ரா. பிரேம்குமார்
முனைவர் பட்ட ஆய்வாளர்
இந்திய மொழிகள் மற்றும்
ஒப்பிலக்கியப் பள்ளி
தமிழ்ப்பல்கலைக் கழகம்
தஞ்சாவு+ர்-10
விலங்கினின்று மாந்தனை வேறுபிரிக்கும் சில கூறுபாடுகளில் தலையாயது மொழி. கல்லாத ஒருவனென்று கற்றவனை வேறுபடுத்திக் காட்டுவதும் மொழியே. தெளிவான மொழி தெளிவான எண்ணங்களின் வெளிப்பாடு. நன்றாக எண்ணத் தெரிந்தவன் நல்ல மொழியைப் பயன்படுத்துகின்றான். இம்மொழியைத் தனது புனைபெயராகக் கொண்ட மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் தமிழியற் பணிகளும் எண்ணற்றவை. பாவாணரின் தமிழாக்கப் பணியினை இன்றைய தலைமுறையினர் அறியும் நோக்கில் அவர் நமக்கு முன்மாதிரியாகத் தமிழியக்கமாகத் திகழ்ந்தவற்றை இவண் அறியலாம்.
இளமையும் கல்வியும்
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரநயினார் கோயில் எனும் சிற்றூரில் பிறந்தார். ஞானமுத்து, பரிG+ரணம் இவர்களின் மகனாக 07.02.1902 அன்று பாவாணர் பிறந்தார். தொடக்கக் கல்வியை வடஆற்காடு மாவட்டம் ஆம்G+ர் மிசௌரி நல்லஞ்சல் லுத்தர் நடுநிலைப்பள்ளியில் பயின்றார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் திருநெல்வேலி பாளையங்கோட்டைத் திருச்சபையினரின் பள்ளியில் பயின்றார். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதம் திருநெல்வேலி தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் பட்டங்களைப் பெற்றார். 1953-ல் சென்னைப்பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கற்பித்தல் பணியோடு கற்றல் ஆராய்தல் நு}லாக்கம் தனித்தமிழ் இயக்கம் எனப் பல பணிகளை இறுதி மூச்சு வரை மேற்கொண்டார்.
தமிழ்க் கழகம்
தமிழைத் தூயதாக வழங்கவும் உலகப் பொது மொழியாக வளர்த்தெடுக்கவும் பாவாணரின் நெடிய குறிக்கோள்களை வென்றெடுக்கப் புதிய இயக்கம் தேவையெனப் பாவாணர் பற்றாளர்கள் கருதினார்கள். 06.10.1968 அன்று பாவாணரைத் தலைவராகக் கொண்டு உலகத் தமிழ்க் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இக்கழகத்தின் செய்திகளைத் தாங்கிய “முதல் மொழி” என்னும் இதழ் வெளிவந்தது. இவ்வமைப்பின் சார்பில் 1969-ல் பறம்புக்குடி 1972-ல் தஞ்சையிலும் மாநில மநாடுகள் நடைபெற்றன. பாவாணரின் குழந்தை உள்ளமும் ஓய்விலா ஆராய்ச்சியும் இவ்வமைப்பைத் தொடர்ந்து கொண்டு செல்ல இயலவில்லை.
தமிழ் வளர்ச்சி
தமிழ் வளர்ச்சி பற்றிய சிந்தனையில் பாவாணர் தமிழர்களைப் பார்த்துக் கடுஞ்சினம் கொண்டார். செந்தமிழைக் காக்கவும் தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயர்வான் என்று கருதினார்.
” தமிழுயரத் தாழ்ந்தான் தமிழன் – அவனே
தமிழுயரத் தானுயர்வான் தான்”
என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாவாணர்
”அடிமைப் பட்டும் மிடிமைப் பட்டும்
அஃறிணை யாயினிர் அனைத்தும் இழந்தீர்
எஞ்சியிருப்பது செஞ்சொல் தமிழே
அதனையேனும் அழியாது காப்பீர்”
என்று கடுங்குரல் கொடுத்தார்.
எங்கும் தமிழ்
பாவாணர் தமிழைத் துறைதோறும் ஆட்சி மொழியாக்க அறிவுறுத்தியவர். தமிழ் நாட்டில் ஆரியத்தை அகற்றித் தமிழை அரியணை ஏற்றக் குரல் கொடுத்ததை
“இது தமிழகமே இதில் காலைத் தமிழே
ஆரிய மென்னும் G+ரிய மொழியை
அகற்றித் தமிழை அரியணை ஏற்றுவீர்.”
