Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • ‘ஜான் மார்டெலி’ன் (Yann Martel) ‘பை’யின் வாழ்வு (Life Of Pi)!

  கனடிய எழுத்தாளரான ஜான் மார்டெல் (Yann Martel) எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘பை’யின் வாழ்வு (Life Of Pi). இந்த நாவல் 2002ஆம் ஆண்டுக்குரிய ‘புக்கர்’ விருதினைப் பெற்றதுடன் பிரான்சின் புக்கர் விருதினை இதன் பிரெஞ்சிய மொழிபெயர்ப்பிற்காகப் பெற்றது. அத்துடன் தென்னாபிரிக்க நாவல் விருது, இலக்கியத்திற்கான ஆசிய/பஸிபிக் அமெரிக்க விருது (2001-2003)எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த நாவல் ஐந்து தடவைகள் பிரித்தானிய பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நான் வாசித்த நாவல்களில் மட்டுமல்ல, இதுவரையில் […]


 • இந்த வார நூலகம்

  இந்த வார நூலகம்

  உயிர்மையின் பிப்ரவரி இதழைக் கண்ணுறும் வேளை கிட்டியது. எஸ். ராமகிருஷ்ணனின் தொடர் கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது. இந்திப் படங்களைப் பற்றி எழுதிவிட்டு, ‘ஏழை படுத்தும் பாடு, தமிழ் திரைப்படத்தைப் பற்றி விரிவாக எழுதி உள்ளார். பயனுள்ள விசயங்கள். இந்தி திலீப் குமாரின் கண்கள், காதல் காட்சிகளில் பேசும் என்று கமலஹாசன் சொன்னதாகத் தகவல். திலீப்குமாரின் கண்கள் பேசினால், நம்மூர் சிவாஜியின் ஒவ்வொரு அங்கங்களுமே பேசுமே! ஊட்டி வரை உறவு பாடல் (ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ) […]


 • அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்

  அள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்

  எண்பதுகளின் பிற்பகுதியில் கொப்பள என்ற ஊரிலிருந்து கதக் என்னும் ஊர்வரைக்கும் கேபிள் புதைக்கும் வேலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். இரண்டு ஊர்களுக்கும் இடையில் லக்குண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. பருத்தியும் சோளமும் விளையும் கரிசல் மண்ணைக் கொண்ட சிற்றூர். ஊருக்கு நடுவில் அழகான ஏரியொன்றும் சமணக்கோவில் ஒன்றும் உண்டு. அதையொட்டித்தான் நாங்கள் எங்களுடைய கூடாரத்தை அமைத்திருந்தோம். பொழுது சாய்ந்தபிறகுதான் வேலையிலிருந்து திரும்புவோம். பிறகு ஒரு குளியல். அதற்கப்புறம் நண்பர்களோடு பேசியபடியே ஒரு நடை. எளிய இரவு உணவு. […]


 • சுஜாதாவின் ” விரும்பி சொன்ன பொய்கள் ” நாவல் விமர்சனம்

  சுஜாதாவின் ” விரும்பி சொன்ன பொய்கள் ” நாவல் விமர்சனம்

  விரும்பி சொன்ன பொய்கள் – என்ன அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல். கதை ராதாகிருஷ்ணன் என்பவன் மதுரைக்கு வரும் தன் முதலாளி மனைவியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறான். சுருக்கமாக அவன் பிளாஸ் பேக் விரிகிறது. இதற்கு முன் சர்க்கஸில் வேலை பார்த்து தான் காதலித்த பெண் மீது வேண்டுமென்றே அம்பு எய்து காயப்படுத்தியதால் ஜெயிலுக்கு போய் திரும்பியவன். அவனது பழைய […]


 • உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்

  எனது எழுத்துக்களை கொலை செய்வதற்குஆயுதங்களோடு எப்போதும் துரத்தி வருகின்றனர். அல்லது தற்கொலை செய்வதற்கான எல்லா சாத்தியங்களையும் திறந்து வைக்கின்றனர்.எலிப்பொறி வைத்து பிடித்துவிட்டால் எழுத்துக்கள் எலிகளாய் செத்துக் கிடக்கும் என நம்புகின்றனர். தீவிர எழுத்தின் இறுதி லட்சியமென்பதே சினிமாவுக்கு கதை பாட்டு எழுதவும்,பிரபல இதழ்களில் பத்தி எழுதவும், வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்று அரட்டை செய்யவும், சொகுசாக உட்கார்ந்து பிளாக்கிலும்,பேஸ்புக்கில் எழுதுவதும் என்பதாகிவிட்ட சூழலில் எழுத்து சந்தர்ப்பவசமாக சிலரது வாழ்வின் இருப்பையே தகர்த்திருக்கிறது. பெரும்பானமை, சிறுபான்மை என்றெல்லாம் அடிப்படைவாதத்திற்கு முகமில்லை […]


 • நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…

  நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…

  பொதுவாக இலக்கிய ஆளுமைகளின் பன்முகங்களில் ஒரு முகம் குறிப்பாக மிகவும் அணுக்கத்தில், கூடவே வாழ்ந்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புலப்படுவதாக இருக்கும். அப்படியொரு அனுபவசாலி,  தான் அறிந்த ஆளுமையைப் பற்றிய விவரங்களை வெளியிடுகிறபோது அதற்கு விசேஷ கவனம் கிடைப்பதில் வியப்பில்லை என்பதோடு கிடைக்கவும் வேண்டும். அந்த ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை கணிப்பதற்கு இது இன்றியமையாத தாகிறது. ஏனெனில் ஒரு ஆளுமையின் புற இயக்கங்கள் அக இயல்புகளின் அடிப்படையிலேயே ஆக்கம் கொள்கின்றன.  அந்தரங்கம் என அவற்றைப் புறந்தள்ளல் சரியாக இருக்காது. […]


 • கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது

  சிபிச்செல்வன் இந்த ஆண்டிற்கான விளக்கு விருது தேவதச்சனுக்கு வழங்கும் விழா மதுரையில் ஜனவரி 28,2012 காலை 10,30 மணியளவில் ஓட்டல் ராம் நிவாஸில் நடைபெற்றது. விளக்கு விருது தேர்வு குழு சார்பில் சிபிச்செல்வன், விழாவில் சிறப்பரையாற்ற எஸ்.ராமகிருஷ்ணன்,விழா ஒருங்கிணைப்பாளர் வெளி ரங்கராஜன் ஆகியோருக்கு நடுவில் விருது பெறும் கவிஞர் தேவதச்சன் மேடையில் அமர்ந்திருக்க பார்வையாளர்கள் அவர்களைச் சுற்றிலும் வட்டமாக அமர்ந்தனர். முதலில் வெளி ரங்கராஜன் விளக்கு விருது குறித்தும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக விருது பெற்றவர்களைப் பற்றியும் […]


 • சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை

  சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை

  இந்த இதழ் முங்காரி ஆசிரியரும், சிற்றிதழ் சங்கங்களின் நிறுவனருமான குன்றம் மு. ராமரத்தினத்தின் புகைப்படத்துடன் வந்திருக்கிறது. எண்பது வயதைக் கடந்த அவர், தன் வீட்டின் முன்னால், ஒரு துடைப்பத்தை வைத்துக் கொண்டு, பெருக்கிக் கொண்டிருக்கிறார். பெருக்குவது என்பது அவருக்கு கை வந்த கலை. சிறு அமைப்பாக இருந்த சிற்றிதழ் சங்கத்தை, ஒரு பேரியக்கமாக மாற்றியதில், அவர் பங்கு மறுக்க முடியாதது. உள்ளே அவரைப் பற்றிய நினைவோட்டங்களும் ( கட்டுரை சுகன்) நமக்கு அவரைப் பற்றிய இன்னொரு பரிமாணத்தைக் […]


 • பழமொழிகளில் நிலையாமை

  பழமொழிகளில் நிலையாமை

  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com உலகிற்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு. அதில் ஒன்று தான் நிலையாமை. எதுவும் இவ்வுலகில் நிலையற்றதாகும். அதனால் தான் தொல்காப்பியர், ‘‘நில்லா உலகம் புல்லிய நெறித்தே’’ என்று குறிப்பிடுகின்றார். வள்ளுவரும், ‘‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத் திவ்வுலகு’’ என்று இவ்வுலகின் சிறப்பினைக் குறளில் தெளிவுறுத்துகின்றார். இவ்வுலகம் நிலையாத் தன்மை உடையதாகும். நிலையாமையை நமது முன்னோர்கள் காலங்காலமாக மக்களுக்கு எடுத்துரைத்து வந்துள்ளமையும் சிந்தனைக்குறியதாகும் நிலையில்லா இவ்வுலகில் […]


 • சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்

  சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்

  ஒரு நிறுவனம்.அதன் அரசியல், பதவி உயர்வுக்கான போட்டி இவற்றை பின்புலமாக கொண்ட நாவல். செம விறுவிறுப்பான எழுத்து. படிக்க ஆரம்பித்த பின் இருந்த வேலைகளை ஒத்தி போட்டு விட்டு முடித்து விட்டு தான் மறு வேலை பார்த்தேன் கதை விக்ரம் என்கிற இளைஞன் இந்தியாவின் பெரும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். சேரும் முதல் நாளே ” என்றாவது ஒரு நாள் எம். டி சீட்டை பிடிக்க வேண்டும்” என்கிற அளவு வேகம் உள்ளவன். எம். பி. […]