‘கவிதைகள்’ படைப்புகள்
நம்பிக்கை
பெரும்பாறையை யானையாய் ஆக்கியவனுக்கு எவ்வளவு நம்பிக்கையிருந்தால் கால்களில் பிணைத்திருப்பான் சங்கிலியை?! – இலெ.அ. விஜயபாரதி [Read More]
மூலக்கூறுக் கோளாறுகள்..:_
ஒன்றறியாமலே ஒன்றின் கால் ஒன்றறியும்.. எண்டோசல்பான் கலந்த கார்பன் ஹைட்ரஜன் மூலக்கூறுக் கோளாறில் விசையுற்றுப் பறக்கும் ஃபோட்டான்கள் மிதக்க உள்நுழைந்த கார்னியா கிரணம் பீடிக்க எண்டார்ஃபின்கள் தடை பிறழ்ந்த உற்பத்தி.. டெசிபல்களும் பிக்சல்களும் மாயக்கண்ணாடிப் பிம்பம் விளைத்த க்ளோனிங்குகள்.. சடை விழுது பின்னிய சாரையும் சர்ப்பமும்.. காலற்ற பைசாசங்கள் சுற்றிய நஞ்சுக் [Read More]
யார்
நேற்று பார்த்த முகங்களில் ஒன்று கூட நினைவடுக்குகளில் தங்கவில்லை தோற்றப் பொலிவுக்கு எத்தனை மதிப்பு இவ்வுலகில் எச்சில் இலை பொறுக்கும் பிச்சைக்காரி்க்குத் தான் தெரியும் பசியின் விஸ்வரூபம் குறளி வித்தைக்காரனிடம் பணத்தை பறிகொடுத்து நிற்பார்கள் இரத்தம் கக்குவதற்குப் பயந்து சில அப்பாவிகள் வன்முறையை எதிர்க்கும் திரைப்படத்தில் அரிவாள் தான் கதாநாயகன் பறவைகளின் [Read More]
பிரதிபிம்ப பயணங்கள்..
விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் என்னை விலக்கி அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. . அவன் யார்? என்னைக் காணும் வேளைகளில் அவனுள் பிறக்கும் குறுநகைப்பிற்கான தகிக்கும் அர்த்தங்கள் யாது? எனக்கும் அவனுக்குமான இடைவெளியின் அலைவரிசை ஒப்பந்தங்கள் உரைப்பது உண்மையில் என்ன? அவன் என்னைத் தீண்டுகையில் பிரதிகள் இடம்மாற்றப்படுவதை இதழ்களும் செவிகளும் உணர மறுக்கும் [Read More]
ஒரு பூ ஒரு வரம்
ஒரு பூ சோலையை கொண்டாடியது. அது மலர்ந்தும் மலராத தருணங்களில் மண் வயசுக்கு வந்தது . அந்தப் பூ ஊசித் தட்டான் ,வண்ணத்து பூச் சிகளை அருகழைத்து முகவரி சொல்லிக் கொண்டிருந்தது . யாரும் விலாசம் மறந்து விட லாகாது ….. மறக்காமல் வாசனையையும் பரிசளித்தது , கொஞ்சம் தேனையும். இதழ்களின் நுனியில் பனித்துளி பரவசமானபோது சூரியன் தாகம் தனித்து கொண்டான் அடர்ந்த வெறுமைகளில் அலைக் கழிந்த [Read More]
அரசியல்
கீதங்கள் இசைத்து கிரிக்கட் விளையாடி வெள்ளித் திரையில் சின்னத் திரையில் மேடைகளில் நடித்து கொலை செய்து கொள்ளையடித்து தாதாவாகி மிரட்டி அதுவும் முடியாதெனில் குறைந்த பட்சம் பாலியல் வன்முறையொன்றையாவது பிரயோகித்து பெயரை உருவாக்கிக் கொண்டு உருவத்தை அலங்கரித்து உடலைச் சமைத்து அப் பெயரை விற்று தேர்தலில் வென்று அமைச்சரவையில் ஆசனமொன்றையும் பெற்றுக் கொள்ளும் சோறுண்ணும் [Read More]
அகம்!
இன்று வியாழன்… நேற்றுதான் சென்றது வெள்ளிக் கிழமை, எத்தனை வேகமாய் கடக்கிறது இந்தியனின் இளமை அமீரகத்தில்?! எத்தனை காலமல்ல குடும்ப வாழ்க்கை எத்தனை தடவை என்றாகிப்போனதே! ஊரிலிருந்து வந்த நண்பன் உன் நினைவுகள் மொய்க்கும் பெட்டியொன்று தந்தான். அட்டைப்பெட்டியின் மேல் எழுதியிருந்த என் பெயர் சற்றே அழிந்தது நீ அட்டைப் பெட்டி ஒட்டிக் கட்டுகையில் பட்டுத் தெறித்த உன் [Read More]
உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்
நான் மழை ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன் உன் பழங்கால ஞாபகங்களை ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் எனை மறந்து சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும் குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய் ஆனாலும் உன் முன்னால் உனைச் சூழச் சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன் உனைக் காண்பவர்க்கெலாம் நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க் [Read More]
முகபாவம்
* முன்னோர்களின் மண்டையோட்டுக்களை மிகக் கவனமுடன் பார்த்துக்கொண்டொரு முகபாவத்தை வெளிப்படையாகப் பத்திரப்பத்துகிறேன் அவர்கள் எல்லோரும் ஒரே முகபாவம் கொண்டிருந்தனர் அடிக்கடி நானே என்னிடம் சொல்லிக்கொள்வதுண்டு அவர்களை விட நான் மிகவும் வித்யாசமானவன் என்று அவர்களது முகபாவமொன்று என் சதைக்குப் பின்னால் கொடிய நகைப்புடன் ஒளிந்திருப்பதை அறியாமல் குருதிச் [Read More]
சாலைக் குதிரைகள்
சூர்யா சாலையில் சிங்கமாய் சீறி இயந்திரக் குதிரைகளில் பறந்தவர்களை காவல் துறை கேமிராக் கண்களில் பார்த்து கைகளில் விலங்கை மாட்டியது. சிறையின் கம்பிகளுக்குள் இருந்து கண்ணயர்ந்தவர்களின் கனவில் ஒரு தேவதை வந்து சொன்னாள்.. போட்டிகளுக்கென்றே களங்கள் இருக்கின்றன.. திறன்களையெல்லாம் அங்கே கொட்டினால் கோப்பைகளெல்லாம் வீட்டில் குவியுமே என்று. [Read More]