Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • 3 இசை விமர்சனம்

  3 இசை விமர்சனம்

  A Life Full Of Love பியானோவின் நோட்ஸுடன் தொடங்கிப்பின் அதே நோட்ஸ்களை வயலின் இசையோடு தொடரும் தீம் ம்யூஸிக், கொஞ்சம் சைனீஸ் டச்சுடன் ஒலிக்கத்தொடங்கி , தொடர்ந்தும் நம்மை கூடவே அழைத்துச்செல்கிறது. ரஹ்மான் சொல்லுவார் அதிகமா சைனீஸோட இசையில சிந்துபைரவி ராகம் கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்துவாங்கன்னு, அதோட அவங்க இசையின் அடிப்படையும் அதுவாவேதான் இருக்கும், கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க இதுல சிந்துபைரவி டச் இருக்கான்னு. இன்னும் தொடர்ந்தும் கேக்கும்போது எனக்கு யானி’யோட Tribute-ம் , […]


 • பழமொழிகளில் சூழலியல் சிந்தனைகள்

  பழமொழிகளில் சூழலியல் சிந்தனைகள்

  இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதனின் வாழ்வு சுற்றுச் சூழலைப் பொருத்தே அமைகின்றது. மனிதன் சூழலைக் கெடுக்காது இயற்கையுடன் இயைந்து இணைந்து வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால்தான் மனிதன் இவ்வுலகில் மகிழ்வான வாழ்வை வாழ இயலும். நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழலைப் பா பாதுகாத்து நிறைவான வாழ்வை வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்ட நம்முடைய முன்னோர்கள் அத்தகைய நற்சிந்தனைகளைப் பழமொழிகள் வாயிலாகப் பாங்குற மொழிந்துள்ளனர். வீடும் வெயிலும் மண்ணிற்கு அழகு […]


 • ஒரு நாள் மாலை அளவளாவல் – 1

  ஒரு நாள் மாலை அளவளாவல் – 1

  கடந்த 30.4.2011 அன்று வெங்கட் சாமிநாதன்: வாதங்களும் விவாதங்களும் என்ற் புத்தக வெளியீட்டை ஒட்டி சென்னை வந்திருந்த வெங்கட் சாமிநாதனை ஒரு நாள் மாலை கே.எஸ் சுப்பிரமணியம் வீட்டில் சந்தித்து அளவளாவியதில் ஒரு பின் மாலை கழிந்தது. கலந்து கொண்டவர்கள் திலீப் குமார், எம்.ராஜேந்திரன், கே. எஸ். சுப்பிரமணியம், எஸ் சாமிநாதன், பின் வெ.சா வின் நெடு நாளைய நண்பர் துரை ராஜ். அந்த அளவளாவலின் ஒரு பகுதியைக் கீழெ காணலாம். திலீப் குமார்: சாமிநாதன், நேற்று […]


 • முத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்கு

  முத்தோடு பவளம் பச்சை… – சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த ஆய்வரங்கு

  ஹெச்.ஜி.ரசூல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்துறையும் கீற்று வெளியீட்டகமும் இணைந்து சூபிஞானி பீர்முகமது அப்பா குறித்த இலக்கிய உயராய்வுபன்னாட்டு இருநாள் ஆய்வரங்கைநெல்லை பல்கலைக்கழக அரங்கில் 2012 ஜனவரி 9 – 10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்தது. துவக்கவிழாவிற்கு தமிழியல்துறைத்தலைவர் பேரா.முனைவர் சு. அழகேசன் தலைமைஏற்றார். பேரா. முனைவர் பே.நடராசன் வரவேற்பு சொல்லிட பண்பாடு ஆய்வாளர் முனைவர் தொ.பரமசிவன் தமிழ்மண்ணில் சூபிய வரலாறு சார்ந்த கருத்தரங்க மைய உரையை நிகழ்த்தினார். முதல் அமர்வுக்கு சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேரா.கா.முகமது […]


 • கிரீடமும் ஆடையும் – இசையின் “சிவாஜிகணேசனின் முத்தங்கள்”

  கிரீடமும் ஆடையும் – இசையின் “சிவாஜிகணேசனின் முத்தங்கள்”

  கவி காளமேகத்தின் பாடல்கள் பகடிக்குப் பேர்போனவை. ஆனால் அக்காலத்தில் அதற்கு சிலேடை என்றும் இரட்டுற மொழிதல் என்றும் வழங்கப்பட்ட்து. அவருடைய பகடியின் மை படியாத எதுவுமே உலகில் இல்லை. பாம்பு, படகு, தென்னை, கடவுள் என மண்மீதுள்ள எல்லாவற்றையும் பாடல்களுக்குள் கொண்டுவந்து வைத்திருக்கிறார். நயமான வரிகளால் நம்பகத்தன்மை மிகுந்த உவமைகளோடு பகடிகளை முன்வைப்பது அவர் பாட்டுமுறை. ஒருமுறை அவர் வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்றதாக ஒரு கதை உண்டு. தரிசனம் செய்துவிட்டு மண்டபத்தில் வந்து அமர்ந்தாராம். அங்கிருந்த ஒரு […]


 • பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு

  பழந்தமிழரின் சூழல் காப்புணர்வு

  முன்னுரை நாம் வாழும் பூமி எண்ணற்ற உயினங்களின் இருப்பிடமாகும். இப்பூமி தோற்றம் பெற்ற நாளிலிருந்து உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தான், மிகப்பெரிய அழிவை சேதத்தை பூமிக்கு ஏற்படுத்தியுள்ளது. சென்ற சில நூற்றாண்டுகளில் தொழிற்புரட்சியின் பெயரால் பூமியின் வளம் பெரிதும் சூறையாடப்பட்டுள்ளது.   பிரபஞ்சத்திலுள்ள 1235 கோள்களில் உயிரினம் வாழ்வதற்கேற்ற கோள் பூமி ஒன்றுதான். கோள்களின் தோற்றம் வயது.உயிர்ப்பு இவற்றைக் கணக்கிட்டு கிரேக்லாக் என்ற அறிஞர் பூமியின் மதிப்பு இந்தியமதிப்பில் 2இலட்சத்து16 ஆயிரம்இலட்சம் கோடி (3000டிரில்லியன் […]


 • “உள்ளம் கொள்ளை போகுதே…” – சு. வேணுகோபால் சிறுகதைத் தொகுதி “வெண்ணிலை”

  “உள்ளம் கொள்ளை போகுதே…” – சு. வேணுகோபால் சிறுகதைத் தொகுதி “வெண்ணிலை”

  எழுத்தாளர் திரு சு. வேணுகோபால் அவர்களுக்கு இந்த வருடத்திய பாரதிய பாஷா பரிஷத் விருது அவரது வெண்ணிலை சிறுகதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஒருவருக்கு, அவரது தகுதியான புத்தகத்திற்கு இது வழங்கப்பட்டுள்ளது. எல்லோரிடமும் அன்போடும், பண்போடும் பழகக் கூடிய இனிய நண்பர் அவர். தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் என் சிறுகதைகளின் மீது, அக்கறை எடுத்துக் கொண்டு எப்படியான கருத்தோட்டம் மிகுமானால் அது இன்னும் தலைநிமிரும் என்பதாக விவரித்து அவர் எழுதிய நீண்ட கடிதம் அவர் […]


 • நானும் எஸ்.ராவும்

  நானும் எஸ்.ராவும்

  இப்போதுபோல பிரபலம் ஆகாத நிலையிலேயே எஸ்.ராமகிருஷ்ணனை நான் அறிவேன். இதற்கும் கிரியா ஊக்கி பால்நிலவன் தான். அப்போதைய இலக்கிய தேடலில் பல, எனக்கு அறிமுகமில்லாத படைப்பாளிகளை அவர் எனக்கு பரிச்சயப் படுத்தினார். அந்த வரிசையில் வந்தவர்தான் எஸ்.ரா. நாற்பதுகளைக் கடந்து ஐம்பதைத் தொட்டுக்கொண்டிருக்கும் வயதில் இருந்த அவரை நான் பார்த்தபோது பெரிதும் சிலாகிக்கவில்லை. நமக்கு எப்போதுமே ஒரு ஜெயகாந் தன் பிம்பம் முன்னேராக ஓடிக்கொண்டிருக்கும். அதன் வழியாகப் பார்க்கும்போது எதுவும் பளிச்செனப் பதியாது. வழுக்கைத் தலையை மறைக்க […]


 • சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்

  சிற்றிதழ் அறிமுகம்: சௌந்தர சுகன்

  சிறகு இரவிச்சந்திரன் ஓவியர் ஆதிமூலத்தின் புகைப்பட அட்டையுடன் வந்திருக்கிறது சுகனின் 296வது இதழ். தஞ்சையிலிருந்து தனியொருவன் முயற்சியாக வந்து கொண்டிருக்கும் இதழ். ஆசிரியர் என்று துணைவியின் பெயர் இருந்தாலும் முழு முயற்சி சுந்தரசரவணன் தான். என்ன பல ஆண்டுகளாக இதழின் பொருட்டே விளிக்கப்படுவதால் அவரும் சுகன் என்றே அழைக்கப்படுகிறார். மற்ற சிற்றிதழ்கள் போலல்லாமல் இது கொஞ்சம் அரசியல் பேசும். ஒரு நிலை எடுத்துக் கொள்ளும். சுகனின் பிடிக்காத பகுதி எனக்கு இது. ஆனால் உரிமை சுகனுக்கே. சிற்றிதழ் […]


 • ஜென் ஒரு புரிதல் – 27

  ஜென் ஒரு புரிதல் – 27

  சத்யானந்தன் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் “ரியோகன்” கவிதைகள் இவை. புற உலகை ஜென் எவ்வாறு காண்கிறது என்பதை “ஒரு நண்பனுக்கு மறுவினை” என்னும் கவிதையில் தெள்ளத் தெளிவாகக் காட்டி இருப்பதைக் காண்கிறோம். பௌத்தத்துக்கும் முந்திய சீன மறை நூலான “ஐ சிங்” பற்றிய இவரது கவிதை இவரது ஆழ்ந்த அறிவுக்கு அடையாளம். ஒரு வானம்பாடியின் கானம் ——————————– ஒரு வானம்பாடியின் கானம் என்னைக் கனவினின்று வெளியே இட்டு வரும் காலை ஒளிரும் ——————————— வசந்தத்தின் முதற் […]