தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 ஜனவரி 2020

பிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழா

Spread the love

அன்புடையீர்!
கனிவான கைகுவிப்பு
இனிய நல் வாழ்த்துகள்.
பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை
வரும் ஐப்பசி (நவம்பர்) த் திங்கள்
சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.

இதன் தொடர்பாகக்
1
கம்பன் விழா மலர் வெளியிடப்படும்.
அதில் இடம் பெற மரபுக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன .
நிபந்தனைகள் :
தலைப்பு : தங்கள் விருப்பம்
பொருள் : கம்பன் (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம் …)
பேரெல்லை : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது 4 விருத்தங்கள் / 10 வெண்பாக்கள் )
யாப்பு : கூடுமான வரை விருத்தங்கள் (அறுசீர், எண்சீர்…., கலி) ; வெண்பா, கலி வெண்பா, பஃறொடை வெண்பா.
கவிதை வந்து சேர இறுதி நாள் : 30.09.2011.
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :
“kambane kajagam”
பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது பாமினி (bamini.ttf).
கம்பன் கழகத் தலைவர் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்று
கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது.

2
கம்பன் ஆய்வுக் கோவை (ஏறக்குறைய 500 பக்கங்கள்)
இது 2012 இல் தைத் திங்களில் நடைபெறும் தமிழர் புத்தாண்டு, திருவள்ளுவர், பொங்கல் விழாவில்
வெளியிடப்படும்.
நிபந்தனைகள் :
– தலைப்பு : புதிய கோணத்தில் கம்பன் (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம், யாப்பு …)
– கட்டுரைகள் புதிய படைப்பாக, ஆய்வு நோக்கில் இருக்கவேண்டும்.
– அடிக்குறிப்புகள், நூல் பட்டியல்… இன்ன பிறவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
– பேரெல்லை : எட்டுப் பக்கங்களுக்கு மிகாமல்.-
– கட்டுரை வந்து சேர இறுதி நாள் : 30.11.2011
– .அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :
benjaminlebeau@yahoo.fr
– தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மின்னஞ்சல் வழி அறிவிக்கப் பெறுவார்கள்.
அவர்கள், அச்சுக் கூலி, அஞ்சல் செலவுகளுக்காக உரூபா 500/ கட்ட வேண்டி இருக்கும் .
இது பற்றிய விவரம் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும்.
அதன் பிறகு பணம் கட்டினால் போதும்.
எக்காரணம் கொண்டும் இப்பணம் திருப்பித்தர இயலாது.
– பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது பாமினி (bamini.ttf) மட்டுமே!
– பேரா. பெஞ்சமின் லெபோ தலைமையில் குழு ஒன்று
கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது.

இதனை அருள்கூர்ந்து அனைவருக்கும் தெரிவிக்குமாறு பணிவன்புடன்
கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தங்கள் நல்லாதரவை நாடும்

கவிஞர் பாரதிதாசன் பேரா. பெஞ்சமின் லெபோ
தலைவர், பிரான்சு கம்பன் கழகம் செயலர், பிரான்சு கம்பன் கழகம்

Series Navigationஎனது இலக்கிய அனுபவங்கள் – 10 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)விடியல்

Leave a Comment

Archives