அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)

This entry is part 6 of 26 in the series 9 டிசம்பர் 2012

ஜோதிர்லதா கிரிஜா     28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக்  காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள் எழுதியிருக்கிறார். ராமர் ஓர் அவதார புருஷன் என்றே நானும் நம்புகிறேன். மச்சாவதாரம் தொடங்கி அனைத்து அவதாரங்களும்  சார்ந்த இலக்கியங்கள் இந்தப் புவியில் உயிரினங்களின் தோன்றத் தொடங்கியதிலிருந்தான பரிணாம வளர்ச்சியையே எடுத்துச் சொல்லுகின்றன.  மனிதனாய்ப் பிறக்கும் எவரும் ராமனைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்பதையே […]

பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை

This entry is part 16 of 26 in the series 9 டிசம்பர் 2012

தோப்பில் முகம்மது மீரான் மொழிபெயர்ப்பில் அம்ருதா இதழில் வெளிவந்த கதையைப் படித்தவுடன் இதைப்பற்றி எழுதியே தீரவேண்டும் என்கிற ஒரு உந்துதல். ரோசி என்கிற மணமான பெண்ணைப் பற்றிய கதை. இனோஸ் அவளது கணவன். சுரேஷ் என்கிற மருத்துவன் அவனது பள்ளிக்கால  நண்பன். கதை இவர்கள் மூவரைப் பற்றியது. கதை செக்ஸ் சம்பந்தப்பட்டது என்றாலும், அதை ஒரு மணமான இளம் பெண்ணின் கோணத்தில் அலசியிருப்பதுதான் இந்தக் கதையின் புதுமை. இனோஸ் சுரேஷை வற்புறுத்தி, தான் வசிக்கும் ஊரில், கிளினிக் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39

This entry is part 14 of 26 in the series 9 டிசம்பர் 2012

  நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.   —   உலகில் உயிரினங்கள் தோன்றிய நாள் முதலாக வாழ்வியல் வரலாறும் தொடங்கி விட்டது. காலங்கள் சுழற்சியில் மாறுதல்களும் இருந்து கொண்டே இருக்கின்றன. அதனால்தான் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதனை இலக்கணமாகக் கொண்டுள்ளோம். என்னதான் மாறுதல்கள் வந்தாலும் பல அடிப்படையான விஷயங்கள், இயற்கையைச் சார்ந்து தன் இயல்புடன்  பயணிக்கின்றது. வாழ்வியலின் வரலாறு முழுமையும் எழுதப் புகுந்தால் மகாபாரதத்திற்கு மேல் நீட்சியான படைப்பாகிவிடும். எனவே […]

நினைவுகளின் சுவட்டில் (105)

This entry is part 12 of 26 in the series 9 டிசம்பர் 2012

கொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் […]

காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்

This entry is part 7 of 26 in the series 9 டிசம்பர் 2012

I ஜென் வழி(The Way of Zen)-ஒரு விளக்கம் ஜென் வழியில் மெய்யுணர்வு (realization/enlightenment) அடையும் கருத்தாக்கங்களில், காளை மேய்த்தல் படங்கள் மிகவும் அறிமுகமானவை. காளை என்ற குறியீட்டின் மூலம் மெய்யுணர்வுக்கான அடுத்தடுத்த பத்துக் கட்டங்களை இந்தப் படங்கள் விளக்குகின்றன. காளை என்ற குறியீடு உணர்வுறும் எல்லா உயிர்களின்(sentient beings) ஆதி இயல்பு(primordial nature). அவற்றின் உண்மையான இயல்பு  (True-nature).  உண்மையான இயல்பு தான் புத்த இயல்பு அல்லது புத்த மனம்.( Buddha nature or Buddha […]

‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ

This entry is part 5 of 26 in the series 9 டிசம்பர் 2012

  ”இதென்ன கழைக்கூத்தாடியின் கூச்சல் போலிருக்கிறதே!’’ என்று பிரமித்துவிட்டார் ஒரு நண்பர். யார்? ஸ்ரீ ப.ராமஸ்வாமி அவர்கள்தான். “ஆஹா ஊகூ!” என்ற தலைப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் கட்டுரை அவருக்குப் பிடித்தது; அதன் விறுவிறுப்பும் வேகமும் தொனியும் பிடித்தன. கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை எடுத்து, அதை ஆமோதிக்கும் முறையில், ஒரு சிறு குறிப்புடன், ஒரு தினசரி பத்திரிகையின் இலக்கியப்பகுதியிலும் கூட அவர் எழுதிவிட்டார். கட்டுரை ’சக்தி’ யில் முதன் முதலாக வெளிவந்தபோது, இப்படி அவர் செய்தார். அவருக்கென்ன? […]

