நீங்காத நினைவுகள் – 3

This entry is part 7 of 33 in the series 19 மே 2013

முக்கியத்துவம் இல்லாதவையானாலும், சில நினைவுகள் நம் மனங்களை விட்டு நீங்குவதேயில்லை. சில நினைவுகளை மற்றவர்களுடன் உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ளும் போது நம்மைப் பற்றிய சிலவற்றைச் சொல்ல நேர்ந்து விடுகிறது. இந்த நிலையைத் தவிர்க்க முடிவதில்லை. சில நேரங்களில் கொஞ்சம் தற்பெருமையாக நம்மைப் பற்றிப் பேசுவதிலோ எழுதுவதிலோ இந்தப் பகிர்தல் முடிந்துவிடுகிறது. இது பற்றிய கூச்சம் ஏற்பட்டாலும், இந்த நிலை தவிர்க்க முடியாத தாகிவிடுகிறது. இப்போது சொல்லப் போகும் விஷயமும் அப்படிப்பட்டதுதான் என்பதால் தான் இந்தப் புலம்பல் […]

துண்டாடப்படலும், தனிமை உலகங்களும் – இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்

This entry is part 31 of 33 in the series 19 மே 2013

  * திண்ணையில் பல ஆண்டுகள்  தொடராக வந்த நாவல் —————————————-  கமலும், இரா முருகனும் ஒரே சமயத்தில் ஏகமாய் விசுவரூபித்திருக்கிறார்கள்.கமல் ஹாலிவுட்டுக்காக தன் விசுவரூபத்தைக் காட்டியிருக்கிறார். இரா.மு எப்போதுமான தன் விஸ்வரூபத்தை இந்த முறை விரிவான களத்தில் அதிக பக்கங்களில் முன் வைத்திருக்கிறார். சுமார் 50 ஆண்டுகளில் ( 1889 – 1939 ) 50க்கும்மேற்பட்ட  பாத்திரங்களின் நடமாடுதலில் நாவல் என்ற பெருங்கதை வடிவத்தில் தன்னை முன்னிருத்தியிருக்கிறார்.ஆனால் அவை பெருங்கதையாடலை தகர்க்கும் சிறுகதையாடல்களாக புது வடிவம் […]

வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை

This entry is part 22 of 33 in the series 19 மே 2013

கி.சுப்பிரமணியன் (ஐயா, நான் தற்போது ’வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு’ என்ற நூலினை எழுதி வெளியிட்டு உள்ளேன், அந்நூலுக்கு கோவை ஐகேஎஸ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் முனைவர் கி.சுப்பிரமணியன் அவர்கள் எழுதி உள்ள அணிந்துரையை இத்துட்ன் இணைத்துள்ளேன். அதனை தங்களது இதழில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர் வள்ளலாரைப்பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தம்முடைய ஆய்வை ’நீர்மேல் மலர்ந்த நெருப்பு’ என்ற நூலாக வெளியிட்டு உள்ள அவர் இராமலிங்கரையும் இராமகிருஷ்ணரையும் ஒப்பிட்டு மேலாய்வு செய்து […]

சில பறவைகள் எத்தனை பழகினும் அருகே வருவதில்லை

This entry is part 13 of 33 in the series 19 மே 2013

  இந்த வெய்யில் காலம் வந்துவிட்டால் எங்கிருந்தோ வந்துவிடுகின்றன மைனாக்கள். கூடவே சில குயில்களும் , அவ்வப்போது இன்னெதென்று அறியாத பறவைகளும் வந்து அமர்ந்து கொள்கின்றன. என் வீட்டின் பின்னால் நந்தினி பால் கழகத்தின் ( நம்ம ஊர் ஆவின் போல இங்கே பெங்களூரில் நந்தினி ) பெரிய காலி இடம் இருக்கிறது. பயன்படுத்தாது விட்டதால் செடி கொடிகளும் கொஞ்சம் பெரிய மரங்களுமாக சின்னக் காடு போலவே தோற்றமளிக்கும். அதற்குப்பிறகு ஒரு சர்ச்சும் அதனுள்ளேயும் பிரார்த்திக்க வருபவர்களுக்கென […]

இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை

This entry is part 12 of 33 in the series 19 மே 2013

    படைப்பாளிக்கு ஆழ்ந்த ரசனை மிக முக்கியம். ஆழ்ந்த ரசனை என்பது மற்ற சாதாரணர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதும், அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாததாயும் இருத்தல் வேண்டும். அப்படியானால்தான் அந்த ரசனை எழுத்தாக, படைப்பாக வெளிப்படும்போது தனித்துவமாக மிளிர்ந்து நிற்கும். இந்தச் சமுதாயத்தின் அவலங்களை ஆழமாக உள்வாங்கி, மனதுக்குள்ளேயே பொருமி, அழுது, தாள முடியாத வேதனையோடு அவற்றை வெளிப்படுத்தும்போது, அது சத்தியமான படைப்பாகத் தானே முன்வந்து நிற்கும்.     அப்படிப்பட்டதொரு அருமையான படைப்புதான் மே 2013 உயிர்மை இதழில் […]

