுவதும் நான் உறங்கவில்லைஎன்பதை அவள் அறிவாள்.“இண்டைக்கு கனடாக் கோல் வருமெண்டு ராஜன் அண்ணா சொன்னவரா?”“ஓம் சாகித்தியா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாலை வந்து சொல்லிட்டுப்போனவர். நான் மாத்திரம் போய்க் கதைச்சிட்டு வாறேன்.”நான் சென்றால் அழுது ஒப்பாரி வைப்பேன் என்பதால், என்னைக் கூட்டிச்செல்வதைத் தவிர்த்தாள் பமீலா. அவள் […]

வெளியே நடந்தாள்

This entry is part 6 of 11 in the series 16 பிப்ரவரி 2025

சசிகலா விஸ்வநாதன்  ராம திலகம்  நிதானமாக வீட்டை சுற்றி வந்தாள்.  எல்லாம் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது. ஸ்வாமி  மாடத்தில் அமர்ந்து கொண்டு அம்பாள் காமாட்சி இவளையே பார்த்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. “சட்” என் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். அருகில் இருந்த குத்து விளக்கை ஏற்றும் போதும்  அவளுடைய பார்வை குறுகுறு வென அவள் மேல் படர்ந்தாற் போல் உணர்ந்தாள்.  எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆசி அளிக்கிறாளா?              வீடு […]

ஆல்ஃபா’ என். யு – 91

This entry is part 4 of 8 in the series 19 ஜனவரி 2025

சோம. அழகு தேநீர் கடைக்கும் நகல் எடுக்கும் கடைக்கும் பொதுவான இடத்தில் நின்று இனிப்பு தூக்கலான ஒரு கோப்பை பாலை ஆதினி மிடறுகளாய் மாற்றிக் கொண்டிருந்த வேளையில், வெகு நாட்களாகக் கேட்டிராத ஆனால் மனதிற்கு மிகவும் நெருக்கமான, கேட்டவுடன் மொத்தமாக உருகச் செய்கிற பாடல் ஒன்றை ஒலித்தவாறே பேருந்து ஒன்று சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தது, இல்லை! இல்லை! ஆதினிக்காகக் காத்துக் கொண்டிருந்தது. பிடித்த பாடலை நினைத்தபொழுதெல்லாம் கேட்கக் கிடைப்பதை விட இவ்வாறு அரிதாக ஒரு அற்புதமாக போகிற […]