என்று குறிப்பிடுவதால் அறியலாம். மேலும் திருக்கோயில் வழிபாட்டில் திருமண நிகழ்வுகளிலும் தமிழே இடம் பெற வேண்டுமெனக்
“கோயில் வழிபாடும் கொண்டாடும் மனமும்
வாயில் மொழி தமிழே வழங்குதல் வேண்டும்”
என்று தமிழை எங்கும் நிலைநாட்டுதல் வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சாதியற்ற சமுதாயம்
பாவாணர் சாதியை மறந்து தமிழனாய் இணைந்து வாழ அழைத்தவர். மறைமலையடிகள் மகன் மறை. திருநாவுக்கரசு மறைமலையடிகள் வரலாற்றில் பாவாணரை அரிசன் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்தார். இதையறிந்த பாவாணர், தம் மடல்வழி மடைத் திருநாவுக்கரசு! நான் அரிசனுமல்லேன் அரசனுமல்லேன் குலமற்ற தமிழன் என்று எச்சரித்து மடல் எழுதினார். மேலும் பாவாணர் (தமிழரெல்லாம் ஓரினமென்று வரலாறு, மொழிநூல், மாந்த நூல் ஆகிய மூன்றும் ஒருங்கே முழங்குகின்றன. வேற்றுமைகளை எல்லாம் விலக்கித் தமிழரையெல்லாம் ஒன்றுபடுத்தி மீண்டும் ஒரு நாட்டினமாக(Nations) அமைப்பதே தக்கதாம்.)1 என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழருள் உயர்சாதியென்று வேறுபாடு காட்டுவோரைப் பார்த்துத்
“தாழ்த்தப்பட்ட தம்மினத்தோரை
உயர்த்தப் பெற்றோர் உயர்த்தல் கடனே”
என்று வேண்டினார். பாவாணர் சாதியை மறந்து தமிழராய் வாழ அறைகூவல் விட்ட அறிஞராய்த் திகழ்ந்ததை இச்சான்றுகளின் வழி அறியலாம் .
தமிழர் ஆட்சி
சாதியற்ற தமிழரை ஒருங்கிணைக்க விரும்பிய பாவாணர் தமிழர் நலம் மேவும் கட்சிகளையும் ஒன்றிணைய வேண்டினார்.
“தமிழ்நாட்டுக்குத் தூய்மையான ஆட்சி மட்டுமின்றி வடமொழியையும் இந்தியையும் எதிர்க்க வல்லமையுள்ள ஆட்சியும் வேண்டும். ஆதலால் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் விரைந்து இணைந்துவிடல் வேண்டும்.”2
என்று இவ்விரு கட்சித் தலைவர்களுக்கும் தனித்தமிழியக்கத் தோழர்களுக்கும் மடலிட்டுள்ளார்.
மேலும் தமிழ்த் தேசியம் ஒருகுடை நிழலில் உருவாக வேண்டும் என்ற கருத்தினைச்
“சீரிய மொழிநூல் செம்மையின் உணர்ந்தே
ஓரினமாகி உலகத் துயர்க
பசியும் பிணியும் பசையும் நீங்கி
இருதிற உடைமை ஆட்சியும்
ஒருகுடை நீழல் ஓங்குக உலகே”
என்று குறிப்பிட்டுள்ளவாறு அறியலாம்.
மேலும் பாவாணர் உலக அரசியலில் பொதுவுடைமை அரசு உருவாகும் என்ற கருத்தினராய்
“எதிர்காலத்தில் தமிழ்நாடும் இந்தியாவும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பொதுவுடைமை ஆட்சியைத்தான் மேற்கொள்ளும். அது வருமுன் நாமே வழிகாட்டித் தமிழை நிலைப்படுத்திவிட வேண்டும். பிந்தினால் ஒன்றும் இயலாது”
என்று பொதுவுடைமைச் சிந்தனையைக் கூறியுள்ளார்.
