ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி – கடைசி நாள் – 15/01/2016

author
0 minutes, 8 seconds Read
This entry is part 2 of 12 in the series 10 ஜனவரி 2016

வணக்கம்,

ப்ரதிலிபியும் அகம் மின்னிதழும் இணைந்து கட்டுரைப்போட்டி ஒன்றினை நடத்தவிருக்கிறோம். அதற்கான அறிவிப்பை திண்ணை  தளத்தில் வெளியிட்டால் மேலும் பலருக்கு அதுபற்றி தெரிய வரும். வாய்ப்பிருந்தால் வெளியிடவும். நன்றி.

ப்ரதிலிபி எழுத்தாளர்களுக்கான சுய இணைய பதிப்பகம் (Self Publishing Platform). தமிழ் மற்றும் பிற இந்திய மொழிகளின் எழுத்துலகில் வாசகர்களையும், பெருகி வரும் படைப்பாளிகளையும்,  தொழில்நுட்பத்தின் துணையோடு ஒரே இடத்தில் இணைப்பதே எங்களின் நோக்கம்.

மேலதிக விவரங்களுக்கு – www.pratilipi.com

அகம் மின்னிதழ் , அகம் மீடியா குழுமத்தில் இருந்து வெளிவரும் மாதாந்திர மின்னிதழ். சமூக வலைத்தளங்களில் பல்வேறு துறைகளை சார்ந்த எழுத்தாளர்களில் நல்ல படைப்புத் திறன் கொண்ட எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை ஊக்கப் படுத்தி வருகிறது.

போட்டி விபரங்கள் :

அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” – பதில் காண முயல்வோம்.

ஆ) கட்டுரைகள் 1500 வார்த்தைகளுக்கு மேலும், 2500 வார்த்தைகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இ) உங்கள் கட்டுரைகளை Unicode வடிவில், MS- Word Document-ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000, இரண்டாம் பரிசு – 10000, மூன்றாம் பரிசு – 5000.

உ) கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் – 15/01/2016.

ஊ) கட்டுரைகளை tamil@pratilipi.com மற்றும் balaji@agamonline.com ஆகிய இரண்டு முகவரிகளுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எ) கட்டுரைகளுடன், உங்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு, உங்கள் புகைப்படம், உங்கள் தொலைபேசி எண் ஆகியவற்றை அனுப்பி வைத்தால், உங்களுக்கான எழுத்தாளர் பக்கத்தை ப்ரதிலிபியின் தளத்தில் உருவாக்க உதவும்.

போட்டித் தேதி முடிவடைந்தவுடன் கட்டுரைகள் பரிசீலக்கப்பட்டு, வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். பரிசு வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தொடர்புக்கு:  சங்கரநாராயணன் – 09789316700; பாலாஜி – 09940288001.

நன்றி.

Attachments area

Preview attachment Event November – scr (1) (1).png

Series Navigation‘பறந்து மறையும் கடல்நாகம்’ – ஏற்புரை13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (7,8)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *