புரிந்து கொள்வோம்

This entry is part 20 of 29 in the series 9 அக்டோபர் 2016

 

உரமற்ற மண்ணில்

துளையற்ற தொட்டியில்

துளசி அழுகும்

********

 

எரியாத மெழுகு

ஒளிராது

*******

 

பூமிக்குத்

தேவையில்லை

பிடிமானம்

*******

 

வேர்களின்

தேடல்கள்

வெளியே

தெரிவதில்லை

********

 

விஷமுள்ள

பாம்புகள்

அழகானவை

*******

 

ஏறவும்

இறங்கவும்

தெரிந்தால்

மட்டும் போதும்

மின் தூக்கிக்கு

******

முட்கள்

கொண்ட பூக்கள்

அழகாய் இருக்கலாம்

ஆபத்தில்லை

 

அமீதாம்மாள்

Series Navigationவண்டுகள் மட்டும்அழகு
author

அமீதாம்மாள்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *