தேனும் திணை மாவும்

This entry is part 15 of 39 in the series 18 டிசம்பர் 2011

ஆடு மேய்க்கிற ஆத்தா போயி அர நாழி ஆயிருச்சு சில்லுவண்டும் கூட்டுசேந்து சத்தம் போடக் கெளம்பிருச்சி கோழிகளும் பத்திரமா தன் கொடப்புக்குள்ள பதுங்கிருச்சி செனை மாட்டத் தேடி வந்த சின்னய்யாவும் போய்த்தாரு மோட்டிலேறிப் பாக்கையில கண்ணுக் கெட்டுன தொலைவுவர மனுச நடமாட்டம்னு எதுவுமில்ல கூத்துப் பாக்க கூட்டம் ஒன்னு பந்தம் கொளுத்தி நவந்து போவுது சுள்ளி பொறக்கி சுடவச்ச கஞ்சிப் பான காஞ்சுக் கெடக்கு கறிக்கி கொண்டாரப் போன அத்தான் பொழுதாயும் குடுசை திரும்பல-காளியாத்தா! எங்கத்தானுக் கொன்னும் […]

முகமற்றவனின் பேச்சொலி

This entry is part 13 of 39 in the series 18 டிசம்பர் 2011

பாவனைகளும் தோரணைகளும் எங்கோ கண்டதின் சாயலில் வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும் நம் நிழல் போல் சுவர்களை மீறி வரும் ஒலி அறையின் வெக்கையாய் அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள் உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல் ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை விழித்திருக்கும் தன் கண்களை உருட்டியபடி கனல் நீரில் தத்தளிக்கும் துடுப்பற்ற பொத்தல் படகாய் என் அன்னியோன்யத்தில் உலவும் எனக்கே அல்லாத உறவின் முகம் எப்போதுமே கதைத்திருக்கும் தான் கரைந்ததும் கனத்ததுமாய் கண்கள் காணாத முகமற்றவனின் பேச்சொலி செவிகளில் பதியும் […]

திண்ணையில் கண்ணம்மா பாட்டி

This entry is part 9 of 39 in the series 18 டிசம்பர் 2011

நள்ளிரவில் நனைந்திருந்த நிலையத்தில் நின்றது பேரூந்து முன்னிரவின் மழை மிச்சமிருந்தது மசாலாப் பால் கடையின் மக்கிப்போன கூரையில் மஞ்சள் தூக்கலாக யிருந்த மசாலாப் பாலில் மடிந்த ஈசல் பாலை மேலும் அசைவமாக்கியிருந்தது எடை குறைந்த பயணப் பொதியோடு ஈரத்தில் நடந்து என் வீடிருந்த சந்தின் முச்சந்தியை அடையவும் காணும் தூரத்தில் என் வீட்டுக்கு எதிர் வீட்டில் மேடையிட்டத் திண்ணையில் கண்ணம்மா பாட்டி உட்கார்ந்திருந்தது கண்ணம்மா பாட்டி கதை சொல்லாது காதைக் கிள்ளாது பாதையில் செல்வோரை வதைக்கவும் செய்யாது […]

அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்

This entry is part 42 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஸ்ருதி ரமணி ஏ, பாரதி…! பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட முயன்றவனே நீ விட்டுச் சென்ற அக்கினிக் குஞ்சை நாங்கள் இன்று தேடிக் கொண்டிருக்கின்றோம் வீரத்தைப் பறைசாற்றிய அது இன்று எங்களின் அவசியத் தேவை கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து நாங்கள் குமைந்து கொண்டிக்கிறோம் இன்று புதிதாய்ப் பிறந்தோமென உன் மக்கள் எண்ண வேண்டுமெனின் திரும்பி ராமல் இங்கே தீமைகள் அழிய வேண்டும் நீ உரைத்தது போல் மடமை, சிறுமை, துன்பம், பொய் வருத்தம் நோவு இவை […]

பிரம்மக்குயவனின் கலயங்கள்

This entry is part 39 of 48 in the series 11 டிசம்பர் 2011

சக்கர ஓட்டத்தின் எதிர் திசையில் தனக்கான அழுத்தங்களைப் பதித்து கோடுகளில் கலயங்களின் தலைவிதி எழுதினான் குயவன். பின்பு நிலவின் இரவொன்றில் காந்தர்வக் கண்ணன்களை ராதைகளோடு உலவ விட்டான் உலக வீதிகளின் ஆடை விலக்கி. குயவ‌னுள் எழுந்த செறித்த வண்ணங்களை அப்பிக் கொண்டு கண்ணன்கள் தங்கள் கோகுலங்களில் ராதைகளைச் சிறை வைத்தனர். அவனின் வியர்வையை உள்ளிளுத்து வட்டம் தறித்த‌ கலயக்கோடுகள் கண்ணன்களின் வயிறுகளுக்குப் பொங்கிப் போட அனுப்பப்பட்டன. கோகுலக்களிப்பின் மிகுதியில் மஞ்சள் சிவப்பு பச்சையென‌ ராட்சசக் கண்ணன்கள் ஒன்று […]

மழையும்..மனிதனும்..

