கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -1)

This entry is part 20 of 39 in the series 4 டிசம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு நிர்வாண மனிதன் ஆற்று நீரிலே குதித்தான் வண்டுகள் தலைக்கு மேல் சுற்றி ரீங்காரம் செய்யும் போது ! நதியின் தூய நீரோட்டம் தான் கடவுளை நினைக்க வைப்பது ! இறைவன் தவிர வேறெந்த மெய்ப்பாடும் இல்லை இவ்வுலகில் ! இறைவன் ஒருவனே ! மனிதனின் காம இச்சையை நினைவூட்டும், தலையை வலம்வரும் வண்டுகள் ! மனிதனுக்கு வனிதை இவளா […]

பொருத்தியும் பொருத்தாமலும்

This entry is part 18 of 39 in the series 4 டிசம்பர் 2011

விளையாட்டும் வேடிக்கையுமாய் சாலை கடக்கமுயலும் பிள்ளையை வெடுக்கென கொத்தாய் உச்சிமுடி பற்றியிழுத்துப்போகும் அம்மா! சராசரிக்கும் குறைவான புத்தியோடு சளசளவெனப்பேசும் ஒற்றை மகனுக்கு படிப்பு பணி தொழிலென எதையும் பதியனிடமுடியாமல் தவிக்கும் அப்பா! இல்லற வெம்மையில் வாசமிழந்த மலரில் நெருப்புத்துண்டங்களை தூண்டில்முள்ளாய் வீசும் குறைந்த வயதுடைய சகஊழியனின் சல்லாபமோகத்தில் வெதும்பும் தோழி! வரும் மாதவாடகை கரண்ட்பில் அக்கம்பக்கம் புரட்டிய கைமாத்துக்கு கை பிசையும் வாழ்ந்துகெட்டோர் வாரிசான மத்திம வயதையெட்டும் தோழன்! ஆயிரம் ரூபா முதியோர் பென்சனில் ஆறுக்கு எட்டு […]

இரண்டு வகை வெளவால்கள்

This entry is part 17 of 39 in the series 4 டிசம்பர் 2011

அளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய கருப்பு வெளவால் ஒன்று அலுவலகம் புகுந்தது மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது பிறகு இன்னொருவர் மேசைக்கு கீழே சென்றது “மேசை மேலே வா எழும்பு ஜன்னலைப் பார் ஆகாயம் தெரியும் வெளிச்சம் தேடு” என்றெல்லாம் நினைக்கத் தான் முடிகிறது சொல்ல முடிவதில்லை மன வெளவாலிடம். *****

கனவுகளின் பாதைகள்

This entry is part 15 of 39 in the series 4 டிசம்பர் 2011

மிதமிஞ்சி உண்டுவிட்டு அடங்காத பசியில் தன்னையும் சேர்த்தே உண்டுவிடுகிறது அந்தக் கரிய துளை… உண்ட மயக்கத்தில் கொண்ட உறக்கத்தில் காணும் கனவுகளிலெல்லாம் முக்காலமும் உணர்கிறது அது… அக்கனவுகளுக்குள் பாதையிட‌ காத்திருக்கிறது சிலிக்கான் சமூகம்…

விசித்திரம்

This entry is part 6 of 39 in the series 4 டிசம்பர் 2011

மார்கழி பனிப் புயலில் மெழுகுவர்த்திகள் அணைந்து போகின்றன… எங்கும் குளிர் எதிலும் இருள் அங்கு – மின்னல் கீறுகள்தான் மாயமான வெளிச்சங்கள்.. சுவாச மூச்சுக்கள் தான் சூடான போர்வைகள்.. வீதி விளக்குகளும் விகடமாமக் கோபித்துக் கொள்கின்றன.. மின் விசிறிகளும் சொல்லாமலே அணைந்து போகின்றன.. மார்கழிப் பனிப் புயலில் எவைதான் எஞ்சுகின்றன…? உறக்கங்கள் மட்டும் தான்! கனவுகளைத் தேடி ஆன்மாக்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன., கார்கால மின்னல் வெளிச்சங்களில் எப்படித்தான் தேடிப்பார்க்கப் போகின்றனவோ…? ஜுமானா ஜுனைட், இலங்கை.