குறிக்கோள்
பாவாணரின் அன்பிற்குட்பட்ட சேலம் பி.மு. சின்னாண்டார் அவர்களுக்கு 3.2.71 அன்று எழுதிய மடலில் தான் யார்? என்ற கேள்வியை எழுப்பி விடையிறுக்கையில்
“திருவள்ளுவர் பிராமணர் ஏமாற்றை வெளிப்படுத்தத் தமிழ் நாகரிக உயர்வை நாட்டினார். மறைமலையடிகள் தமிழ் தனிமொழியென்று காட்டினார். பெரியார் கல்லாத் தமிழரிடைத் தன்மான உணர்ச்சியை ஊட்டினார். நான் தமிழே திராவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்று நாட்டிப் பிராமணீயம் பேயைத் தமிழ் நாட்டினின்று ஓட்டுவேன்”.
என்று தன் குறிக்கோளைத் தெளிவுபடுத்தினார்.
படைப்புகள்
வ.எண் | நூற்பெயர்கள் | வெளிவந்த ஆண்டு |
கிறித்தவக் கீர்த்தனம் | 1924 | |
சிறுவர் பாடல் திரட்டு | 1925 | |
செந்தமிழ்க் காஞ்சி | 1937 | |
ஒப்பியன் மொழிநூல்-முதற்பகுதி | 1940 | |
இயற்றமிழ் இலக்கணம் | 1940 | |
தமிழன் எப்படிக் கெட்டான் | 1941 | |
திராவிடத்தாய் | 1944 | |
சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் | 1949 | |
உயர்தரக் கட்டுரை இலக்கணம் – I | 1950 | |
உயர்தரக் கட்டுரை இலக்கணம் – II | 1951 |
மேலும் பல நூல்கள் இயற்றியுள்ளார். பாவாணர் 15.01.1981 மறைவிற்குப் பின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி 1985-ல் வெளியிடப்பட்டது. பாவாணரின் தனிப்பாடல்களைத் தொகுத்துப் பாவாணர் பாடல்கள் என்னும் தலைப்பில் இரா. இளங்குமரனார் அவர்கள் 2001-ல் வெளியிட்டார்.
நல்லாசிரியருக்குரிய இலக்கணம் கற்றனைத்தூறும் அறிவுடையவராகத் திகழ்தலாகும். பாவாணர் வயிறுபிழைக்க ஆசிரியப் பணி கிடைத்துவிட்டது என்று எண்ணாமல் கல்லாதது உலகளவு என்ற கவலையுடன் உலக மொழிகளில் 23 மொழிகளில் பேசவும் எழுதவும் புலமை பெற்று அறிவு அங்காப்புடையவராகத் திகழ்ந்தார். இவ்வறிவுப் பின்புலத்தோடு வேர்ச்சொல்லாய்வினை முன்னெடுத்தார். இவர் மேற்கொண்ட சொல்லாராய்ச்சியும் வரலாற்றாராய்ச்சியும் வாழ்வியல் ஆராய்ச்சியும் தமிழே உலக முதன்மை உயர்தனிச் செம்மொழியென்று உலகறியச் செய்தது புலனாகிறது.
துணை நின்றவை
- இரா. இளங்குமரன் – பாவாணர் மடல்கள்
- ஞா. தேவநேயன் – தமிழர் வரலாறு
- இரா. மதிவாணன் – பாவாணர் ஆய்வு நெறி
- திருப்பூர் அரிமா விருதுகள்
- Mahabharatha Epic Retold in 3069 rhyming couplets
- கவிதையும் நானும்
- விளக்கு விருதுக்குரியவராக எழுத்தாளர் கோணங்கி
- நடு
- அரவாணியர் – பிரச்சனைகளும் தீர்வுகளும்
- தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா
- மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவணரின் தமிழாக்கப் பணிகள்
- தொடுவானம் – 35. நடுக்கடலில் சம்பந்தம்
- பாவண்ணன் கவிதைகள்
- ஆசியாவின் முதற் சாதனையாகச் செந்நிறக் கோளைச் சுற்றிவரும் இந்திய விண்ணுளவி மங்கல்யான்
- வாழ்க்கை ஒரு வானவில் – 22
- இரண்டாவது திருமணம்
- சங்க இலக்கியங்களில் கைம்பெண்கள்
- தந்தையானவள் – அத்தியாயம் -2
- ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது: இன்குலாப் நேர்காணல்
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 23 முடிவுக் காட்சி
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-7
- கதை சொல்லி விருதுகள்
- ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்புக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது
- இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 94
- தினம் என் பயணங்கள் -35 ஒரு பயங்கரத் தோற்றம் !
- ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்
- தமிழர் நாகரிகத்தின் வெளிப்பாடு