கவிஞர் சிற்பியின் சில படைப்புகள்

This entry is part 25 of 31 in the series 2 டிசம்பர் 2012

மஞ்சுளாதேவி கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் அவர்கள் இரு முறை சாகித்யா அகாதமி பரிசு பெற்றவர். அவரின் சமீபத்திய சில நூல்கள் பற்றிய அறிமுகம்  இங்கே: 1. சிற்பி: மெளனம் உடையும் ஒரு மகா கவிதை, ஒரு மகாதரிசனம்” –    நவபாரதி kakகட்டுரைகள்     கவிஞர் சிற்பியின் அனைத்துக் கவிதைத் தொகுப்புகள் குறித்தான நூல் இது. “விமர்சனம் “அல்ல. சிற்பியின் ஒரு நேர்மையான ரசிகனாய் இருந்து நுகர்ந்து திளைத்த கவி அனுபவங்களை அழகாய் பதிவு செய்கிறது.       […]

நினைவுகளின் சுவட்டில்(104)

This entry is part 12 of 31 in the series 2 டிசம்பர் 2012

  புர்லா திரும்பியதும் மறுபடியும் பழைய அன்றாட பாட்டை நடைதான். அலுவலகம், தினசரி பத்திரிகையில் wanted column-ல் எனக்கு என்ன இருக்கு என்ற தேடல். இருந்தால் ஒரு மனு போட வேண்டியது. இதில் ஏதும் சுவாரஸ்யம் இல்லை என்றாலும், இவ்வளவு நெருக்கமாக பழகியவர்களை விட்டுப் பிரிய வேண்டியிருக்கிறதே என்ற ஒரு வருத்தம் ஒரு மூலையில் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு சமயம் இந்த நினைப்பு வந்ததும் சக்கரவர்த்தியைப் பார்க்கப் போய் விடுவேன். மஞ்சு சென்குப்தாவுக்கும் வேறு செக்‌ஷனுக்கு […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -38

This entry is part 11 of 31 in the series 2 டிசம்பர் 2012

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.   சொல்வது எளிது. ஆனால் அதன்படி நடப்பது எளிதல்ல அரிமாசங்கத்தின் திட்ட நோக்கங்கள் அருமையானவைதான். உலக வரலாற்றை நன்கு ஆழப்படித்தவர்களுக்கு இது புதிதாகத் தோன்றாது. மனிதன் தோன்றி லடசக் கணக்கான ஆண்டுகளாகி விட்டன. ஆனால் மொழி தோன்றியது சில ஆயிரவருடங்களுக்கு முன்னர்தான். எழுத்தும், இப்பொழுது நாம் காணும் வடிவில் வந்திருப்பது அதற்குப் பின்னர் தான். ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் சிறந்த சிந்தனையாளர்கள் வாழ்ந்திருக் கின்றனர். அவர்கள் வழி நடத்தலில் […]

நீ நதி போல ஓடிக் கொண்டிரு (ஆசிரியர் :- பாரதி பாஸ்கர்).. ஒரு பார்வை.

This entry is part 9 of 31 in the series 2 டிசம்பர் 2012

நீ நதி போல ஓடிக் கொண்டிரு.. ஒரு பார்வை. நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே.. என்று நதிக்கும் பெண்ணுக்கும் ஒப்புமைப்படுத்தி ஒரு படத்தில் அர்ஜுன் பாடுவார்.  நதிக்குப் பெண் பெயரிடுவதும் நதியை வணங்குவதும் நம் பண்பாடு. நதிக்கரையோரங்களிலேயே நாகரீகங்கள் தழைத்தன. நீரின்றி அமையாது உலகு என பனிக்குடத்திலிருந்து நீர் உடைக்கும் குடம் வரை நம் வாழ்வு நீரோடு சம்பந்தப்பட்டது. மேகத்திலிருந்து மழையாய், அருவியாய், ஏரியாய், நதியாய், காட்டாறாய், கால்வாயாய், வாய்க்காலாய், குளமாய், குட்டையாய், […]