யானையைச் சுமந்த எறும்புகள்

This entry is part 2 of 39 in the series 4 டிசம்பர் 2011

சூர்யா நீலகண்டன் நொண்டி வந்த யானையை நோக்கி அது விழுந்து விடும் என்று இரங்கி இரு பக்கமும் பக்கபலமாக ஓடின ஈரெறும்புகள். நொண்டி நடந்த யானையின் வேகத்திற்கு கூட ஓடமுடியாமல் யானையைச் சுமந்தன அந்த சிறு எறும்புகள் அதன் சிறு மூளைக்குள்.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -2)

This entry is part 36 of 37 in the series 27 நவம்பர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வீட்டை இடிப்பதற்குக் கூலி விலை மதிப்பற்ற புதையல் தான் ! கோடரியும் மண் வெட்டியும் வேலை செய்யும் ! பொறுத் திருந்து நிகழ்வதைப் பார்த்தால் பதறிப் போவாய் நினைத்தது போல் இங்கு நிகழ வில்லை என வருத்தம் அடைவாய் ! வாடகை வீடிது உனக்குச் சொந்தப் பத்திர மில்லை ! ஒத்திக்கு எடுத்த இல்லத்தில் ஒட்டிய ஒரு கடை ! கிழிந்த ஆடையில் […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -1)

This entry is part 35 of 37 in the series 27 நவம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நேற்று என் செயலுக்கு வருந்தினேன்; இன்று தவறை உணர்ந்து என் வில்லை முறித்து நடுக்கத்தை ஒழித்த போது நான் என்மீது ஏற்றிக் கொண்ட தீங்குகளைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டேன்.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ அறிவும். பகுத்தாய்வு நெறியும் உன்னோடு உன் பகுத்தாய்வு வழி முறை உரையாடும் போது என்ன சொல்லுது உன்னிடம் என்று கூர்ந்து கேட்பாய் ! அப்போது நீ […]

சென்ரியு கவிதைகள்

This entry is part 23 of 37 in the series 27 நவம்பர் 2011

பரமனுக்குதெரியாதது பாமரனுக்குதெரிந்தது……… பசியின் வலி. ஊர் சுற்றும் பிள்ளையின் வேலைக்காக…….. கோயில் சுற்றும் அம்மா மனிதர்களில் சிலர் நாற்காலிகளாய் ……….. பலர் கருங்காலிகளாய் அடிக்கடி வருவார் அம்மாவின் வார்த்தைகளில்…… இறந்துபோன அப்பா தேவாலயமணியோசை கேட்கும்பொழுதெல்லாம்…. சாத்தானின் ஞாபகம் தேர் வராதசேரிக்குள் தேசமே வரும் தேர்தல் நேரம் நம்பிக்கை விதைகளை எங்கு விதைப்பது……….. வரண்ட பூமியாய் மனசு சலனமில்லாத குளம் தூண்டிலில் மீன்சிக்குமா……. சலனத்துடன் மனம் எப்பொழுதும் அலங்காரத்துடன் வாழ்கிறார்கள் திருநங்கைகள் சாயம்போன வாழ்க்கை கர்த்தர் நம்மைக்காப்பாற்றுவார்… சிலுவையில் […]

பிறைகாணல்

This entry is part 21 of 37 in the series 27 நவம்பர் 2011

பிறையின் முகங் காண தினந்தோறும் ஆசை அது தேயும்போதும் வளரும் போதும் இரவின் தனிமையில் மேகங்கள் விலகியும் விலகாமலும் அதன் மெளனப்பார்வை என்னில் பதிவதாய் உணர்வேன். மழைநேரம் தூறலின் அசட்டுத்தனம் துயர்ப் படுத்தும்போது பார்க்கமுடிவதில்லை. மீறி மழையில் நனைந்து பார்த்தாலும் வானில் நெளியும் மின்னலைமட்டும் காணமுடிகிறது. இருள் சூழ்ந்து மழையைத்தவிர எதுவுமற்றிருக்கும் வானம்.