This entry is part 38 of 48 in the series 11 டிசம்பர் 2011

மழை பெய்து கொண்டிருக்கிறது ரசித்துக் கொண்டிருக்கிறேன் நொறுக்குத் தீனியுடன்.. பாழாய்ப்போன மழை வெளியே செல்ல இயலவில்லை என்கின்றேன்.. தொலைபேசியில் அழைப்பவனிடம்.. நல்லது செய்யும் மனிதன் மட்டுமல்ல மழையும் சபிக்கப்படும் போல..

பார்வையின் மறுபக்கம்….!

This entry is part 37 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஒருபக்கத்தில்..! கம்பன் பயிரிட்ட தமிழ்… காளிதாசன் நிறைத்த தமிழ்.. பாரதியார் வளர்த்த தமிழ்.. கண்ணதாசன் நீந்திய தமிழ்… எதிலும் தமிழே சுதந்திரமாய்..! கவிக்கெனவே .. உதித்திட்டாயோ பாரதி…! எட்டயபுரத்தின் கதாநாயகன் நீ…! அகத்தியரும் ஔவையாரும் அருணகிரிநாதரும்.. முத்தமிழும் ஊட்டி வளர்த்ததனால்… மீசைவைத்த சூரியனாக வளர்ந்தனையோ..!!! வீரகவி வளர்த்த தமிழ்பயிர்களில் பதர்களாய் அந்நியமொழி பிரவேசம்… தமிழை உறிஞ்சி அழிக்குமோ..? பைந்தமிழின் கழுத்து நெறிகிறதோ..? பதறுவதைப் பார்த்தனையோ பாரதி..? வேரோடு அறுத்தெறியத் தமிழ்நெஞ்சங்கள்.. நாடுதே…தேடுதே…மீண்டுமுனை..! பாரினில்…தமிழ்வளர்த்த செம்மல்..! வைரத்தை வைரம்கொண்டு […]

அழிவும் உருவாக்கமும்

This entry is part 36 of 48 in the series 11 டிசம்பர் 2011

கணேஷ் நானூறு மெல்லிய கதிர்கள் ஒருங்கிணைந்து ஒற்றைக்கதிரானது. திண்மை பெருகி ஒளியின் உக்கிரம் ஆயிரம் மடங்கானது. நேர்க்கோட்டில் பயணித்தது கதிர். எதிர்வந்த திடப் பொருள்கள் கிழிந்தன. திரவப்பொருள்கள் கொதித்தன. ஏழைச்சுவர் ஒன்று அதன் பாதையில் வந்தது. சுவர் செங்குத்தாக இரண்டு பட்டது. சுவர் உடைந்ததில் செங்கல் துகளோன்று மண்ணில் வீழ்ந்தது. சில நூறு வருடங்களில் சுவரிருந்த இடத்தில் ஆறொன்று ஓடத்துவங்கியது. ஆற்று நீரின் அரிப்பில் இரண்டாக உடைந்திருந்த சுவர் முழுதும் அரிக்கப்பட்டு அடித்துச்செல்லப்பட்டது. செங்கல் துகள் மட்டும் […]

விருப்பங்கள்

This entry is part 35 of 48 in the series 11 டிசம்பர் 2011

என் கருதுகோள்கள் ஒவ்வொன்றாக உதிர தொடங்குகிறது பொய்மையின் உருவில் . வழியெங்கும் அதன் பிம்பங்கள் என்னை துரத்துகிறது உண்மையின் சிந்தனையாய் . குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லாமலே வார்த்தை இயலாமையில் உறைகிறது . அவரவர் நியாயங்கள் பொய்மையும் உண்மையும் உருவில் அலைந்து கொண்டிருக்கிறது . அவர்களுக்கு விருப்பமானவற்றை அணிகிறார்கள் நம்மையும் அணிவித்து விடுகிறார்கள் அவர்களின் வாயிலாகவே. -வளத்தூர் தி .ராஜேஷ் .

காந்தி சிலை

This entry is part 28 of 48 in the series 11 டிசம்பர் 2011

எங்கோ பறந்து வந்து இளைப்பாறி எச்சமிட்டபோதும் அதே புன்னகையுடன் இருக்கிறார் காந்தி தடி இருந்தும் அந்த பேருந்தில் பத்து பதினைந்து காந்தி சிலையாவது பயணித்து இருக்க வேண்டும் நிறுத்தம் வந்ததும் ‘காந்தி சிலை இறங்கு’ என இரு முறை கூவும் நடத்துனர் உச்சி வெயிலிலும் தன் கைத்தடி நிழலில் அரைமணி நேரமாய் ஏதோ படித்து கொண்டிருக்கிறான் இளைஞன் ஒருவன் மெதுவாய் அவன்மேல் காந்தியின் பார்வை பட ஏதோ செய்தி வர அவசர அவசரமாய் புறப்பட்டான் அவன் காதலி […]