சி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)

This entry is part 10 of 33 in the series 19 மே 2013

வேடிக்கையாகத் தான் இருக்கிறது. இன்று செல்லப்பா காலமாகி பத்து பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அவரைப் பற்றி நினைப்பவர்கள் – நினைப்பவர்கள் இருக்க மாட்டார்களா என்ன? எட்டு கோடி தமிழரில் அவரிடம் பழகிய அவருக்கு பத்திருபது வயது இளையவர்கள், அந்த தலைமுறையில் அவர் பெயரைக் கேள்விப்பட்டவர்கள் சிலராவது இருக்க மாட்டார்களா என்ன?, இருப்பார்கள் தான் – அவர்கள் முதலில் அவரை விமர்சகராகத் தான் நினைவு கூறுவார்கள். அவர் சுதந்திரப் போராட்ட உணர்வு கொண்டதும் சிறை சென்றதும் கடைசி வரை […]

திருப்புகழில் ராமாயணம்

This entry is part 9 of 33 in the series 19 மே 2013

ஜயலக்ஷ்மி   ”திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்” என்ற இனிமையான பாடலை நாம் நிறையவே கேட்டிருக்கிறோம். ஆம் திருப்புகழைப் பாடினால் வாய் மணக்கும் கேட்டாலோ மனத்தை உருக்கும். காரணம் அவற் றின் சந்தம். பாடுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் கூட அவற்றின் தாளமும் ஓசையும் மிகவும் இனிமை யானவை. முருகனின் புகழ் பாடும் இப் பாடல்களை இயற்றியவர் அருணகிரிநாதர். இன்றைக்குச் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அருணகிரி நாதர் ஒரு நிலையில் வாழ்க்கையில் வெறுப்புற்றுத் […]

‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…

This entry is part 22 of 29 in the series 12 மே 2013

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்     1977-ல் பிறந்த இசை (இயற்பெயர்: ஆ.சத்தியமூர்த்தி) கோவை மாவட்டத்துக்காரர். இவர் ஒரு மருந்தாளுநர். ‘உறுமீன்களற்ற நதி’ இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதில் 63 கவிதைகள் உள்ளன. எளிமை, நல்ல வாசிப்புத்தன்மை, கவனமீர்க்கும் தலைப்புகள், புதிய சிந்தனைகள் ஆகியவை இவர் கவிதை இயல்புகள். சக மனித விமர்சனம், யதார்த்தம், கனவுத்தன்மை, சொல் நேர்த்தி ஆகியவையும் ரசிக்கத் தக்கன.       குழந்தைகள் பற்றிய பதிவு பெரும்பாலும் சோடை போவதில்லை. ‘சௌமி குட்டி சௌமியா […]

ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)

This entry is part 18 of 29 in the series 12 மே 2013

க. சட்டநாதன், தன் மூன்று சிறுகதைத் தொகுதிகளை சில மாதங்கள் முன் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவர் எழுபதுகளிலிருந்து எழுதிவருபவர், யாழ்ப்பாணக்காரர். இது காறும் இவரது சிறுகதைகள் ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ளன எனத் தெரிகிறது. எனக்கு அவர் அனுப்பி வைத்தவை சமீத்திய மூன்று தொகுப்புகள்,  2010-ல் வெளியான முக்கூடல் என்னும் தொகுப்பையும் சேர்த்து. நாம் அறுபதுகளில் முதன் முதலாக சரஸ்வதி பத்திரிகையில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய மௌனிவழிபாடு என்ற கட்டுரை மூலம் தெரிய வந்த ஏ.ஜெ. […]

வனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது

This entry is part 13 of 29 in the series 12 மே 2013

இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது முதலாவது நாவலும் நானும் மட்டுமானது வனசாட்சி ‘இது பற்றியதான நாவல்’ என்ற எந்த முன்மொழிவையும் கொடுக்காத தலைப்பு , வனசாட்சி. என்னவாக இருக்கும் என்ற கேள்வியோடவே நாவலுக்குள் புகுந்தேன் நாவல் இந்திய தமிழர் பிரிட்டிசார் காலத்தில் இலங்கை சென்ற பாடுகள் , அந்தத் தமிழன் இலங்கைத் தமிழனாகவே வாழத் தொடங்கி விட்ட நிர்பந்தம், வாக்குரிமை நிராகரிக்கப் பட்டு , மாறுகின்ற அரசியல் சூழலில் பாமரனின் வாழ்வு அலைவுறும் அவலம், […]